ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  கௌதுல் அஉளம் (ரலி) பேசுகிறார்கள் !


கௌதுல் அஉளம் (ரலி) பேசுகிறார்கள் !


 

அல்லாஹ்வின் கட்டளையால் ஜனங்களைவிட்டு மறைந்துபோ! அவன் உத்தரவால் உன் இச்சையை விட்டும் விலகு! அவன் செயலால் உன் சித்தத்தை விட்டும் அப்பாலாகு! அதன் மூலம் அல்லாஹ்வின் ஞானம் ஊற்றி வைக்கத்தகும் பாத்திரமாகு! ஜனங்களை விட்டு நீ மறைவானவன் ஆவதன் அடையாளம், நீ அவர்களை விட்டும் முற்றும் துண்டிக்கப்பட்டவனாவதாகும்அவர்களுடைய எந்தக் கேளிக்கைகளிலும் கலந்து கொள்ளாதவனாகவும், அவர்களின் கட்டுப் பாட்டிலுள்ளவற்றிலிருந்து எதையும் எதிர்பாராதவானகவும் ஆகிவிடுவதுதான்.

நீ உன் ஆசைகளை விட்டும் விலகுவதாவது : உலக சுகபோகங்களைத் தேடும் முயற்சியையும், எண்ணத்தையும் முற்றும் ஒதுக்குவது; உன் நலன் கருதி நீ எம் முயற்சியிலும் ஈடுபடாதவனாகி,உன் சம்பந்தப்பட்ட வி­சயங்களில் உன்னை நம்பாதவனாகவும், சகலவற்றையும் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு, ஆரம்பத்தில் அவனிடமிருந்த அப்பொறுப்பு முடிவுவரை அவனிடமே இருக்கும்படி, (உன் தாயின்) கர்ப்பப்பையில் நீ இருந்தபோதும்தாய்ப்பால் அருந்தும் பருவத்தில் நீ தூளியில் தூங்கியபோதும் பொறுப்பு முழுவதையும் நீ அவனிடமே ஒப்படைத்திருந்ததுபோல இப்போதும் அவனிடமே விட்டுவிட்டு விலகுவதுமாகும்.

இறைவன் செயலால் நீ உன் சித்தத்தை விட்டும் விலகுதலாவது; நீயாக எந்த முடிவையும் செய்யக்கூடாது; எந்தத் தேவையுணர்வும் உன்னகத்தில் இருக்கக்கூடாது.  உன்னிடம் அல்லாஹ்வின் நோக்கமே முற்றும் நிறைந்திருக்கவேண்டும்.  அந்நிலையில் அல்லாஹ்வின் திருச்சித்தம் உன்னில் வெளிப்படும்.  அதனால் அல்லாஹ்வின் செயலும் சித்தமும் செயல்படும்வகையில், உன் உடலிலுள்ள சகல அங்கங்களும் செயலாற்றும், இதயம் அமைதியுறும். மனம் விரிந்தும் இருக்கும்.  உன் வதனத்தில் தேஜஸ் உண்டாகும்; உன் அகத்தே இன்பம் பெருகும்; நீ அவனுடன் தொடர்புள்ளவனாக ஆவதால் எப்பொருளின் தேவையும் இல்லாதவனாக ஆவாய். சக்தியின் கரம் உன்னை அழைக்கும்; சர்வலோக இரட்சகன் உனக்குப்போதனை புரிவான்.  தன்னிடமுள்ள வெளிச்சத்தாலும் ஆத்ம உடையாலும் உன்னை உடுத்தாட்டுவான்; கடந்த கால ஞானவான்களின்வரிசையில் உன்னையும் சேர்ப்பான்.

இதற்குப் பிறகு எந்தப் புலனாசையும், போக இச்சையும், சித்தமும் தங்காத ஒருவனாக தண்ணீரோ வேறு திரவமோ தங்காத உடைந்த பாண்டம்போல் நீஆகிவிடுவாய்.  சகல மானிடச் செயல் முறைகளும் உன்னை விட்டகலும்; உன் அந்தராத்மா அல்லாஹ்வின் சித்தமின்றி வேறு எதையும் ஏற்காது. 

