ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Jan 2012  »  அழகிய முன்மாதிரி


 அழகிய முன்மாதிரி


 

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களில் அழகிய கொடைஉள்ளம் கொண்டவர் களாகவும் உண்மையே பேசுபவர் களாகவும் மென்மையான இயல்பை உடையவர்களாகவும்  மிக கண்ணிய மாகப் பழகுபவர்களுமாக இருந்தார்கள்.                           ஹள்ரத் அலிய் (ரலி -திர்மிதி)


      நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அருவருப்பான வர்களாகவோ, அருவருப்பை நாடுபவர்களோ அல்லர். அவர்கள் கூறுவார்கள். உங்களில் சிறந்தவர் உங்களில்குணத்தால் சிறந்தவர்தான்.                               ஹள்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


      நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மக்களில் மிக மிக மென்மையானவர்களாக விளங்கி னார்கள்.  அல்லாஹ்வின் மீது ஆணையாக, குளிர்ந்த காலையில் ஓர் அடிமையோ, ஓர் அடிமைப் பெண்ணோ தண்ணீரைக் கொண்டு வந்தால், அந்த தண்ணீரைப்பெற்று தங்கள் முகத்தையும், கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.  (ஒலூ செய்து கொள்வார்கள்).  எந்த ஒரு மனிதன் கேள்வி கேட்டு வந்தாலும் அவர் சொல்வதைகாது தாழ்த்திக் கேட்பார்கள்.  அவராகத் திரும்பும்வரை அண்ணலார் அவரை விட்டுத் திரும்ப மாட்டார்கள். யாராவது அவர்கள் கரத்தைப் பற்றினால், அவர், அவர்களின் கரத்தை விடும்வரை அண்ணலார் கரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.                  


- ஹளரத் அனஸ் (ரலி)