ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   » ஸலவாத்தின் மகிமை கேளீர்!


ஸலவாத்தின் மகிமை கேளீர்!


 

தொகுப்பு : ஆஷிகுல் கலீல் B.Com, திருச்சி

 

அன்த கப்பாருல் கதாயா..... பாபங்கள் நீக்கும் பாதாரவிந்தமே!

ஒருவர் தனது தந்தையுடன் யாத்திரை செய்தார்.  இடைவழியில் அவருடைய தந்தை இறந்து விட்டார்.  அவருடைய முகம் பன்றியின் முகம் போலாகி விட்டது.  அதைக் கண்ட அவர் அழுது பரிதவித்து அல்லாஹு தஆலாயிடம் மனமுருகி துஆச் செய்தார்.  அதற்குள்ளாக அவருக்கு ஒரு நித்திரை வந்து விட்டது.  யாரோ ஒருவர் அவருடையகனவில் தோன்றி உன் தகப்பன் வட்டித் தொழில் செய்து ஜீவித்தார்.  அதனால் அவர் உருவம் இவ்வாறு மாறி விட்டது.  எனினும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமத்தைச் செவியேற்றவுடனே ஸலவாத்துச் சொல்வார்.  அதனால் அன்னார் அவருக்குச் சிபாரிசு செய்தனர்.  ஆதலால் அவருடைய முகம் பழைய நிலைக்கு வந்து விட்டதுஎன்றார்.

தங்களின் உதவி வேண்டும்!  தயை கூர்ந்துகாத்தருள்வீர்!

ஹள்ரத் சுப்யான் தவ்ரீ (ரஹ்) அவர்கள் கஃபாவை தவாபு செய்து கொண்டிருக்கும்போது ஒருவரைக் கண்டார்கள்.  அவர் தவாபில் ஓர் அடிக்குஒரு ஸலவாத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். வேறு தஸ்பீஹுகளை அவர் ஓதக் காணோம். அதற்கு என்னகாரணமென அவரிடம் அவர் வினவ, அவர் நீர் யார்என வினவினார்.  நான் சுப்யான்தவ்ரீ என்று அவர் பதிலளிக்கவே அவர், நீர் இக்காலப் பெரியாரா யிருப்பதால் உம்மிடம் உண்மையைச் சொல்கிறேன்.  வேறு எவராயிருந்தாலும் இதைக் கூறமாட்டேன் என்று கூறி விட்டு, நானும் என் தந்தையும் ஹஜ்ஜுச்செய்ய திருமக்கா வந்து கொண்டிருந்தோம்.  ஓரிடத்திற்குச்சென்றதும் எனது தந்தை நோயுற்றார்.  அவருக்குவேண்டிய பிரயாசைப் பட்டு மருத்துவஞ் செய்தும் பலன் கிடைக்கவில்லை.  அவர் இறந்து விட்டார்.  அவர் முகம் கருத்து விட்டது.  நான் இன்னாலில்லாஹி சொல்லி வெகு துக்கப்பட்டேன்.  அவர் முகத்தை துணியால் மூடினேன்.  பின்னர் எனக்கொரு நித்திரை வந்தது.  கனவில் அழகான மனிதரொருவர் தோற்ற மளித்தார்.  அவரை விட அழகான ஒருவரையும் அவருடைய ஆடையை விடச்சுத்தமான ஓர் ஆடையையும் அவரிடம் கமழும் நறுமணத்தை விடச் சிறந்த ஒரு நறுமணத்தயும் நான்கண்டதில்லை.  அவர் வேகமாக அடியயடுத்து வைத்துவந்து எனது தந்தையின் முகத்திலிருந்த துணியை அகற்றி விட்டுத் தம் திருக்கரத்தால் அவர்முகத்தைத் தடவினார்.   உடனே முகம் வெண்ணிறமாய்விட்டது.

அவர் திரும்பிச் செல்லலானார். விரைவாக நான் அவர் ஆடையைப் பற்றிக் கொண்டு, அல்லாஹுதஆலா உங்களுக்கு அருள்புரிக! நீங்கள் யார்? இந்தப் பிரயாணகாலத்தில் எனது தந்தைக்கு உதவி செய்தீர்களே! என்றேன்.  அதற்கு அன்னார் உமக்கு என்னைத் தெரியாது.  நான் திருகுர்ஆன் அருளப்பற்ற முஹம்மது இப்னு அப்துல்லா.  உமது தந்தை பெரும்பாவி.  எனினும் என்மீது அதிகமாக ஸலவாத்தை ஓதி வந்தார்.  அவருக்குச் சங்கடம் நேரிட்ட இவ்வேளை அவருக்கு உதவவந்தேன்.  ‘எவர் தன்னுடைய முறைப்பாட்டிற்குநான் உதவ வேண்டும் என எண்ணுகின்றாரோ அவர் என் மீது ஸலவாத்துச் சொல்லிடட்டும் என்றருளினார்கள்.

எவர் அல்லாஹ் தனக்கு உதவ வேண்டும் என்று எண்ணுகிறாரோ அவர் என் மீதுஅதிகமாக ஸலவாத்தை ஓதி வரட்டும் என்று கூறினர்.

ஒருவர் ஒரு நோயாளியைப் பார்க்கச்சென்றார்.  அவர் மரணாவஸ்தை என்னும் சக்ராத்துவேதனையிலிருந்தார்.  அவரை நோக்கி, மரணத்தின் கசப்பு எப்படியிருக்கிறது என அவர் விசாரிக்க, அவர் எனக்கு யாதொன்றும்தெரியவில்லை.  ஏனெனில் ஸலவாத்தை அதிகமாக ஓதிவருபவருக்கு மரணத்தின் கசப்புத் தெரியாது என்று உலமாக்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்என்றார்.

