ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Jan 2012  »  அகிலத்திற்கோர் அருட்பிழம்பபே!


அகிலத்திற்கோர் அருட்பிழம்பபே!அவர்கள் அல்லாஹ்வின் சிருஷ்டிகளில் மிக வரிசையானவர்களும் அழிவின்துறையிலிருந்து அந்தச் சிருஷ்டிகளைப் பாதுகாக்கிறவர்களுமான தெரிந்தெடுக்கப்பட்ட  முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.


      அவர்கள் தான் (அவர்களின்ஹகீகத் ) மேலே கூறிய ஒளியாகும். அந்த ஒளியின் அந்தரங்கம் எல்லாவற்றின் ஜீவனாகவும் அதன்வெளியரங்கம் அவற்றின் சிறப்பாகவும் செல்வங்கொண்டுள்ள வெற்றியாகவும் இருக்கும்.


      எல்லா வேளைகளிலும்அவர்களினின்றுமுள்ள அலங்காரங்களைப் பார்த்தவனாகவே இருக்கிறேன்.  அந்த எனது பார்வையில் எனது ஆத்மாவிற்கு ஆகாரமும்என் வியாதிக்குச் சுகமுமிருக்கின்றன.


      அவர்கள் அல்லாவின்பரிசுத்த சந்நிதானத்தின் மயிலாகவும் அகிலத்தோர் யாவருக்கும் திருவருட் பிழம்பாகவுமிருக்கிறார்கள்.  அவர்கள் வருகைக்குப் பின் முன் இருந்த சிரமங்களும்சுமைகளும் இல்லாமற் போயின.


      பெருமானார் அவர்களே!சிரித்தவர்களாய் “யாஸீன்”  எனும் தங்கள் பெயர்கொண்டுஎன்னை அழைத்தீர்கள். மிக அபூர்வ செல்வங்களிலிருந்து எனக்குச் செல்வத்தை யருளுனீர்கள்.


      எனக்கு ஆதாரமானவர்களே!கலப்பற்ற உகப்பினால் எனது ரூஹையே தங்களுக்கு அர்ப்பணஞ் செய்கிறேன்.  மிக மகத்தான தங்களின் உபகாரத்தால் நொம்பலங்களிலிருந்துஎன்னை இரட்சியுங்கள்.


      எனது உதவியாளரே!நான் துயர்ந்துள்ள மிகப்பெரிய எனது முன்மாதிரியே! விசாலமான செல்வங்களையுடைய எனது இறைவன்தங்கள் மீது கருணை கூர்ந்து சாந்தி, ஈடேற்ற மருள்வானாக.


      தங்கள் வீட்டுக்குரியவர்களானஅஹ்லபைத்துக்கள் மீதும் ஸஹாபாக்கள் மீதும் ஈகை, கொடையையுடைய தங்கள் ஜோதியின் அனந்தரக் காரர்களான திரு ஞான அறிஞர்கள் மீதும்உண்டாவதாக.


சங்கைமிகு குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின் கலிமா விருட்சக் கனிந்த கனி நூலிலிருந்து