ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012  »  மர்ஜூக் நானா


மர்ஜூக் நானா


2011ஆண்டு டிசம்பர் இதழில் நமது கண்மணி ஷெ­ய்கு நாயகம் அவர்களின் 76 ஆவது உதயதின விழா சொற்பொழிவுகள் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் நான் பேசிய பேச்சின் விபரம் தரப்பட்டுள்ளது.  அதில் மர்ஜுக் நானா என்ற தலைப்பில் ஒரு செய்தி பக்கங்கள் 24,25 ஆகியவற்றில் வந்துள்ளது.  அதில் நமது கண்மணி ஷெ­ய்கு நாயகம் அவர்கள் மர்ஜுக் நானா அவர்களைப் பற்றி கண்ட கனவு செய்தி வெளிவந்துள்ளது.  அந்தக் கனவுச்செய்தியை நான் ஞாபகமறதியாக தவறாகச் சொல்லி விட்டேன்.  நமது அருமை ய­ய்கு நாயகம் அவர்கள் போனில் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினார்கள்.  அப்போது தான் எனக்கு அது நினைவுக்கு வந்தது.  ஆகையால் மர்ஜுக் நானா வைப்பற்றியுள்ள செய்தியை மட்டும் மீண்டும் இப்போது தெளிவாக எழுதியுள்ளேன்.

வாப்பாநாயகமவர்களின் திரு இல்லத்தில்  வாப்பா நாயகமவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது மர்ஜுக் நானாவைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள்.  அவர்களது வீர பராக்கிரமங்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தால் அந்தப் பேச்சு மணிக்கணக்காக நீடிக்கும்.  நமது தந்தை நாயகம் யாஸீன் மெளலானா (ரலி) அவர்கள், மர்ஜுக் நானாவை, “மகன்மகன் என்று தான் அழைப்பார்கள்.  மிக்க தைரியசாலி.  அவர் தெருவில் வருகிறார் என்றால், அனைவரும் அச்சமுறுவார்கள்.  எந்தச் சண்டையாக இருந்தாலும் தனியாகச் சமாளித்துவிடுவார்.  இத்தனைக்கும் அவர் எந்த  வித்தையையும் கற்றவர் இல்லை.  மன தைரியத்தைக் கொண்டுதான் வீரராகத் திகழ்ந்தார்.  அவர் தந்தை நாயகம் அவர்கள் மறைந்த சிலகாலம் கழித்துநமது வாப்பா நாயகமவர்களைப் பார்க்க வந்திருந்தார், அவரிடம் நமது வாப்பா நாயகமவர்கள், “என்ன, மர்ஜுக் நானா! எங்களை யெல்லாம் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார்களாம்.  அதற்கு மர்ஜுக் நானாவோ, “மாணிக்கமே; அப்படிச் சொல்லாதீர்கள்.  இதைப் பாருங்கள்என் மணிபர்ஸில், நமது யாஸீன் நாயகம் அவர்களின் திருப்படமும் - தங்களின் திருப்படமும் இருக்கின்றன.  இவை இரண்டையும் பார்க்காமல் தினமும் எனது பொழுதைத்தொடங்குவதில்லை என்பாராம்.

இந்தச்சம்பவத்தைக் குறிப்பிட்ட நமது வாப்பா நாயகமவர்கள், “சிராஜ், இதுதான் அவரது இபாதத் எனக் கூறிஅருளினார்கள்.  பார்த்தீர்காள? அவர், தொழுவது, ஓதுவது என அதிகம்சிரமப்படவில்லை.  ஊருக்குள் சண்டியராக வாழ்ந்தவர்.  எவ்வளவு சுலபமாக நற்பலனைப் பெற்று விட்டார் பாருங்கள்........நமது வாப்பா நாயகமவர்களின் மீது கொண்ட நம்பிக்கை தான் காரணம். அப்படிப்பட்ட பிடிப்பான நம்பிக்கைக்குக்கிடைத்த நற்கூலி என்ன தெரியுமா?

மர்ஜுக்நானா மறைந்த சில காலம் கழித்து நமது வாப்பா நாயகமவர்கள் கனவு ஒன்று கண்டார்களாம்.  அந்தக் கனவில், நமது கண்மணி வாப்பா நாயகம் வீட்டில் வழக்கம் போல் அமர்ந்திருக்கிறார்களாம்.  அப்போது அங்கு மர்ஜுக் நானா வருகிறாராம்.  வந்தவர் நமது அருமை வாப்பா நாயகம் அவர்களைப் பார்த்து.மாணிக்கம்!  உங்கள் தந்தை நாயகம் (யாஸீன் நாயகம்) என்னை இங்கு இருப்பாட்டிக் கொள்வதற்குப்பார்த்தார்கள் (தம்பிள்ளைகளுக்கு உதவியாக இப்பூவுலகில் வாழ வைக்க விரும்பினார்கள்) ஆனால் அருமை ரஸுலுல்லாஹ் என்னைக் கூப்பிட்டுக் கொண்டாங்க என்று கூறினாராம்.

எப்படிஇருக்கிறது வி­சயம்!  அருமைரஸுலுல்லாஹ் கூப்பிட்டுக் கொண்டார்கள் என்றால் எவ்வளவு பெரிய வார்த்தை அது?  அந்த பாக்கியம், அப்பேர்ப்பட்ட நற்பதவி யாருக்குக் கிடைக்கும்.  சுப்ஹானல்லாஹ்! இப்பதவிதான் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய பதவிகளில் மிக உன்னதமானது ஆகும்.  அதையேஅவர் எவ்வளவு எளிதாகப் பெற்று விட்டார் பாருங்கள்

இதற்குஎன்ன காரணம்
? இரண்டு மள்ஹருல் அதம்மு மீதும் அவர்கொண்ட அசையாத நம்பிக்கை.  மறைந்த நம் உயிர்த்தந்தை நாயகம் செய்யிதுனா யாஸீன் நாயகம் (ரலி) அவர்கள்,  “எம்மை நன்னம்பிக்கையோடு ஏறிட்டுப்பார்த்தவனை ஒரு வலீ  என்று எழுதப்படும் என்று அருளினார்களே, அது இவரது வாழ்க்கையில் மெய்யாகிப்போனது பார்த்தீர்களா? இப்படிப்பட்ட நிதர்சனமான நிகழ்வினைப் பார்த்தபின்பும் நாம் நம்மைத் திருத்திக் கொள்ளாவிடின் அது நமது துரதிஷ்டமே தான்.

சென்றஇதழில் நமது வாப்பா நாயகம் கண்ட கனவு செய்தியாகக் வந்திருப்பது, வாப்பா நாயகம் அவர்களின் கலீபா நாட்டாண்மைக்காரரைப் பற்றிக் கூறப்பட்ட செய்தியாகும்.  நான்தான் அதை மர்ஜுக் நானாவுக்கு மாற்றிச் சொல்லிவிட்டேன்.  தயவு கூர்ந்து அன்புள்ளங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.   
          
கலீபா. M சிராஜுத்தீன்
, திருச்சி.