ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  வந்தவர் யார் ?


வந்தவர் யார் ?


 

இப்றாஹீம் கவ்வாசு (ரஹ்) என்பவர்கள் சொல்கிறார்கள் : எனக்கு ஒரு பிரயாணத்தில் தாங்கொணாத் தாகமுண்டாகி மயங்கி விழுந்து விட்டேன்.  யாரோ ஒருவர் என் முகத்தில் நீரைத் தெளித்தார்.  கண்திறந்து பார்த்த  போது அழகான மனிதர் ஒருவர் குதிரையில் அமர்ந்திருந்தார்.  அவர் எனக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டு“என்னுடன் அமர்ந்து கொள்க” என்றார்.  சிறிதுநேரங் கழித்து அவர் என்னை நோக்கி, ‘என்ன காண்கின்றீர்?’ என வினவினார்.  நான் இது மதீனா என்றேன்.  இங்கு நீர் இறங்கி விடும்.  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகஞ்சென்று உங்கள் சகோதரர் “கிலுரு” தங்களுக்கு ஸலாம் சொன்னார் என்று சொல்ல வேண்டும் என்றுகூறிவிட்டுச் சென்று விட்டார்.

 

ஷைக் அபுல் கைர் (ரஹ்) சொல்கிறார்கள் : நான் மதீனா முனவ்வரா சென்றுஐந்து தினங்களாகியும் எனக்கு ஆகாரம் ஒன்றும் கிடைக்கவில்லை.  எனவே நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சன்னிதியிற் சென்று,அன்னாருக்கும் ஸய்யிதுனா அபூபக்கர், ஸய்யிதுனா உமர் (ரலி - அன்ஹுமா) ஆகியவர்களுக்கும் ஸலாம் கூறிவிட்டு, “எங்கள்நாயகமே! இன்று நான் உங்கள் விருந்தினன் என்று கூறிக் கொண்டு அங்கிருந்து சிறிது தூரத்திலுள்ள மிம்பருக்குப் பின்னே போய்ப் படுத்துக் கொண்டேன்”. என்னுடைய கனவில் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் காட்சியளித்தனர்.  ஸய்யிதுனா அபூபக்கர் (ரலி) அன்னாரின் வலது புறத்திலும் ஸய்யிதுனா உமர் (ரலி) அன்னாரின் இடது பக்கத்திலும் ஸய்யிதுனா அலி (ரலி) அவர்கள் அன்னாருக்கு முன்னேயும் இருக்கிறார்கள்.  ஸய்யிதுனா அலி (ரலி) அவர்கள் வந்து என்னை நோக்கி இதோ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்தருளி இருக்கின்றனர் வாருங்கள் என அழைக்க, நான் எழுந்து வந்து அன்னாரின் இருபுருவத்தின்மத்தியில் முத்தமிட்டேன்.  பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ரொட்டியொன்றை என் கையிற் கொடுத்தனர்.  நான் அதை வாங்கிப் பாதி ரொட்டியைத் தின்றிருப்பேன்அதற்குள்ளாக என் கண் விழித்து விட்டேன்.  பார்க்கும் போது மீதமுள்ள பாதி ரொட்டி என்னுடையகையிலிருந்தது.

 

ஒரு நாள் எனக்குக் கடும் பசியெடுத்தது. நான் அல்லாஹு தஆலாவிடம் துஆச்செய்தேன். அப்பொழுது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த ஆவி (ரூஹ்)வானத்திலிருந்து இறங்கி கொண்டிருந்தது.  அன்னாருடன்ஒரு ரொட்டியும் இருந்தது.  அதனை எனக்கு அளிக்கும் படிஅல்லாஹு தஆலா அன்னாருக்கு உத்தரவிட்டிருப்பான் போலும்.  அதை எனக்கு அன்பு கூர்ந்து அளித்தார்கள்.                            


தகவல் : ஆஷிகுல் கலீல் B.Com,  திருச்சி