ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  ஏமாறும் ஹாஜிகள் - ஏமாற்றும் மன்னர்கள்


ஏமாறும் ஹாஜிகள் - ஏமாற்றும் மன்னர்கள்


ஹதீஸ் பக்கம்

 

ஆலிம் புலவர்,

 

யார் எனது கப்ரை ஜியாரத் செய்தாரோ அவருக்கு என் ­ஷஃபாஅத் வாஜிபாகிவிட்டது! (நபிமொழி)

 

வாழ்நாள் சாதனையாக எண்ணி பெரும் ஆவலோடு ஹாஜிகள் மக்கா மதீனாசென்று திரும்புகிறார்கள். அவர்கள் ஊர் திரும்பியதும் மக்கா - மதீனாவின் ஆழப்பதிந்தநினைவுகளை தாங்கள் சந்திக்கும் மனிதர்களோடு பகிர்ந்து மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

அவர்களின்வர்ணணைகளில் மக்கா பற்றிய அனுபவங்கள் முழுமையானதாக இருக்கும். மதீனாபற்றி பேசும் போதோஎல்லாம் நிறைவாக இருந்தாலும்  ஏதோ ஒரு மனக்குறை- ஒரு நெருடல் உண்மையான ஆஷிகீன்களுக்கு இருக்கத்தான் செய்கிறது!

அது என்ன?கண்ணின் மணியான - கல்பின் ஒளியான  -பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை - அவர்களது சுவனப்பூங்காவான ரவ்ழாவை-  துயில் கொள்ளும் கப்ருஷ­ரீபை - ஒரு சிறிய ஓட்டைக்குள் - அதுவும்இருட்டுக்குள்.  இதுவோ - அதுவோ எனத் தெரியாமல்தத்தளித்து - நகருங்கள் - நகருங்கள்.... என காவலாளிகள் விரட்ட ஜியாரத் செய்வது மனதுக்குதிருப்தியைத் தருமா?

சவூதிமன்னர்கள் தங்கள் மாளிகைகளை யெல்லாம் வண்ணவண்ண விளக்குகளால் அலங்கரித்திருக்க, இந்தமன்னர்களுக்கு வாழ்வளித்த மன்னாதிமன்னரான மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  மண்ணறையை போதிய வெளிச்சமின்றிப் போட்டிருப்பது எந்தஆதாரத்தில்? எந்த ஆயத் - ஹதீஸின் உத்தரவுப்படி? 

 

 நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

 யார்எனது கப்ரை ஜியாரத் செய்தாரோ அவருக்கு என் ­ஃபாஅத் வாஜிபாகிவிட்டது!

இந்தஹதீஸில் என்னை ஜியாரத் செய்வது என்ற பொருளை உள்ளடக்கி  என் கப்ரை ஜியாரத் செய்வது என்ற வாக்கியம் இடம்பெறுகிறது! ஆனால் இப்போது செல்பவர்கள் கப்ரை யாவது ஜியாரத் செய்ய முடிகிறதா? கப்ரைச்சுற்றியுள்ள சுற்றுச் சுவர்களைத்தான் பார்க்கமுடிகிறது!

ஹள்ரத்அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் இப்படித்தான் ஜியாரத் செய்தார்களா?  மற்ற கலீபாக்கள்,  சஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள்  இப்படித்தான் ஜியாரத் செய்தார்களா? இல்லையே! அவர்களெல்லாம்பெருமானாரின் கப்ரை கண்ணாரக் கண்டார்களே!

ஆனால்இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கு அந்தக் கப்ரு ­ஷரீபை எந்தத் தடையுமின்றி - சுற்றுச் சுவருமின்றி பார்க்கும் பாக்கியம்கிடைக்காமல் போய்விட்டது!

இது தகுமா?நியாயமா?

குறைந்தஅளவு இப்போதிருக்கும் பார்வை செல்லும் வழியை பெரியதாக்கி உள்ளே நன்கு பார்க்க முடிவதுபோல செய்தாலாவது “மன்ஜார கப்ரீ” என்ற ஹதீஸை உயிர்ப்பித்தது போல இருக்கும். லட்சக்கணக்கில்செலவு செய்து மதீனா செல்லும் ஹாஜிகள் பெருமானாரை முழுமையாக தரிசித்து மனநிறைவோடு திரும்புவார்கள்!

இது அங்குஆளும் மன்னர்களிடம் உலக முஸ்லிம் சமுதாயம் கேட்கும் யாசகமல்ல! உலக முஸ்லிம்களின் மறுக்கமுடியாத உரிமையுமாகும்!