 

இந்நிலையில் அற்புதங்கள் நிகழ்ந்தாலும் மானிட சக்திக்கு அப்பாற்பட்டகாரியங்களைச் செய்தாலும் உனக்கு இயல்வனவாகிவிடும்.  இவை உன்னிடமிருந்து வெளிப்படுபவையாகத் தோன்றும்; ஆனால் உண்மையில் இவை அல்லாஹ்வின் செயல்களாயும் அவன் திருவுளச் சித்தமாயும் இருக்கும்.

இவ்விதம்தங்கள் இதயங்கள் நொறுக்கப்பட்டுச் சகல மிருக இச்சைகளும் அகற்றப்பட்டுத்தெய்வ சித்தத்தால் உணர்ச்சி ஊட்டப்பட்டோரின் கூட்டத்தில் நீயும் அனுமதிக்கப்படுவாய். இந்தப் “படித்தரம்”  பற்றித்தான் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள், “உங்கள் உலகிலிருந்து மூன்று வி­சயங்கள் எனக்கு அருமையானவையாக்கப்பட்டுள்ளன.  அவை நறுமணம், பெண்கள், என் கண்களைக்குளுமையாக்கும் தொழுகை ஆகும் என்று, இவை முதலில் அவர்கள் கையைவிட்டுப் போய் நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி, மறைந்த பின்னர்அவர்களுக்கு அருளப்பட்டன.  அல்லாஹ் சொல்கிறான்,“எனக்காக மனமுடைந்தவர்கள் ஆனோரோடு நான் இருக்கிறேன் என்று.

எனவேஉன் ஆசைகளும் சித்தமும் உடைந்து நொறுக்கப்பட்டாலன்றி, அல்லாஹுத்தஆலா உன்னோடிருக்கமாட்டான். அவை உடைத்து நொறுக்கப்பட்டு, உன்னிடம் எதுவுமில்லாதவனானதும்அவனுக்கேயன்றி வேறு எதற்கும் நீ தகுதியற்றவன் ஆனதும், அல்லாஹ் உன்னை மீண்டும் சிருஷ்டிப்பான்; ஒரு புதிய சித்தசக்தியைத் தருவான்.  அது கொண்டு நீ உன் சித்தங்களைவெளியிடலாம்.  இவ்விதம் புதிதாகச் சிருஷ்டிக்கப்பட்டசித்தத்திலும் மீண்டும் உன் அகத்தின் சிறு நிழலாவது படுமானாலும் அல்லாஹுத்தஆலா அதை உடைத்தெறிவான்.  அதன் மூலம் நீ உடைந்த இதயத்தினனாய் இருக்கும்படி செய்வான்.  இவ்விதம் அவன் உன்அகத்தில் புதிய சித்தத்தை உண்டாக்கிக் கொண்டே இருப்பான்.  நீ அதில் தென்படும்போது அதை உடைத்துக் கொண்டிருப்பான்.  கடைசியில் விதிவசம் தன் முடிவை எய்தும்;(அவனுடைய சந்திப்பு நிகழும். “எனக்காக மனம் உடைந்தவர்களோடு நான் இருக்கிறேன்  என்ற தெய்வ வாக்கின் பொருள் இதுதான்.  “உன் அகத்தை அதில் காண்! என்னும் நம் வார்த்தையின்அர்த்தமும் உன் புதிய ஆசைகளில் கலந்து திருப்தியடை என்பதுதான்.

