ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   » உலகமெங்கும் உத்தம நபிகளார் உதயதின விழாக்கள்


உலகமெங்கும் உத்தம நபிகளார் உதயதின விழாக்கள்


 

அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை நினைத்தாலே அவர்களின் அருமை பெருமைகள்   மனதிற்குள் பெருமிதமாகபெருக்கெடுத்தோடுகிறது.  அகிலத்திற்கோர் அருட்கொடையாக அவர்கள் அவதரித்த நாள் இதுதான் என எண்ணும்போது நம்மையறியாமலே அந்த நாளுக்கு நம் இதயத்தில் மதிப்பு கூடுகின்றது.  இம்மை மறுமையின் அத்துணை நலங்களும்  படைப்பினங்களுக்கு  இறைவனிடமிருந்து வந்து சேர, ஓர் அருள்வாயில் அண்ணலார் உருவில் இன்றுதான் திறந்தது-  பிறந்தது - எனசிந்திக்கும்போது நன்றியோடும் மகிழ்வோடும் அந்த நாளை கண்ணியப்படுத்த நம் நெஞ்சம் விரும்புகின்றது.  உண்மை முஃமின்களின் இந்த உணர்வின் வெளிப்பாடுதான் உலகெங்கும் கெண்டாடப்படும் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின விழா எனும் மீலாது விழாக்கள்.

 

முஸ்லிம்களின் இந்த உணர்வுகளை மதித்து இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அரசு விடுமுறைநாளாக அறிவித்து நம்மோடு தோள்சேர்கின்றன!  சுன்னத் வல் ஜமாஅத்கொள்கை கொண்ட புருணை - மலேஷியா - துபாய் போன்ற நாடுகள் இந்த நாளை மதித்து தம்மதிப்பை உயர்த்திக்கொள்கின்றன.  ஆனால் ஒருசில வஹ்ஹாபிய நாடுகள் பெருமானார் பிறப்பு தமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்ற தமது  முனாஃபிக்தனத்தைப் பறைசாற்றி, இந்த நாளை கண்டுகொள்ளாமல்இறைவனின் சமூகத்தில் நாளை மறுமை விசாரணைக்காக தங்களை தயார் செய்து கொள்கின்றன.  ஆயினும் ஒரு சில கோட்டான்களைத்தவிர அதிகமாக வாழும்பச்சைக்கிளிகளுக்கு பெருமானாரின் விடியல் ஆனந்தத்தையே தருகிறது. அந்த வகையில் ஏமன்- எகிப்து போன்ற நாடுகளில் மீலாது, மெளலூது விஷே­மாகக்  கொண்டாடப்படுகிறது.  குறிப்பாக இந்த ஆண்டு இலங்கையில்  பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.  இலங்கை அரசு மீலாது விழாவை ஒரு தேசிய விழாவாக அறிவித்தது.அனைத்து பள்ளிகளிலும் அவசியம் கொண்டாட ஆணை பிறப்பித்திருக்கிறது. 

உலகெங்கும்மீலாது விழாக்கள் மறுமலர்ச்சி பெற்றிருப்பற்கான காரணம் என்ன? சந்தேகமில்லை.  சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் வெளிரங்க - உள்ரங்கதூண்டுதலே காரணம் எனக் கூறலாம்.  காலத்தின் குத்பாக விளங்கும் அவர்கள், தங்கள் இல்லத்தில் கொண்டாடும் அதே சமயம் தங்கள் உள்ளத்தில் இது உலகெங்கும் கொண்டாடப்படுவதற்கு முன் மாதிரி என நடத்திக்காட்டுகிறார்கள்.  அவர்களது எண்ணத்தின் வலிமை வீச்சு உலகெங்கும் பொங்கிப்பாய்கிறது.  அதன் விளைவே மீலாது மறுமலர்ச்சிக்கானகாரணம்.

சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள் தாங்கள் அச்சிடும்  விழா அழைப்பிதழில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதத்தை கெளரவித்தல்எனும் ஒரு வாசகம் இருக்கும்.  அருமையான வாசகம்இது.  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பிறந்த நாளை மட்டுமல்ல, அவர்கள் பிறந்த இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தையே கண்ணியப்படுத்தவேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்.  அதன்விளைவாகத் தான் மெளலிது ­ரீப் 12 நாட்கள் மட்டுமல்ல, மாதம் 

30நாட்களும் ஓதுங்கள் என தங்கள் முரீதுகளுக்கு  கட்டளை இட்டுள்ளார்கள்.  அவர்கள் அன்பு ஆணையின்படி முரீதுகள் பல ஆண்டுகளாகஓதியும் வருகிறார்கள். 

