ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Jan 2012  »  வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..


வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..

 

தொடர்....  தொடர் எண்-20


 

    வஸீலா மூன்று வகைப்படும். உதாரணத்திற்கு அவ்வகைகளை அடியில் காண்க.


      “ஆண்டவா! யஸய்யிதுஅப்துல் காதிறு ஜீலானி (றலி) அவர்கள் பொருட்டால் என் பிணியை நீயே நீக்குவாயாக”  என  எல்லாம்வல்ல இறைவனிடம் இறைஞ்சி வேண்டுவது ஒரு வகை.


      “யா முஹிய்யுத்தீன்!முஹிய்யுத்தீன் ஆண்டவர்களே !  என் பிணி தீரநாயனிடம் பிரார்த்தனை புரிவீர்களாக!” என்று விண்ணப்பித்துக் கொள்வது இன்னொரு வகை,


      யா முஹிய்யுத்தீன்!யா கெளதல் அஃளம்! (கெளதுல் அஃளம், முஹய்யுத்தீன்ஆண்டவர்களே !) தாங்கள் அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும், அவனில்நின்றும் தத்துவத்தைப் பெற்றவர்களாயும் இருக்கின்றீர்கள்.      ஆனபடியால், தாங்களன்றிஎனக்கு வேறு  கதியில்லை. என் பிணியைத் தாங்களேநிவர்த்திக்க வேண்டும் என்று  நேரடியாக வேண்டுதல்செய்வது மற்றெரு வகை.


      “இவ்வாறாக மூன்றுவிதமாகக் கேட்பதுவும் ஆகும். இந்த மூன்றும் ஒன்றுதான் என்பதாக இமாம், முஜ்த்தஹிது , தகிய்யுத்தீன்  ஸுபுக்கீ, ஷாபிஇய்யி (றஹ்)அவர்கள் ஷிபா உஸ் ஸிகாம், 134 -வதுபக்கத்தில் வரைந்துள்ளார்கள்.    


      “அன்பியா,அவுலியாக்கள் ஆண்டவனது அஸ்மா, ஸிபாத்துகள்வெளியாகும் மளுஹர்கள். ஆண்டவன் அளித்திருக்கக்கூடிய தத்துவத்தை வெளியாக்கித் தரவல்லவர்கள் என்னும் எண்ணத்துடன் நேரடியாக அன்னவர்கள் பால் நமது தேவைகளைக்கேட்கலாம். ஆண்டவனும் அன்னவர்களுக்கு அத்தகைய சக்தியைக் கொடுத்துள்ளான்” என்பதாகமதராஸ் முப்த்தி, கவர்ன்மெண்டு காஜீ,  அல்ஹாஜ் முஹம்மது ஹபீபுல்லாஹ்ஸாஹிபு அவர்களும் மற்றும் பல உலமாக்களும், முஃப்திகளும்பத்வாக் கொடுத்துள்ளார்கள்.


      இங்ஙனமிருக்க  இறைவனுக்குப் பயப்படுவதையும், அவனுக்கு வழிபடுவ தையும் பற்றிப்பிடித்துக்கொள்வீர்!


      அல்லாஹ்வைத் தவிர்த்து யாரிடமும் பயமோ ஆதரவோ கொள்ளாதீர்!சர்வதேவைகளையும் அல்லாஹ்வின்பால் ஒப்படைத்து, அவனிடமே நம்பிக்கை கொள்வீராக!” என்பதாகயஸய்யிதுனா முஹிய்யுத்தீன் அப்துல் காதிறு ஜிலானி (றலி) அவர்கள் தங்களின்மெளத்தின் போது தங்களது மகனார் யஸய்யிது அப்துல் வஹ்ஹாபு (ரலி)  அவர்களுக்குச் செய்த வஸிய்யத்தை  எடுத்துக்காட்டிஅன்பியா அவுலியாக்கள் பால்உதவி தேடுதல் கூடாதெனக் கூறுகின்றனர்.


      இதற்கு ‘இஸ்த்தி ஆனத் - ஹகீகீ என்று பெயர். குர்ஆன், ஹதீது கொண்டு, ‘இஸ்த்திஆனத் - மஜாஸி ’ஆகுமான காரியமே என்பதை ஹள்ரத் கெளதுல் அஃளம் (றலி) அவர்கள்  அறிந்தே இருக்கின்றார்கள். மக்கள் அவர்கள்பால்உதவி தேடியதையும் தேடுவதையும் மவுத்திற்குப் பிறகு தேடப் போவதையும் அவர்கள்தெரிந்தே இருக்கிறார்கள், ஆகையால் இதை அவர்கள்விலக்கவுமில்லை. எத்தகைய தேவைகளை மக்கள் அவர்களிடம் தேடினார்கள்? அவற்றை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றிக் கொடுத்தார்கள்? எனும் விபரங்கள் அவர்களது சரித்திரங்களில் கூறப்பெற்றிருக்கின்றன.


