ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  மாப்பிள்ளை லெப்பை ஆலிம்


தமிழகத்து வலிமார்கள்.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

கலீபா, எம். சிராஜுத்தீன் பி.எஸ்.ஸி.                   திருச்சி

 

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்குமுஸ்லிம்கள் அல்லாதவர்களும் பெரிதும் மரியாதை செய்தனர்.  சிங்களப் பணக்காரர் ஒருவர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு புதுப்பானை வாங்கி முஸ்லிம் சமையல்காரரைக் கொண்டு சமைத்து விருந்து படைத்தார்.  வாயிலில் தோரணம் கட்டி செவ்விளநீரையும் தொங்க விட்டிருந்தார்.  மேலும் அவர்களை வரவேற்கும் விதமாக சிங்களப் பாடல்களும்பாடப்பட்ன.

விருந்துண்டதற்கு நன்றி கூறும்போது, “இப்படிப்பட்ட உணவுப் பதார்த்தங்களை சுவர்க்கத்தில்கூடப் பார்க்க முடியாது” என்று பாராட்டிப் பேசினார்கள்.  இப்பேச்சைக் கேட்ட அந்த சிங்களச் செல்வந்தர் மகிழ்ந்துபோனார்.  ஆனால் அப்பா அவர்களுடன் சென்றவர்கள் முகம் சுழித்தார்கள்.  வீட்டிற்கு வந்தவுடன்அப்பா அவர்களை நேக்கி ஒரு முஸ்லிம் நபர், “என்ன இப்படி புகழ்ந்துதள்ளி விட்டீர்கள்! வாயில் வைக்கவே முடியவில்லை. அதைப்போல் இப்படி வர்ணித்து விட்டீர்களே!” என்றார்.  அதற்கு அப்பா அவர்கள், “நான்என்ன பொய்யா கூறி விட்டேன்? உண்மையைத் தானே சொன்னேன்.  அங்கிருந்த உணவுப் பதார்த்தங்களை நான்வேறெங்கும் கண்டதுமில்லை, திண்டதுமில்லை.  இங்கேயே இப்படி உள்ளது. சுவர்க்கத்தில் மட்டும் எப்படி இருக்கும்? என்ற பொருள்படத் தான் கூறினேன்“ என்றார்கள்.  அதுகேட்ட மற்றவர்கள் கொல்லென்று சிரித்து விட்டார்கள்.

இலங்கையில் ஒரு சிற்றூரில் உள்ள பள்ளியில் அப்பா அவர்கள் பேச விரும்பினார்கள்.  அதற்கு அந்த ஊர் நிர்வாகிகள் மறுத்து விட்ட பிறகு கூறினார்கள், “நாங்கள்வட்டி வாங்கும் தொழில் செய்து வருகிறோம்.  வட்டியைப்பற்றி மட்டும் பேசாமல் வேறு விச­யங்களைப் பற்றி பேசலாம்” என்றார்கள்.  உடனே அப்பா அவர்களும், “சரி அப்படிய ஆகட்டுமஎன்றார்கள்.  தொழுது முடித்தபின் பயான் தொடங்கிற்று.  நான் வட்டி என்ற பாத்திரம் வாங்குவதைப் பற்றி இங்குபேசவே மாட்டேன்.  ஆனால் ஒருவருக்கொருவர் பணம்கொடுக்கல் வாங்கலில் வட்டியைப் பெற்றுக் கொள்வதை அல்லாஹ் வன்மையாகக் கண்டித்துள்ளான்.  ஆகவே நானும் அதைக் கண்டிக்கிறேன்.  இது இஸ்லாத்தில் விலக்கப்பட்டது (ஹராம்) ஆகும்.  இஸ்லாத்திலிருந்து கொண்டு அதுவும் பள்ளி நிர்வாகிகளாக இருந்து கொண்டு இப்படி அப்பட்டமாக வட்டியை வாங்கிக்கொண்டு தொழில் நடத்துகின்றீர்களே!இது சரியா? வட்டி வாங்குபவர்மீளா நரகையல்லவா அடைவார்கள்” என்று பலவாறாகச் கூறி விட்டார்கள்.  நிர்வாகிகள் ஒன்றும் பேச முடியாமல் தலை குனிந்தவர்களாக வெட்கப்பட்டு கூனிக் குறுகிப் போய் அமர்ந்திருந்தனர்.