 அதுமட்டுமல்ல.போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய பழமைகள் மெல்ல மெல்ல மறைந்து போகாமல் அதற்கு உயிர்கொடுத்தும் வருகிறார்கள்  உத்தம  குருநாதர் அவர்கள். ஸுப்ஹான மெளலிது மக்களால் அதிகமாகஓதப்பட பர்ஸன்ஜிய் மெளலிது எனும் மெளலிது சன்னஞ் சன்னமாக மறைந்து கொண்டிருந்தது.  அதற்கு சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் உயிர் கொடுக்கும்விதமாக - மொழி பெயர்த்து வெளியிட்டு தங்கள் முரீதுகளின் சபைகளிலும் வீடுகளிலும் ஓதிவருமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.  இதன் மூலம் பர்ஸன்ஜிய்மெளலிது உயிர் பெற்று உலா வருகிறது.  இமாம் ஜஃபருல் பர்ஸன்ஜிய் (ரலி) அவர்கள் உயிர் நபிகள் மீது உளமுருகிப்பாடிய காவியம் உலர்ந்துவாடிப்போக விடுவார்களா உத்தம நபிகளார்? தங்கள் திருப்பேரர் மூலமாக அதற்கு உயிர்கொடுத்துவிட்டார்கள்.  அதனை ஓதும் மக்களாக ஆக்கி வைத்த அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும், அவர்களது திருப்பேரருக்கும் முரீதுகள் நன்றி சொல்லக்கடமைப்பட்டவர்கள்.

சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள் இலங்கை வலிகமாவில் இந்த ஆண்டும் சிறப்பான மீலாது விழாவை நடத்தினார்கள்.  கந்தூரியும் கொடுக்கப்பட்டது.  இவ்விழாவில்  இந்தியா, சிங்கை, மலேஷியா- துபை - அபுதாபி -கத்தார் - மற்றும் பல நாடுகளிலிருந்து முரீதுகள் வந்து கலந்து சிறப்புப்பெற்றார்கள்.  இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய - மற்றும் தமிழ்நாடு தலைவர், பேராசிரியர் காதர்மைதீன் எம்.ஏ (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), தளபதி ஷ ­பீகுர்ரஹ்மான் மன்பயீ  (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு துணைத்தலைவர்)  மெளலவி, ஹாபிழ் H.A. அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி (தலைமை கத்தீப், முதல்வர் முஅஸ்கருர் ரஹ்மான் பெண்கள் அறபுக் கல்லூரி, காயல்பட்டினம்.), ஹாபிழ்,ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி மற்றும்   இலங்கை  ஆலிம்கள் சிறப்புரையாற்றினார்கள். 

பெருமானாரின்திருப்புகழை கர்நாடகாவிலிருந்து வந்த  நாத்கா. முஹம்மது ஹனீஃப் ரஜா காதிரிய் அவர்கள் உருதுமொழியில் உணர்ச்சிகரமாகப் பாடி கேட்போர் அனைவரையும் மெய்மறக்கச்  செய்தார். மற்றும் தமிழ்ப் பாடல்களை கலீபா முஹம்மது முஸ்தபா, மதுக்கூர் ஜனாப் தாவூது,குவைத் ஜனாப் அப்துல் ஹமீது ஹக்கிய்யுல் காதிரிகள் அழகிய முறையில் பாடினர்.  இதற்கு முந்திய இருதினங்களில் ரஸூல்மாலை, வித்ரிய்யா,மெளலிதுஷரீப், ராதிப் அனைத்தும் அழகுற  ஓதப்பட்டன. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரால் கந்தூரி கொடுக்கப்பட்டு வீடுகள் தோறும் கந்தூரி உணவு கொடுத்தனுப்பப்பட்டது.   வெளிநாடுகளிலிருந்து வந்த முரீதுகளுக்கும் கடைசிநாளன்று உள்ளூர் ஜமாஅத்துகளுக்கும் உணவு ஏற்பாடு செய்து அவர்களைப் பாராமரித்து விழாவையும் தொய்வின்றி நடத்தியது,  கண்டோர் அனைவரையும்பிரமிக்கச் செய்தது.

