ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  அமுதமொழிகள்


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்

அமுதமொழிகள்

 

அல்லாஹு தஆலா சொன்னான். கெளதுல் அஉளமே!

நபிமார்கள் முர்ஸல்களல்லாத சில அடியார்கள் எனக்குளர். துன்யாவை (இகத்தை) உடையவர்களிலிருந்து, ஆகிராவை(பரத்தை)  உடையவர் களிலிருந்து, நரகத்தை யுடையவர் களிலிருந்து, சுவர்க்கத்தை யுடையவர்களிலிருந்து எவரும் சுவர்க்கத்தின் மலக்கான ரில்வானும், நரகத்தின் மலக்கானமாலிக்குமே அவர்கள்நிலைமைகளையறிய மாட்டார்கள். நான் அவர்களை வெகுமதிக்காகவோ, வேதனைக்காகவோ, ரம்பை களுக்காகவோ, மாளிகைகளுக்காகவோ படைக்கவில்லை.  அவர்களை அறியாதிருந்தாலும் அவர்களைக் கொண்டு விசுவாசங்கொண்டவர்களுக்கே சோபனம்.

விளக்கம்:

நபிமார்கள் முர்ஸல்கள் தவிர்ந்த ஒரு கூட்டத்தார் இறைவனுக்கு இருக்கிறார்கள். அவர்களுடைய நிலைமைகள்அல்லது தன்மைகள் எவராலும் அறிந்து கொள்ள முடியாது.  சுவர்க்கம் நரகங்களிலுள்ள ரிள்வானும் மாலிகுமே அறிந்துகொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய நிலைமைகள் மிகத் தெளிந்ததாகவும் மறைந்ததாகவு முண்டு.  மற்றவர்மத்தியில் அவர்களில் எந்த வேறுபாடுமிருக்காது. மனிதர்களைப் போன்றே இருப்பார்கள். ஆனால் அவர்களின் சொல், செயல், எண்ணங்களெல்லாம்மக்களைவிட மாற்றமானதாகவும் பொதுமக்களால் அறிந்து கொள்ள முடியாத தன்மையுடையதாகவுமிருக்கும்.  இவர்கள் உண்மைக்கு முரணாக நடக்க மாட்டார்கள்.  தேவையற்ற விடயங்களில் ஈடுபட மாட்டார்கள்.  அன்பு செறிந்தவர் களாயிருப்பர்.  நீதி, நீதம், நியாயம் இவர்களில் உண்டு.  அவர்களுக்கு சுவர்க்கம் நரகம் என்பதில்லை.  ஏனெனில் அவர்கள் அல்லாஹுவையும் ரஸூலையும் விரும்பியவர்கள்.  அவர்களின் வாழ்வெல்லாம் இறைவனை நம்பிய தாகவே இருக்கும்.  சுவர்க்கம் நரகத்தைப் பற்றிய சிந்தனை அவர்களிலிருக்காது.  இறையில் இரண்டறக் கலப்பதே அவர்களின் நோக்கம்.  இறை நாடியதை அது செய்யும் எனும் நம்பிக்கை யுடையவர்கள்.  அவர்கள் நன்மை தீமைக்காகவும் படைக்கப்படவில்லை.  ஹூருல் ஈன்களுக்காகவும் படைக்கப் படவில்லை.  அவர்கள் இறைவனுக்காகவே படைக்கப்பட்டவர்கள்.  தானே தன்னில் தானான அதில் தன்னில் தானாய் மிளிர்கிறவர்கள்.  அவர்களில் நம்பிக்கை  வைத்தவர்களுக்கு அவர்கள் அவர்களை அறியாதிருந்தபோதும் சோபனமே. 

கெளதுல் அஉளமே!


நீரோ அவர்களினின்றுமாவீர். உலகில் அவர்களின் அடையாளங்களிற் சில. குறைந்த ஆகாரம், குடிப்பினால் அவர்களின் திரேகங்கள் கரிந்திருக்கும்.  இச்சைகளைவிட்டும் அவர்களுடைய நப்ஸுகள் கரிந்திருக்கும். ஆலோசனை களை விட்டும் அவர்களுடைய கல்புகள் கரிந்திருக்கும்.  இன்பங்களை விட்டும் அவர்களுடைய உயிர்கள் கரிந்திருக்கும்.  அவர்களோ சந்திப்பின் (ஹக்கை) ஒளிகொண்டு கரிக்கப்பட்டநித்திய ஜீவனையுடையவர்களாவர்.

