ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்


சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்

தொடர்.....


அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:    கிப்லா ஹள்ரத்   ,  திருச்சி.


 

இஸ்ஹாக் இபுனு ராஹவைஹ் என்பவர்செல்கிறார்.

இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இமாம் அஹமது இபுனு ஹம்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் மக்காவில் இருந்தபோது நானும் உடனிருப்பேன்.  ஒரு நாள் ஸுப்யான் இபுனு உயைனாவையும் மற்ற உலமாக்களையும் விட இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எந்த அளவிற்கு மேலானவர்கள் என்று இமாம் ஹம்பலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்டேன்.  அதற்கு இமாம் ஹம்பலி ரஹ்மத்துல் லாஹி அலைஹி அவர்கள், இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்களிடம் நீர் செனறு மிகச் சிக்கலான வி­ஷயத்தைச் சொல்; அதற்கு இமாம் ஷாஃபிஈரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அளிக்கக் கூடிய பதிலால் அன்னவர்களின் உயர்வை நீ விளங்கிக்கொள்வாய் என்றார்கள்.  நானும் மிகுந்த ஆவலோடும் ஆசையோடும் இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தர்பாருக்குச் சென்றேன்.  அங்கே இமாமவர்களின் அருகில் அமர்ந்து,  “மக்கத்திலுள்ள வீடுகளை கூலிக்கு(வாடைக்கு) கொடுப்பதும், வாங்குவதும் ­ஷரீஅத் சட்டப்படி ஜாயிஸா? லாஜாயிஸா,(கூடுமா? கூடாதா?) எனும் கேள்வியை நானே எழுப்பி மக்கத்திலுள்ள வீடுகளை வாடகைக்குக் கொடுப்பதும் வாங்குவதும் ஜாயிஸல்ல என்றேன்.  இதற்கு இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள் எந்த பதிலும் அளிக்காமல் மெளனமாகவே இருந்தார்கள்.  நான் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டேன்.  அப்போதும் இமாமவர்கள் பதிலளிக்கவில்லை.

சிறிது நேரத்தில் ஈரான் நாட்டைச்சேர்ந்த அறிஞர் அங்கு வருகை புரிந்தார்.  அவர் மஜ்லிஸில் அமர்ந்தவுடன் பார்ஸி மொழியில் இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் பூரணத்துவம் இல்லை என்றேன்.  இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு பார்ஸி மொழி தெரியாது என எண்ணித்தான் கூறினேன்.  ஆனால் இமாமவர்களுக்கு நான் பார்ஸி மொழியில் பேசியது விளங்கிற்று.  உடனே இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள் என்னைப் பார்த்து, “நீர் எம்மிடம் தர்க்கம் புரியவா வந்தீர்?” என்று கேட்டார்கள்.  நான் “ஆம்” என்றேன்.  இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்னைப்பார்த்து, மக்கத்துப் பள்ளி அல்லாஹுதஆலா யாருக்கும் சொந்தமில்லை எனக் கூறியதைநீர் தவறாகப் புரிந்து கொண்டு மக்கத்திலுள்ள வீடுகளை வாடகைக்கு எடுப்பதும், கொடுப்பதும் தவறு என்று சொல்கிறீராஅல்லாஹுத்தஆலா லில்ஃபுகராஇ அல்லதீன அக்ரிஜூமின் தியாரிஹிம் என்று மக்கத்து ஃபுகராக்களுடைய (ஏழைகளுடைய) வீடு என்று சொல்லி வீட்டை அவர்களுக்கு உடையதாய் பேசினான்அல்லவா? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அநேக வீடுகளை அந்தந்த வீட்டுக்காரரை சொந்தமாக்கிப் பேசினார்கள் அல்லவா? கலீபாஹள்ரத் உமரிபுனுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறைச் சாலைக்காக ஒரு வீட்டை அதன் உரிமையாளரிடம் விலை கொடுத்து வாங்கினார்கள் அல்லவா? இவ்வளவு ஆதாரங்கள் இருக்க வீடுகளை வாடகைக்கு விடக்கூடாது வாங்கக் கூடாது என எப்படி நீங்கள் சொல்லலாம்என்றார்கள்.  அதற்கு நான் சிலதாபியீன்கள் கருத்தைக் கேட்டு இவ்வாறு கூறினேன் என்றேன்.  அப்போது இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல் லாஹி அலைஹி அவர்கள்எனக்கு அருகில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து இவர் யார்? என்றுகேட்டார்கள்.  இஸ்ஹாக் இபுனு இபுராஹீமுல் ஹன்லலி என்று சொல்லப்பட்டது.  பின்னர் இமாமவர்கள் என்னைப்பார்த்து நீர்தானா ஹுராஸான் தேசத்து ஃபக்கீஹ் என்று கேட்டுவிட்டு, நீர் அல்லாமல் வேறு எவராவது இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால் இரண்டுகாதுகளையும் பிடித்து முறுக்கி இருப்பேன் என்றார்கள்.  பின்னர் நான் ஸவாஉன் னில் ஆகிஃபு ஃபீஹி வல் பாதீ என்று வருகிறதே என்றேன்.  உடனே இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி   அலைஹி அவர்கள், கோபத்துடன் குர்ஆன்ஷ­ரீஃபில் இந்த வாக்கியத்திற்குமாகபுலாக (முன்பாக) வரக்கூடிய வசனத்தை ஏன் மறைக்கின்றீர்? ஒளிக்கின்றீர்என்று கேட்டுவிட்டு அல் மஸ்ஜிதில் ஹராமி அல்லதீ ஜஅல்னாஹு ஸின்னாஸி என்று ஹரமிலுள்ள வசனத்தை ஏன்விட்டு விட்டீர்? என்று கேட்டார்கள்.

இது குறித்து அபுல் ஹஸன் சொல்கிறார்கள் : இந்த சமாச்சாரங்கள் முழுவதும்நடந்தபிறகு இஸ்ஹாக் அவர்கள்  தங்களின் தாடியைப்பிடித்து வா! ஹயாயீ மின் முஹம்மது இபுனு இத்ரீஸ் (ஓ! இத்ரீஸ் என்பவரின் மகன் முஹம்மது என்னும் ஷாஃபிஈ அவர்களால் எனக்கு ஏற்பட்ட வெட்கத்தை நான்  என்ன வென்று சொல்வேன்.) எனக் கூறியதை பல முறைக்கேட்டுள்ளேன்! (இன்னும் இன்ஷா அல்லாஹ் நாம் சொல்வோம்)