மேலும், விழா தெடங்கியதிலிருந்து இரவு வரை விழா நிகழ்ச்சிகள் இணையதள அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டு இலங்கை முழுவதும்  கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்னுமொருசிறப்பாக, எம் சபை இணைய தளத்தில் நேரடிக் காட்சி ஒளிபரப்பினை துபை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.  இதன் மூலம்விழாவினை உலகெங்கும் வாழும் ஆஷிகீன்கள் அனைவரும் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.  இந்த ஏற்பாட்டினைச்செய்திருந்த துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினரை என்ன பாராட்டினாலும் தகும்!

மேலும்இந்த ஆண்டு இ.யூ.மு. சார்பில் சென்னை நகரமெங்கும் மீலாது விழாக்கள் வெகு விமரிசையாககொண்டாடப்பட்டு வருகிறது.  இந்தச் சீரிய முயற்சிக்குஉறுதுணையாக இருக்கும் வடக்குக் கோட்டையார் அவர்களும் நம் பாராட்டிற்குரியவர்.

மீலாதுகொண்டாடுவது பித்அத் -ஷி´ர்க் எனும் வஹ்ஹாபிகளின் வாதங்களெல்லாம்மஹல்லாவெங்கும், ஊரெங்கும் உலகெங்கும் கொண்டாடப்பட்ட மீலாது விழாக்களின்  உணர்வுமிகு ஓசைகளில்,  மெளலிது ­ஷரீபுகளின் முத்து முத்தான சப்தங்களில் கரைந்து காணாமல் போய்விட்டது.அல்ஹம்துலில்லாஹ்.  

 

திண்டுக்கல் சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் 18.02.2012 அன்று மீலாது - கந்தூரி - மனிதநேய - மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா தலைமை கலீபா எச். எம். ஹபீபுல்லாஹ் பி.எஸ்.சி. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  பேகம்பூர் ஜமாஅத் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.  திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, திண்டுக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் சீனிவாசன் எம்.ஏ. (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), நகர்மன்றத் தலைவர், எம். மருதராஜ், மற்றும் மும்மத தலைவர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள்கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மவுன்ஸ்புரம் பள்ளி இமாம் சாதிக் யூஸுபி, மெளலவி அல்ஹாஜ் முஹம்மது ஹாரூன் தாவூதி, பாஜில்தேவ்பந்த், மெளலவி என். ரபியுத்தீன் ஆலிம் சிறப்புரை ஆற்றினர்.  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதிநிதியாக டி.ஆர்.ஓ. மனோகரன்மற்றும் பலர் கலந்து கொண்டனர். நான்காயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கந்தூரி உணவு வழங்கப்பட்டது.

 

துபை ஏ.மெ. சபை சார்பில் 16.02.2012 வியாழன் அன்று துபைலேண்ட்மார்க் விடுதியில் அனைத்து அமைப்பினரும் கலந்து கொள்ள கலீபா ஏ.பி. சஹாபுத்தீன்ஹ.காதிரிய் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளியனூர் இஸ்மத் வரவேற்புரை நிகழ்த்த சங்கைமிகுசையது அலி மெளலானா மற்றும் முக்கியஸ்தர்கள் வாழ்த்துரை வழங்க அல்ஹாஜ். முஹம்மது மஃரூஃப், காயல்பட்டிணம் மெளலவி. எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கீ மஹ்ழரி சிறப்புரையாற்றினர்.  தேரிழந்தூர் தாஜுத்தீன் இசை மழை பொழிந்தார்.  இந்நிகழ்ச்சி இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.  சபை, மதுரஸா, மறைஞானப்பேழை, தரீக்கா பற்றிய காணொளிநிகழ்ச்சி ஒளிபரப்பானது.  மீலாது விழா கேள்விபதில் போட்டிக்கான பரிசளிப்புகளும் வழங்கப்பட்டன.

 

மன்னார்குடி ஏ.மெ. சபை சார்பில் 18.02.2012 அன்று ஏ.எஸ்.ஏ.திருமண மண்டபத்தில் மீலாது விழா நடைபெற்றது. மஹல்லாக்களின் இமாம்கள் உரையாற்றினர். சங்கைமிகு ய­ய்கு நாயகம் அவர்களின் மதுக்கூர் கலீபாக்கள்முன்னிலை வகித்தனர்.

 

மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி, ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பில் 19.02.2012 அன்று  பெரிய பள்ளிவாசலில்மீலாது விழா நடைபெற்றது.  பள்ளி இமாம்கள் உரையாற்றகோவை ஷாஜஹான் உலவி சிறப்புரை ஆற்றினார். உள்ளூர் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.