விளக்கம் :

இந்த நிலைமையில் உள்ள கெளதுல் அஉளமும் அவர்களினின்று முள்ளவர்களும் இன்னுமுள்ளார்கள்.  ஊண் குடிப்புப் போன்றவைகளைப் பற்றிய சிந்தனையில்லாமல் அல்லாஹு வையே சிந்தித்தவர்களாய் அவர்களிருக் கின்றமையால் அவர்களின் உடல் இறை ஒளிவிலேயேகரிந்தவர் களாயிருப்பர். அவர்களின் ஊணும் குடிப்பும் இறை சிந்தனையைவிட மிகக் குறைந்தவையாயிருக்கும்.  அவர்களின் மூச்சுகளோ தேவையற்ற எண்ணங்களை விட்டும் இறையயண்ணத்தினாலே அதன் ஒளிவில் கரிந்ததாயிருக்கும்.  அவர்களுடைய ஆவி இன்பங்களனைத்தை விட்டும் இறையின் எண்ணத்தைக் கொண்டு அதன்  ஜோதியிலே கரிந்துஜோதியாக மிளிர்ந்து கொண்டிருக்கும். இன்ப இறை ஜோதி களைக் கொண்டு கரிந்த ஜோதியாய்த் தரித்திருப்பவர்களே அவர்கள்.  கரிந்து போவதென்பது இறைஜோதியில் இரண்டறக் கலந்து ஜோதிமயமாய் விளங்குவார்களென்பதேயாம்.

 

 

பரிசுத்தமான இறையோனால் உகக்கப்பட்டவர்களே. அருள்புரியும் இறையோனால் விருப்பங் கொள்ளப்பட்டவர்களே!

 நீங்களோ எல்லாராலும் நாடப்படுகிற இறையோனால் அனுப்பப்பட்ட இரட்சகர்.  நீங்கள் தான் ஜீலானை இடமாகக் கொண்ட மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்கள்.


எம் செய்கே!குதுபுல் அக்தாபே! மார்க்கத்தை உயிர்ப்பித்தவரே! என் நாயகமே! மற்றவர்களால் ஊழியம் செய்யப்பட்டவர்களே! அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!

வேத நடைபயில்வோரின் அரசரே! ஆரீபீன்களான மெய்ஞ்ஞானிகளுக்கு வழிகாட்டுகிறவர்களே!

 

என் நாயகரே!  மற்றவர்களால் ஊழியம் செய்யப் பட்டவர்களே! அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!

நல்லவர்களின் அரசரே! சிறப்புடையோரில் மிகச் சிறப்புடையோரே! என் நாயகரே! மற்றவர்களால் ஊழியம் செய்யப்பட்டவர்களே! அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!

இறைவனையடைவோரின்மிக்க உண்மையுடையோரே! பரிபூரணமானவர்களின் இமாமே! என் நாயகரே! மற்றவர்களால் ஊழியம் செய்யப்பட்டவர்களே! அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!

என்னுடையதிக்ரிலே பிரசன்னமாகிறவர்களே! பயபக்தியுடையோரின் செய்கே! என் நாயகரே! மற்றவர்களால் ஊழியம் செய்யப்பட்டவர்களே! அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!

            

மவ்த்துடைய இறுதி நேரத்திலே என்னிடத்தில் பிரசன்னமாகிறவர்களே! அச்சமுடையவர்களுக்கு சந்தோசம் ஊட்டுகிறவர்களே! என் நாயகரே! மற்றவர்களால் ஊழியம் செய்யப்பட்டவர்களே!  அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!

எங்களுடைய செய்கு அவர்களே! உங்களை நினைக்கிறவர் களுடைய புதைகுழிக்குப் பிரசன்ன மாகிறவர்களே! என்நாயகரே! மற்றவர் களால் ஊழியம் செய்யப் பட்டவர்களே! அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!

எங்கள்செய்கு அவர்களே! செயல் புரிந்து கொண்டிருக்கும் தராசியிடத்துப் பிரசன்ன மாகிறவர்களே!

 

என் நாயகரே! மற்றவர்களால் ஊழியம் செய்யப் பட்டவர்களே! அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!

எங்கள் செய்கு அவர்களே! மிகச் சங்கையுடையோர் நடக்கின்ற பாதையிடத்துப் பிரசன்னமாகின்றவர்களே! என் நாயகரே! மற்றவர்களால் ஊழியம் செய்யப்பட்டவர்களே! அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!


எங்கள்செய்கு அவர்களே!  யாஸீன் (ரலி) அவர்களுடைய ­ ஷபாஅத்துக்காக பிரசன்னமாகிறவர்களே! என்நாயகரே! மற்றவர்களால் ஊழியம் செய்யப்பட்டவர்களே! அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களே!