ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Jan 2012  »  அமுதமொழிகள்


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்

அமுதமொழிகள்பொறுதி என்பது ஒரு மாபெரும் சக்தி.  இதனை எவரும் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே மனிதனைச்சிறந்த இடத்தில் சேர்த்து வைப்பது.


*     ஸப்ரு எனும் பொறுதிஒரு பெரும் பொக்கி­மாகும்.  எனவே ஸப்ரைப்பின்பற்றுங்கள்.  அதுவே வெற்றிக் கம்பம்.


* கெடும்பு, பொய், பெறாமை, நயவஞ்சகம் இவைகள் உள்ள உள்ளமே இருளடைந்தஉள்ளமாகும்.  அந்த உள்ளத்தில் தான்  செய்த்தான் (சாத்தான்) குடிகொண்டுள்ளான்.


*     ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையேநேர்மையாகும்!


*     மனித வாழ்வின் முக்கியம் “நேர்மையே”.


*     தைரியம் மிக முக்கியம். மனிதன் மனிதனாக வாழ்வதில் கவனம் வேண்டும்.


*     நேர்மை இருப்பின் பாபம் வராது. பாபம் செய்தால் மிருகம் தான்.


*     ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்வே அனைத்திற்கும் சாட்சி.  அவர்களையே பின்பற்றி வாழ வேண்டும்.  ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாரிசைக்கண்டு அதன் வழி நடக்க வேண்டும்.  எந்தத்தடை வந்தாலும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியே நடக்கவேண்டும்.  அதுவே (ஈமான்) நல்வழிநடத்தலாகும்.


*     பாதைகளில் முள், ஆணி இருந்தால் எடுத்தெறிய வேண்டும்.


*     பிறரைத் துன்புறுத்துதல் கூடாது. ­ய்கின் சொற்படி கேட்டு அதன்படி (வாழ்தல்) நடத்தல் வேண்டும். குறைகள் ஏற்படின்கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிடல் வேண்டும். கோபதாபங்களைக் குறைத்துக் கொள்ளல் வேண்டும்.


*     எங்களைப் பார்க்க வருவது நேர்வழி பெறவே.  நம் சொன்னபடி நடப்பதற்கேயாகும்.  எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.  சிறுசிறு குறைகளை நினைக்கக் கூடாது.  ஒற்றுமையாக இருந்தால் ஒருவருக் கொருவர் தீங்குசெய்ய நினைக்க முடியாது.  நீங்கள் அனைவரும்அண்ணன் தம்பிகள்,கூடப் பிறந்தவர்களைக் காட்டிலும் மிக்க உறவினர்கள்.


*     அர்வாஹுடைய ஆலத்திலிருந்து வந்து இங்கு திருந்தினோம்.  ஒற்றுமையே மேன்மையாகும்.


*     ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நினைப்பது எல்லாம் ஆராய்ச்சிதான்!. 


*     சூரியகிரகணம், சந்திரகிரகணம் வரும்போது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தாம் தொழுகையைஏற்படுத்தினார்கள்.  சூரிய கிரகணத்தால் சிலசமயங்களில் பூமிக்கு ஆபத்து தான். சிலநேரம் நிலக்குலுக்கல்கள் ஏற்படும். சந்திர கிரகணம் அவ்வளவு பாதிக்காது.


*     ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எங்களைப் போல்மனிதர் தான் எனக் கூறலாகாது. 


*     எதுவும் முடியாமற் போவதே தக்தீராகும்.


*     ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஈடுபட்ட எல்லாப் போர்களிலும்ஸஹாபாக்கள் தங்கள் குடும்பத்தினரைப் பற்றி நினையாது முதன் முதலில் ரசூலுல்லாஹ்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நலத்தையே முதலில் வினவுவர்.  ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்நலத்தை வினவி அறிந்தே மகிழ்வு கொண்டனர். 


*     ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் மாற்றம் செய்தமுனாபிக்கள் இருந்தார்கள்.  பலர்விரட்டப்பட்டார்கள்.  சிலர் கூடவேரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தேவையாய் இருந்து வந்தனர்.


*     எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் அவனது இரத்தத்தில் முனாபிக்குணம்இருந்தால் அது மோச மாகவே முடியும். குறைந்த ஜனங்கள் அதிகமாக ஜனங்களுடன் பெரும்போர்செய்தார்கள். காரணம் நேர்மையே!