      அவர்கள் இரட்சிப்பதில் வலுப்பமானவர்கள். ஆண்டவன் அவர்களுக்குஇரட்சித்து உதவி செய்யக்கூடிய தத்துவத்தைக் கொடுத்துள்ளான்.


      ஷெய்குனா குத்புல் அக்த்தாபு, கெளதுள் ஸமதானீ, மஹ்பூபு ஸுபுஹானீ,முஹய்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி (றலி) அவர்கள் பின்வருமாறுகூறி இருப்பதையும் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்த்து உண்மையை உணருங்கள்!


(இஸ்மீ - க - இஸ்மில் அஃளம்)


“(நாட்டதேட்டங்களை நிறைவேற்றிவைப்பதில்) எனது திருநாமம்,வலுப்பமான ஆண்டவனது (இஸ்முல் அஃளம்) தெய்வீகத்திருநாமத்தைப்போன்றுள்ளது”  என்பதுஅவர்களுடைய பொன்மொழி. இவ்விபரம், ஆதாரமான,பிரபல்யமிக்க ‘மனாகிபு’ கிரந்தங்களி லெல்லாம் காணக்கிடக்கின்றது.


      ஹைதராபாத்தின் முற்கால முஃப்தி மெளலானா மெளலவி முஹம்மதுஸயீதுகான்   சாஹிபு அவர்களும் இதுசம்பந்தமாய் கொடுத்துள்ள ஃபத்வாவிலும் இதுபற்றி விளக்கப் படுத்தியுள்ளார்கள்.


      மேலும் இமாம், அப்துல்லாஹ் யாபியீ யமனீ (றஹ்) அவர்களது ‘குலாஸத்துல்மபாகிர்’ எனும் கிதாபில் ஸைய்யிதுனா, ஸுல்த்தானுல் அவுலியா,யஸய்யிது முஹிய்யுத்தீன் ஷைகு அப்துல் காதிரு ஜீலானி (றலி)  அவர்கள் சொல்ல நான் கேட்டேனென்று ய­ய்கு உமருல் பஸ்ஸார்(றலி) அவர்களைத் தொட்டும்  ரிவாயத்துஅறிவிக்கப்பட்டுள்ளது. என்னவெனில் ;-


      “எவனொருவன், ஒரு முஸீபத்தில் சங்கடத்தில் அகப்பட்டுக் கிடக்கும் போது அவன்என்னைக் கொண்டு ரட்சிப்புத் தேடுவானாயின் அவனை விட்டும் அந்த முஸீபத்தை, சங்கடத்தை நீக்கப்படும்.


       மேலும், யாராவதுவருத்தத்தில் அகப்பட நேர்ந்தால் என்னைக் கொண்டு ரட்சிப்புத் தேடட்டும்.அவனைவிட்டும் அந்த வருத்தத்தை நீக்கப்படும். இன்னும், யாராவதுஒரு (ஹாஜத்து) நாட்டத்தை நாடி அல்லாஹுதஆலா அளவில் என்னைக் கொண்டு வஸீலா, சிபாரிசு தேடுவானாகில் அந்த ஹாஜத்தை அவனுக்கு நிறைவேற்றிக்கொடுக்கப்படும். மேலும் எவரொருவர் இரண்டு ரக்அத்து, ஒவ்வொருரக்அத்திலும்ஸூரத்து பாத்திஹாவுக்குப் பிறகு ஸூரத்து இக்லாஸ்(குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவை )11 விடுத்தம் ஓதி தொழுது  ஸலாம் கொடுத்தபிறகு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவுகூர்ந்து அவர்கள் பேரில்ஸலவாத்தும் ஸலாமும் சொல்லியதற் கப்பால், என்னுடைய நாமத்தை உச்சரித்த வண்ணம்,தனது நாட்டத்தையும் நினைவு கொண்டவனாக, இராக்குதேசத்தளவில் 11 எட்டு எடுத்து வைத்தானாகில் அந்த ஹாஜத்தை நிறைவேற்றிக்கொடுக்கப்படும் என்பதே.


      எவரொருவர் நம்மை உகந்து நமது இடத்திற்கு வருகிறாரோ அவர்நாயகத்தனம் பெற்ற நாதாக்களுடைய கோட்டைக்குள் புகுந்து நம்முடைய கார்மானத்திலாகிமிகுதியான சம்பத்தைப் பெற்றுக் கொள்வார்.


      “என்னுடைய முரீதுக்கு எவ்விதமான பயங்கரமும் வந்தணுகாமல், நான் அவனைஅவனுடைய கருமங்களில் எந்த விதமான தீங்குகள் பலாய் முஸீபத்துகள் வராமல்பாதுகாத்துக் கொள்வேன்.”   