அல்லாஹ்நம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொல்லியிருப்பதாகஹதீஸ் குதுஸியில் வருவதாவது : “நபில் போன்ற இஷ்டப்பூர்வமான தொழுகைகள் மூலம் என் நல்லடியான்நான் அவனை என் நேசன் ஆக்கிக்கொள்ளும் வரை, என்அருகிலாதலை கேட்கிறான்.  நான் அவனை என் நேசனாக்கும்போது,அவன் கேட்கும் காதுகளாகவும், அவன் பார்க்கும் கண்களாகவும்,அவன் பற்றும் கரங்களாகவும், அவன் நடக்கும் கால்களாகவும்நான் ஆகிவிடுகிறேன்.  அதாவது அவன் என் மூலம் கேட்கிறான். என் மூலம் பார்க்கிறான்; என் மூலம் பற்றுகிறான்என் மூலம் புரிந்து கொள்கிறான்”.  இது நிச்சயமாக “ஃபனா” எனும் நாஸ்தி நிலையேயாகும்.  உன் அகம் சம்பந்தப்பட்ட வரையும் - சிருஷ்டியும்சக்தி சம்பந்தப்பட்ட வரையும் நீ நல்லவனாகவோ கெட்டவனாகவோ இருப்பதுபோல் சிருஷ்டி சக்தியும் நல்லதாகவோ கெட்டதாகவோ இருப்பினும்  நீ அழிக்கப்பட்டபின்னர் அவற்றில் இருந்து  எதையும் எதிர் பார்ப்பவனாக இருக்கமாட்டாய். அவற்றின் தீமைகளுக்கும் அஞ்சாய். இப்போது மிஞ்சுவதோ - ஆரம்பத்தில் அவன் சிருஷ்டிக்கத் தொடங்கு முன் இருந்தது போன்ற நிலையில் உள்ள அல்லாஹ்தான்அவன் உத்தரவுப்படி நன்மையோ தீமையோ விளையும்.    இவ்விதம் அவன் தன் சிருஷ்டிகளின் தீமையில் இருந்துஉனக்கு பாதுகாப்பருள்வான்; அவன் நன்மைக் கடலிலே உன்னை மூழ்கடிப்பான்.  இவ்விதம் நன்மை அனைத்தின் நிலைக்களனாகவும்சகல பாக்கியங்கள், மகிழ்ச்சி, இன்பம், ஒளி, அமைதி சாந்தம் ஆகியவற்றின் ஊற்றுக்காலாகவும் ஆகிவிடுவாய்.  எனவேஒலிமார்களின் பிரயாணத்தின் நோக்கமும், இறுதி லட்சியமும்,அடிப்படையும் ‘ஃபனா’ வாகவே இருக்கின்றன.  முன்னர் வாழ்ந்த கசல நாதாக்களும், தங்கள் சித்தம் இறைவன் திருவுளச் சித்தமாக மாறுவதற்காகவே தமது பல்வேறு நிலைகளில்இருந்து கொண்டும் துஆக் கேட்டு வந்தார்கள். தங்கள் வாழ்க்கையின் ஜீவிய பரியந்தம் தமது சித்தத்தை அழித்தொழித்து அல்லாஹ்வின்சித்தமாக அதை மாற்றி வந்தார்கள்.  இதனாலேயே அவர்கள் ‘அப்தால் (மாறியவர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள்.  இப் பெரியார்களின் கருத்தில் தமது சித்தத்தை இறைவன்சித்தத்தோடு தொடர்பு கொள்ளச் செய்வதே ஒரு பாவமாய் இருந்தது.

அவர்களுக்கு நினைவு மறதியோ, தாங்க முடியாத உணர்ச்சியோ, பயமோ உண்டானால், அல்லாஹுத்தஆலா தன் கருணையால் அவர்கள் உதவிக்கு விரைகிறான்; அவர்களுக்கு நினைவூட்டி, எழுப்பி, தம் ஞாபகமறதியிலிருந்து அவர்கள் மீட்சி பெற்றுத்தமது ரட்சகனின் பாதுகாவலைத் தேடுமாறு செய்கிறான். ஏனெனில், சித்தத்தின் கோளாறு முற்றும் இல்லாதவர்கள் அமரர்களைத்தவிர வேறு யாருமில்லை.  அமரர்கள் தமது சித்தத்தின் பரிசுத்தத்தோடு வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றனர்; நபிமார்கள் சதைப்பற்றின் ஆசைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரத்தில் பாதுகாக்கப்படுகின்றனர்.  நீதியொழுக்கத்தோடு நடக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ள ஜின்னுகளும் மானிடரிலுள்ள மற்றச் சிருஷ்டிகள் யாவும் இவ்விரண்டு வழிகளிலும் பாதுகாக்கப்படவில்லை.  நாதாக்கள் உடல் இச்சைகளிலிருந்தும் அப்தால்கள் சித்தத்தின் சுத்த மற்ற தன்மையிலிருந்தும் பாதுகாக்கப்படுகின்றனர்.  ஆயினும், இவர்களுங்கூட இத்தீமைகளிலிருந்துமுற்றும் விடுபட்டவர்களல்லர்.  காரணம் சிற்சிலசமயம் இத்தீமைகளின் பால் இவர்கள் திரும்பிவிடுதல் கூடும்.  ஆனால், அல்லாஹ் தன் கருணையால்இவர்களைப் பற்றிப்பிடித்து மீண்டும் ஞானம் பெற்றவர்களாக ஆக்குவான்.