ஒருமுறை அப்பா அவர்கள் திக்விலை என்ற ஊருக்குச் சென்றிருந்தார்கள், அப்போது அருகில்உள்ள தங்கலை  என்ற ஊர் மக்கள் வந்து அழைத்தார்கள்.  தங்கலையில் அப்போது காலரா பரவியிருந்தது.  அதனால் சூழ இருந்தவர்கள் அங்கு போக வேண்டாம் என்றுதடுத்தார்கள்.  ஆனால் அப்பாவோ அங்கு போகச் சம்மதித்துவிட்டார்கள்.

போகும் வழியில் காட்டிலிருந்து ஒரு முயல் அவர்களுக்கு குறுக்கே பாய்ந்துஓடியது.  அதைக்கண்ட அப்பா, “முசலும் வந்தது நசலும் போனது” என்றார்கள்.  அவர்கள் கூறிய வண்ணமேஅன்று முதல் காலரா அவ்வூரை விட்டும் அகன்று போனது.  அதன்பின் அது அவ்வூரை எக்காலமும் காலரா எட்டிப்பார்க்கவேயில்லையாம்.

வெள்ளிதோறும் “ஜும்ஆவில் ஓதப்படும் குத்பா பேருரையை தமிழில் சொன்னால் மக்களுக்குப் பயன்படும் என்று எண்ணியிருந்தார்கள்.  அதற்கு லக்னோவைச் சேர்ந்த பெரிய மார்க்க மேதை மெளலானா அப்துல் ஹை என்பவர் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தார்.  இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் குத்பா பிரசங்கத்திற்குதமிழில் “குத்பா நபாத்தியா” என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டு அதனை தமிழகத்திலும் இலங்கையிலும் பரப்பினார்கள்.  அவர்கள் நலவை நாடிச் செய்தார்கள். ஆனால்  அதன் பின் தான் ஜும்ஆவில் குத்பா பேருரை போக்கற்றசில வி­ஷமிகளுக்கு இடமளித்ததுபோல் ஆகிவிட்டது. ஆம், குத்பா பேருரைஎன்ற பெயரில் வாய்க்கு வந்ததையயல்லாம் வாய் கூசாமல் மிம்பரில் நின்று கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார்கள்.  மஹா ஜனங்களே!  T.V. பார்க்காதீர்கள்.  அதில் இன்ன இன்ன விதமான ஆபாசங்கள் காட்டப்படுகின்றனஎன்று அப்பட்டமாக எடுத்து வைக்கிறார்கள்.  இவர்கள்பார்க்காமலா அப்படிச் சொல்ல முடியும்? இதைக் கேட்டுக் கொண்டிருப் போருக்குத்  தெரிய வேண்டாமாஅவர்கள் பேசாமல் வாய் பொத்தி இருக்கிறார்கள்.  நம் போன்றவர்களுக்கு அங்கு உட்கார்ந்திருக்கவே முடிவதில்லை.  யாரைப் பிடிக்கவில்லையோ அவரை அன்று குத்பா பிரசங்கத்தில் விமர்சிப்பதுதான் அவர்கள் வேலையாகப் போய் விட்டது.  பொது  மக்களுக்குப்பயன்படட்டுமே என்னும் நல்ல எண்ணத்தில் அப்பா கோவை செய்த தமிழ் குத்பா இப்போது குத்பாஓதும் நபர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகப் போய் விட்டதுதான் மிகவும் வருத்தப்பட வேண்டியவி­யம்       

(தொடரும்)