ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  அளவற்ற புகழ்

திருமறைப் பக்கம்

அளவற்ற புகழ்

அபூ ரிப்தா


 

நபியே! உங்கள் திக்ரை (புகழை) நாம் உயர்த்தினோம்! (அல்குர்ஆன்)

ஒருவர் கேட்டார்......


என்னஉங்கள் சபையினர் ரபீஉல் அவ்வல் மாதம் முப்பது நாட்களும் மெளலிது ஒதுகிறார்களாமே! மெளலிது ஷிர்க் இல்லையா? என.  


பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த மாதத்தை கண்ணியப்படுத்தும் பொருட்டு அந்தமாதம் முழுவதும் மெளலிது ஷ­ரீப் ஓதும்படி எங்கள் செய்கு நாயகம் அறிவுறுத்தியுள்ளார்கள்!.....அதுசரி....... மெளலிது ஒதுவது எப்படி ஷிர்க்காகும்? என நான் கேட்டேன்!

இல்லை...அதில் பெருமானாரை அளவுக்கு அதிகமாகப்  புகழப்படுகிறதாம்!அதனால் தான் அதை ஓதுவது ஷிர்க்காம்... நான் கேள்விப்பட்டேன் என்றார்அவர்!

அஸ்தஃபிருல்லாஹ்!பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்வதற்கு அளவு என்ன? சொல்லுங்கள்என்றேன்! அதெல்லாம் எனக்குத் தெரியாது என நழுவிவிட்டார்!

இது அவரதுசந்தேகம் மட்டுமல்ல! இன்று முஸ்லிம்களின் அநேகர் மனதிலும் விதைக்கப்பட்டிருக்கும் சந்தேகம்தான் இது! இதற்கு விடைதான் என்ன?

சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள் அருளினார்கள்.    ‘பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகமதிகம் புகழுங்கள்! ஆனால் அல்லாஹ் என்று மட்டுமகூறிவிடாதீர்கள்!’

இதையேதான் இமாம் பூஸ்ரீ (ரஹ்) அவர்கள் தங்கள் புர்தா ஷ­ரீஃபில்                                ‘நஸாராக்கள் (கிருத்தவர்கள்)தங்கள் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை கர்த்தர் - இறைமகன்- என்றெல்லாம் வாதம் செய்ததுபோல நீங்கள் வாதம் செய்யாமல் - அதைத்தவிர எவ்வளவு முடியுதோ அவ்வளவு புகழுங்கள்’ எனவழிகாட்டியிருக்கின்றார்கள்.

மெளலிது ­ஷரீபில் எங்கே பெருமானாரை அல்லாஹ் என்றோ கடவுள் என்றோ கூறப்பட்டிருக்கிறது?இல்லையே! அல்லாஹ்வும் தன் அருள்மறையில் நபியே உங்கள் புகழை நாம் உயர்த்திவிட்டோம்  என்று கூறிவிட்டான்.   இங்கு அல்லாஹ் கூட புகழுக்கு ஓர் எல்லையை அளவைவரையறுத்துக் கூறாமல் அண்ணலாரைப் புகழ்வதில் நமக்கு மாபெரும் சுதந்திரத்தை அறிவித்துவிட்டான்!  விரிவான இடம் வைத்துவிட்டான்.

மெளலிதைஎழுதியவர்கள் முஷ்ரிக்குகள் - காபிர்கள் அல்ல! (நவூதுபில்லாஹ்) இந்தக் குற்றச்சாட்டைசுமத்துவர்கள்தாம் இணைவைப்பவர்கள் - எப்படி என்கிறீர்களா?

நாமும்நபியும் ஒன்று என நபியோடு தங்களை சமமாக எண்ணி நபிக்கு  இணைவைக்கும் பாவிகள். அப்பாவிகள்!