ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Jan 2012  »  நீதி!


நீதி!

 

- அதிரை அருட்கவி தாஹா மதனீ

 

நற்குணங்கள் அனைத்தினுக்கும் நன்மைதரும் அடக்கமெனும்

பொற்குணத்தை அடிப்படையாய்ப் புகன்றநபி நாயகமே!

 

    நபிமணி அவர்களின் ஒவ்வொரு சொல்லும் தேன்துளிகள்! இனிக்கும் மருந்தாகிச்சிறக்கும்.  “இறைவன் மீது ஆணையாக அவன் இறை நம்பிக்கைஇல்லாதவன்” என்று அண்ணலார் மும்முறை கூறினார்கள். “யார் அவர்?” என்று வினவப்பட்டது.  “எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப்பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!” என்றார்கள். பக்கத்து வீட்டுக்காரர் பகைவரைப்போல நடந்து கொள்ளும் காலம் இன்று.  அது துன்பத்தை விளைவிக்கும்.  அப்படி நடப்பவர் இறையருளைப் பெற முடியாது.  சிறுபொருளாக இருந்தாலும் அண்டை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும்.  பெண்களுக்கு உள்ள கருத்து சிறியபொருளை அனுப்பக்கூடாது பெரிதாக இருந்தால்தான் அனுப்பலாம் என்று. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதுதவறு - சிறிய பொருளாயினும் அனுப்புங்கள். அவ்வாறே அவர்கள் சிறியபொருளைத் தந்தாலும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள்.  இஃது அன்பை வளர்க்கும் செயல்.    “.... மனிதர்கள் நீதியைக் கொண்டு நிலைத்திருப்பதற்காகஅவர்களுடன் வேதத்தையும் (நீதியின்) தராசையும் நாம் இறக்கிவைத்தோம்.” (57 :25) திருக்குர்ஆன்கூறுகிறது. தராசு நீதியைக்  குறிக்கும் ஒருசின்னம்.பஞ்சை வைத்தாலும், தவிட்டை, பொன்னை வைத்தாலும்   அது வேற்றுமைகாட்டுவதில்லை.    எடையைக் காட்டும்.  இதை மக்கள் புரிந்து கொள்ள வசதியாக, எல்லா நபிமார்களையும் நீதி யயன்னும் தராசு கொண்டுஅனுப்பியுள்ளோம்”என இறைவன் கூறுகின்றான்.


      “எவர் ஓர் அணுவளவுநன்மை செய்தாலும், அவர் அத(ன்பய)னைக்கண்டு கொள்வார், எவர் அணுவளவேனும் தீமைசெய்தாலும் அவர் அத(ன்பய)னையும் கண்டு கொள்வார்” (திருக்குர்ஆன் 99 : 7 - 8)


      அதனால்,  மனைவி,மக்கள் முதல் - மனிதர்கள் எல்லோரிடத்திலும் - மற்றும் உயிர்களிடத்தும்நீதியாக நடப்பது சிந்திக்கத் தெரிந்த எல்லா மனிதர்கள் மீதும் கடமையாகும்.  ஒருவனின் உடைமையைப் பறிப்பது ஓர் உயிருக்கு நியாமின்றிஊறு விளைவிப்பது, அநாதைக்குக் கருணை காட்டாதிருப்பது,எளியோரை விரட்டுவது, மக்கள் வாழ்க்கையில் அமைதியானவாழ்வைக் குலைப்பது இவை கொடுமை.  நீதியைக் கொண்டுசமுதாயத்தைக் காப்பது அவசியம் என இஸ்லாம் உறுதிப்பட கூறுகிறது.  நீதி வழங்கும் அரசே மன்னனே கொடியவராய் மாறிவிட்டால்நாடு என்னவாகும்? ஒரு கொடிய மன்னன் சூஃபியிடம் “எந்த அமல் சிறந்தது?” என்று கேட்டான்.  சூஃபி : ‘உன்னைப்பொறுத்தமட்டில் பகலிலும் நீ தூங்குவதே சாலச்சிறந்த வணக்கம்” என்றார்! நீதியோடு நடந்துகொள்ளுங்கள்!