      “என்னுடைய முரீதே ! உனக்கு நன்மாராயம் உண்டாவதாக! உன்னுடைய தேவைகள் அனைத்தையும் உனக்கு நிறைவேற்றித்தருவதன் பேரில் உனக்குச்சோபனம்! யாதொரு கருமத்தைப் பற்றியாவது நீ வியாகூலமடைந்து துக்கித்தவனாக இருப்பாயானால், அவ்வேளையில்நான் எனது ஹிம்மத் எனும் துணிச்சல் கொண்டு உனக்கு உதவி செய்து நான் உன்னைரட்சிப்பேன். ”என்னுடைய முரீதே ! என்னைப் பற்றிப் பிடித்துக்கொள்! என்னைவிசுவாசித் தவனாக இருந்து கொள் ! அப்படியானால் நான் உன்னை இவ்வுலகிலும்மறுவுலகிலும் காப்பாற்றுவேன்“.


      “என்னுடைய முரீது அஞ்சி நடுங்கும் வேளையில் அவனது அச்சத்தை நீக்கிவைக்கும் பாதுகாவலனாக நான் இருக்கிறேன். எல்லா விதமான பித்னாச் சோதனைகளிலிருந்தும், பொல்லாங்குகளிலிருந்தும் நான் அவனைப் பேணி பாதுகாத்துக் கொள்வேன்”.


      “என்னுடைய முரீது கிழக்கிலோ, மேற்கிலோ உள்ள எந்த ஊரிலிருப்பினும் அவனதுஅழைப்பிற்கு நான் விரைந்து சென்று உடனே அவனை இரட்சிப்பேன்”.


      “எத்தகைய கஷ்டத்திலும், பயத்திலும் நீ என்னிடம் உதவி தேடு. எல்லாக்காரியங்களிலும் நான் உனக்கு உதவி புரிந்து இரட்சிக்க எனது ஹிக்மத்துடன் ஆஜராவேன்”.


      “யாருக்காவது யாதொரு வருத்தம் வியாகூலம் உண்டாயிருக்குமாயின், அவர்களைவிட்டும் அந்தத் துன்பம் துயர வியாகூலங்களை நான் நிவர்த்தி செய்து கொடுத்துஅவர்களுக்கு  இரட்சிப்புக் கொடுக்கும்உதவியாகவும், கிருபையாகவும் ஆகி இருக்கிறேன். ஆதலால்,எனது செங்கோலைக் குறித்துக் கட்டியம் கூறுதலெனும் சங்க நாதம்கிழக்கு, மேற்கு எப்பகுதிகளிலும் ஒலித்துக் கொண்டேஇருக்கின்றது” “என்னுடைய முரீது உதயகிரியிலோ அல்லது அஸ்தகிரியிலோ அல்லது ஆழியசமுத்திரத்தின் அடிவாரத்திலிறங்கி நின்றோ ஆகாயத்தின் உச்சியில் நின்றோ, எந்நிலையில் என்னிடம் உதவி அபயம் தேடி அழைத்தாலும் உடனே நான் அவனைக் காத்து இரட்சிப்பேன். என்னைஎதிர்த்து வழக்காடும் அத்தனை பேர்களையும் சம்கரித்துத் தீர்ப்புச் செய்யும் கூரியவாளாக நானிருக்கின்றேன்”.


      “இப்போது சொன்ன சொற்களெல்லாம் பெருமையை நாடி நான் சொல்லவில்லை.ஆண்டவனிட மிருந்து அவ்வாறு சொல்லும் படி வந்த உத்திரவின் பிரகாரம் தான் நான்சொன்னேன். ஏனெனில்,ஜனங்கள் எனது ஹகீக்கத்தை அறிவதற்காகவே”.


      “அவ்வாறான வார்த்தைகள் எதையும்,இறை சமூகத்திலிருந்து, நீர் சொல்லும் - அஞ்சவேண்டாம். விலாயத்தினுடைய உயர்ந்த தனிப் பெரும் அந்தஸ்தில் நீர் நம்முடைய வலியாகஇருக்கிறீர்  என்னும் உத்திரவுவந்தேயல்லாது நான் சொல்லவில்லை“.


      ஹள்ரத் கெளதுல் அஃளம் (றலி) அவர்கள் இவ்வாறு வாக்குறுதிசெய்திருக்கின்றார்கள். சொன்னதற் கொப்ப செயலிலும் செய்து காட்டியுள்ளார்கள் ; செய்து கொண்டவாக்குகள் ‘புயூளாத்துர் ரப்பானிய்யா’ போன்ற நூற்களில்  காணப்படுகின்றன.


                  .(தொடரும்)