 

*     ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்குமாற்றமாக நடப்பது ஈமான் இல்லாதது ஆகும். நாங்கள் சொல்வது எதுவும் புதிதல்ல. நேர்மையாளர்கள் எங்களிடம் பத்துப் போர் இருந்தால் போதும்.


*     தேவையான வி­யங்களை நாம் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வோம்.


*     கோபமாக ஒருவரைத் திட்டும் போது அது எனக்கு வந்து விட்டால் எப்படிஇருக்கும் என ஒருவன் யோசித்தல் வேண்டும். கேபம் வருவது இயற்கையே.  எனினும்கோபித்தல் கூடாது.  உண்மையைச் சொல்லக்கூடாதுஎன பிறிதொருவரைக்கூறக் கூடாது.


*     ­ய்கிடம் முரீதானவர் சந்தேகமோ கோபமோ அடையக் கூடாது.  அப்படி வந்தால் பைஅத் முறிந்து விடும்.  பைஅத் முறிந்து விட்டால் ரசூலுல்லாஹ்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதல் ஆதம்அலைஹிஸ்ஸலாம், ஹக்கு வரையிலான தொடர்புகள் அறுந்துவிடும்.  அவனது நிலைமை அந்தரத்தில் தொங்குவதுபோலாகிவிடும். எம்முடைய பைஅத் முறிந்துபோனவனுக்கு யாருடைய உதவியும் கிடைக்காது

 

*  ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் எல்லோருடனும் மிக்க அன்புடன் இருந்தர்கள்.


*     ஏமாற்றுபவர்கட்குத் தான் அதிக ஜனங்கள் இருக்க வேண்டும் எனநினைப்பார்கள்.  எங்கட்கு அதுதேவையில்லை.  தெளஹீது தான் எங்கட்குமுக்கியம்.  செய்த்தான்கள் எப்படியாவதுஏமாற்றப் பார்ப்பர். பேசுவது அளவோடு இருக்க வேண்டும்.  யாரும் செய்த்தானிடம் போக வேண்டாம்.  முரீதுகளின் குணங்கள் சரியாக இருக்கவேண்டும்.  எல்லாம் அளவோடு இருக்கவேண்டும்.  அளவுக்கு மீறினால் அமிர்தமும்நஞ்சாகும்.


*     நேர்மை எங்கு இல்லையோ அங்கு நானில்லை.  ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்வாழ்க்கையே நேர்மையாகும்.


*     பொறாமை தன்னையே கெடுத்து விடும். செய்த்தான் வெளிவரும் போது மனிதன் கெட்டு விடுவான்.  செய்த்தான் வரத்தான் செய்யும். அதை உள்ளேயேஅறுத்துவிட வேண்டும்.


*     தேவையில்லாத கோபம், பொறாமை வைத்துக் கொள்ளக் கூடாது.  மனம் துப்புரவாக இருந்தால் அவனுக்கு என்னவந்தாலும் துப்புரவானவனாகவே இருப்பான். நன்றாக சிந்தித்துச் செயல்படுங்கள். நேர்மை இல்லாத இடத்தில் அண்டிடல் வேண்டாம்.


*     வியாபாரத்தில் நுட்பம் இருக்க வேண்டும்.  பெரும் பொய் இருக்கக் கூடாது.  வியாபாரம் லாபம் இருக்கும் படியாக செய்தல்வேண்டும் அதற்காக அநியாயமாகச் செய்தல்கூடாது.  மனநிலைகளை திருத்திக் கொண்டால்எப்போதும் நன்றாக  இருக்கலாம்.  தெளபா செய்வதாக இருந்தால், தான் செய்தகுற்றத்தை  எண்ணி அழுது வருந்தி தெளபாகேட்க வேண்டும். பொருத்தக்கேடான சப்தங்களில் முதன்மையானது கழுதையின் சப்தம்.


*     ஸலவாத் கூறும் முஸ்லிம் களையே அல்லாஹ் காப்பாற்றுவான்.


    உடலில் தண்ணீர் இல்லா விட்டால் தூக்கம் வரும்;  உடலில் க்ஷிeழிமி அதிகமானால் தண்ணீர்குடிக்க வேண்டும்.

 

- தொகுப்பு : மர்ஹூம், ஆஷிக், சூபி M.A,  அலியார் B.A, திண்டுக்கல்.