ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Jan 2012  »  ரமளான் - ரபீஉல் அவ்வல்


ரமளான் - ரபீஉல் அவ்வல்


    ரஜப் - ­ஃபான் பிறந்தவுடனேயேரமளான் பற்றிய சிந்தனை முளைத்து விடுவது போல ஸஃபர் மாதம் மலர்ந்ததுமேரபீவுல்அவ்வல் பற்றிய சிந்தனை முஃமின்களின் உள்ளங்களில் கிளைவிடத் தொடங்கிவிடுகிறது. அதன் அடையாளமாகபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த பொன்னாளான மீலாது விழா பற்றியஅறிவிப்புகள் வெளிவரத் தொடங்கி விடுகின்றன!


      வழக்கம்போல இலங்கை வெலிகமாவில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்இலங்கை முழுவதும் பயன்பெறும் வண்ணம் நடத்தும் மீலாது கந்தூரி விழா களைகட்டத்தொடங்கிவிட்டது. சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் பல ஆண்டுகளுக்குமுன் “பலலட்சங்கள் செலவு செய்தும் எங்கள் பாட்டனார் அவர்களின் புனித மீலாதைக்கொண்டாடுவோம்” என்றருளிய அந்த வாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம் இப்போது ஆண்டு தோறும்விழா எடுத்துக் கொண்டாடி வருகிறார்கள். இந்த எழுச்சி எல்லா முஸ்லிம்களின் இதயத்திலும் எழ வேண்டும், ஏனெனில்,மீலாது விழாக்களைக் கூட்டி பெருமானார்      அவர்களின் வரலாறை - அவர்களின் அருமைபெருமைகளைப் பேசுவது குர்ஆன் ­ரீஃப் ஓதுவது போன்ற ஒரு புனிதஅமல்தான் என்பதை சற்று ஆழமாகச் சிந்தித்தால் விளங்கும்.


      ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.  பெருமானார் குணங்கள் குர்ஆனாகவே இருந்தது என்று. இப்போது சொல்லுங்கள்! பெருமானாரின் நற்குணங்கள் - பொற் குணங்களைப் பேசுவதுகுர்ஆனை ஓதுவதற்கு நிகரல்லவா? குர்ஆன் வரிவடிவம் என்றால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குர்ஆனின் செயல் வடிவமாகத் திகழ்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால்குர்ஆனின் இன்னொரு வடிவம்தான் பெருமானாரின் வாழ்க்கையை விளக்கும் ஹதீதுகள். பாலிலிருந்து மோர் - வெண்ணை- நெய் - பிறந்ததுபோல!


      எல்லாக் காலத்திலும் குர்ஆன் ஓதினாலும் ரமளான் மாதத்தில் குர்ஆன்அதிகமதிகம் ஓதுவது போல,எல்லாக் காலத்திலும் பெருமானாரின் வாழ்வோடு ஒன்றியிருந்தாலும்ரபீஉல்அவ்வலில் அதிகமதிகம் அவர்களை நெருங்க வேண்டும். சிந்திக்க வேண்டும்.  அவர்களின் அருங்குணங்களைப்பேசி அனுபவிக்கவேண்டும். ஆனந்தம் கொள்ள வேண்டும்.


       அண்ணலார் அருளினார்கள்.“குர்ஆன் ­ரீப் - எனது வாழ்வு இரண்டையும் பற்றிக்கொண்டால் வழிதவறமாட்டீர்கள்”என! ஆனால், இன்று சிலர்குர்ஆனைப் பற்றிக் கொண்டு கோமான் நபிகளை விட்டுவிட்டார்கள். அவர்கள்வழிதவறியவர்களல்லவா?