வல்லிய சஞ்சீவி

பக்திமான்களில் ஒருவருக்கு நீரடைப்புவியாதி யுண்டாகி விட்டது.  அவர் தமது கனவில்மாபெரும் துறவி மகான் ஷிஹாபுத்தீன் இப்னு ரஸ்வான் (ரஹ்) என்பவரைக் கண்டு அவரிடம் தமது வியாதி பற்றி முறையிட்டார்.  அதற்கு அவர் நீர் கைவல்லியமான சஞ்சீவியை ஏன் மறந்தீர்! அந்தச் சஞ்சீவி என்பது; அல்லாஹும்ம ஸல்லிவஸல்லிம் அலா ரூஹி ஸய்யிதினா முஹம்மதின் பில் அர்வாஹ்; வஸல்லிவஸல்லிம் அலா கல்பி ஸய்யிதினா முஹம்மதின் பில் குலூப்; வஸல்லிவஸல்லிம் அலா ஜசதி ஸய்யிதினா முஹம்மதின் பில் அஜ்ஸாத்; வஸல்லிவஸல்லிம் அலா கப்ரி ஸய்யிதினா முஹம்மதின் பில் குபூர்.  என்பதாம் என்றார்.  அந்த நித்திரையிலிருந்து கண் விழித்தபின் அந்த ஸலவாத்தையே அவர் ஓதி வரலானார்.  அவருடைய வியாதி நீங்கிவிட்டது.

ஹஸ்ரத் சுப்யான் தவ்ரீ (ரஹ்) அவர்கள் வெளியிற் சென்று கொண்டிருக்கும்போது வாலிபர் ஒரு வரைக் கண்டார்கள்.  அவர் காலைத்தூக்கும் போதும்,அதை நிலத்தில் வைக்கும் போதும் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலிமுஹம்மதின் என்று சொல்லிக் கொண்டே போனார். அவரை நோக்கி, நீ ஏதாவது அறிவு ஆதாரத்தோடு இவ்வாறு சொல்கிறாயாஎன சுப்யான் (ரஹ்) கேட்டார்கள்.  அப்பொழுதுஅவர்களுக்கிடையே கீழ்க் கண்டவாறு சம்பா­ணை நடந்தது.

வாலிபர் : நீர் யார்?

சுப்யான் : நான் சுப்யான் தவரீ.

வாலிபர் : இராக்குவாசியான சுப்யானா?

சுப்யான் : ஆம்!

வாலிபர்: நீர் அல்லாஹ்வை அறிந்திருக்கின்றீரா?

சுப்யான் : ஆம்!

வாலிபர் :   எவ்வாறு அறிந்தீர்?

சுப்யான்:ஆம்!அல்லாஹுதஆலா இரவிலிருந்துபகலையும் பகலிலிருந்து இரவையும் கொண்டு வருகிறான்.  தாய் வயிற்றில்பிள்ளையின்  உருவமைக் கிறான்.

வாலிபர்: நீர் அவனைச் சிறிதும்அறியவில்லை.

சுப்யான் : அப்படியாயின் நீ எவ்வாறுஅறிந்தாய்?

வாலிபர்: ஒரு வேலையைத் திட்டமிட்டுசெய்ய முடிவு கட்டுகிறேன்.  பின்னர் அதைக் கைவிடநேருகிறது.  ஒரு வேலையைச் செய்யத் துணிகிறேன், செய்ய முடிவதில்லை.  அதனால் எனக்கு மேலே வேறு ஒருவன் இருக்கிறான்.  அவனே என் காரியங்களையெல்லாம் நிறைவேற்றி வைக்கிறான்என்று அறியலானேன்.  அவனே அல்லாஹு தஆலா என்றுஉணர்ந்தேன்.

சுப்யான்: நீ ஏன் ஸலவாத்து ஓதுகிறாய்?

வாலிபர்: நான் என் தாயுடன் ஹஜ்ஜுக்குச்சென்றேன்.  எனது தாய் அங்கேயே இறந்து விட்டாள்.  அவளுடைய முகம் கறுத்து விட்டது.  அதிலிருந்து அவள் யாதோ ஒரு பெரிய தவறு செய்திருக்கிறாள் என்று யூகித்து அல்லாஹு தஆலாவிடம் துஆச் செய்யக் கையை ஏந்தினேன்.  அதற்குள்ளாக திஹாமா (ஹிஜாஸ்) திக்கிலிருந்து மேகமொன்றுவந்தது.  அதிலிருந்து ஒருவர் வெளியாகி அவருடைய திருக்கரத்தினால் எனது தாயின் முகத்தில் தடவ அது பிரகாசிக்கலானது.  வயிற்றைத் தடவ வீக்கமும் போய்விட்டது.  அப்பொழுது இந்தச் சங்கடமான நிலையில் எனக்கு உதவிசெய்த நீங்கள் யாரென வினவினேன்.  அதற்கு அன்னார் “நான் உனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்றனர். அப்பொழுதுஅன்னாரிடம், “எனக்குஏதாவது புத்திமதி கூறுங்கள்” என்றேன்.   அதற்குஅன்னார், “நீ நடப்பதற்கு உனது காலைத் தூக்கும் போதும்நிலத்தில் வைக்கும் போதும் இந்த ஸலவாத்தை ஓதி வா!” என மேலே கூறப்பட்டஸலவாத்தைக் கூறினர்.

(ஸலவாத்தின் மகிமை காணீர் தொடர் முற்றுப் பெறுகின்றது அல்ஹம்துலில்லாஹ்...)