ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   » ஞானத்துளிகள்


ஞானத்துளிகள்


 

தொகுத்தவர்: -  திருமதி G.R.J திவ்யா பிரபு       I.F.S   சென்னை

 

தராசுத்தட்டு ஒன்றில் கனமான பொருளை வைத்தால் தராசுமுள் ஒரு பக்கம் சாய்ந்துகொண்டுபோகிறது.  இரண்டு தட்டுகளிலும் எடை சமனாயிருக்குமானால்தராசு முள் மேல்முள்ளுடன் சேர்ந்து நிற்கும். அந்த மேல் முள் போன்றவன் இறைவன்.  தராசுமுள் போன்றது மனது.  மனது இறையோடு சேர்ந்து நடுநிலையிலிருக்கும்பொழுது யோகம் வாய்க்கிறது

யோகி ஒருவன் பரமாத்மனைசுவானுபூதியில் அறிய விரும்புகிறான்.  ஜீவாத்மனுக்கும்வ்பரமாத்மனுக்கும் இடையில் யோகம் பண்ணுவது வி­ஷயாதிகளிலிருந்து விடுவித்துப் பரமாத்மனிடம் நாட்டிவைக்க முயலுகிறான்.

தன் மனதை ஸ்திரப்படுத்துதல் பொருட்டு யோகி ஒருவன் தனது சாதனத்தின் ஆரம்பதசையில் ஏகாந்தத்துக்குச் சென்று ஓரிடத்தில் ஸ்திரமாக அமர்ந்திருந்து மனதை ஒரு முகப்படுத்தமுயலுகிறான்.

மனதுக்கு வாசஸ்தலங்கள் ஏழு என வேதங்கள் மொழிகின்றன.  அவ்வேழினுள் கீழிருக்கும் மூன்று நாபியிலும், குய்யத்திலும்குறியிலும் உள.  மனது அங்கிருக்கும்பொழுதுஉலக    வி­ஷயங்களிலேயே அது உழல்கிறது.

 

நான்காம் ஆதாரம் ஹிருதயத்தில் உளது.  மனது அங்கு வரும்பொழுது ஜோதி தரிசனம் கிட்டுகிறது.  ஆத்மபோதம் இலேசாக வருகிறது.  ஐந்தாவது ஸ்தானம் கழுத்திணுள் இருக்கிறது.  மனது அங்கு வரும்பொழுது சாதகனுக்கு ஆசைகள் அனைத்தும் அகன்றுபோகின்றன.  உலக விஷ­யங்களைப் பற்றி அவன் பேசான்.  அப்படி மற்றவர்கள் பேசும் பொழுது அந்த இடத்தை விட்டு அவன் எழுந்து போய்விடுவான்.  ஆறாவது ஆதாரம் புருவத்தில் இருக்கிறது.  சாதகனுடைய மனது, அதை எட்டும்பொழுது அல்லும் பகலும் அவனுக்குத் தெய்வக்காட்சி கிட்டுகிறது. எனினும் அதில் லயமாக சாதகனுக்கு இயலாது.  எஞ்சியிருக்கும் சிறிது அகங்காரம் அதற்குத் தடையாகிறது.  கண்ணாடிக்கு அப்புறம் இருக்கிற வஸ்துவைக் காண்கிறோம்.  ஆனால் அதைத்தொடமுடியாது.  அத்தகைய நிலை ஆறாவது ஞானபூமியில் உளது.  உச்சந்தலையில் சகஸ்கரத்தில் ஏழாவது ஞானபூமிஉளது.  மனது அதை எட்டும் பொழுது ஜீவபோதம் போய்விடும்.  பிரம்மபோதமே எஞ்சியிருக்கிறது.  அத்தகைய சமாதியை அடையும்பொழுது சரீரம் நெடுநாளைக்குஇராது.  இருபத்தொரு நாளில் அது உதிர்ந்து விடுகிறது.  சித்தன் பிரம்மத்தில் ஒன்றித்து நிற்கிறான்.

 

தராசில் இரண்டு முட்கள் இருக்கின்றன.  அவைகளுள் மேலேயிருப்பது அசைவதில்லை.  தராசின் விட்டம் மேலும் கீழும் அசைவதற்கு ஏற்பகீழுள்ள முள் அசைகிறது.  விட்டம் நடுநிலைக்குவந்தால் கீழ் முள்ளும் அசைவதில்லை.  மேல் முள்ளுக்கு நிகர் பரம்பொருள்.  கீழ் முள்ளுக்கு நிகர் மனது.  நடுநிலையெய்துகிற மனது பரம்பொருளைச் சாருகிறது.

சத்தியத்தின் மூலமாகவன்றி இறைவனை அடைய முடியாது.

உள்ளத்தை  முதலில் தூயதாக்கு.  பிறகு அதனுள் குருவை பிரதிஷ்டை பண்ணு.  வெறும் ஜெபிப்பைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.

உலகக் கிருத்தியங்களைச் செய்து கொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும்.  இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை.

மேட்டில் நீர் நிலைத்து நிற்காது. அது பள்ளத்துக்கு ஓடிவிடும்.  ஆதலால்பள்ளத்தில் சாகுபடி செய்வது எளிது.  மேட்டுநிலத்தில் சாகுபடி செய்வது கடினமானது.

பணிவுடன் இருப்பவன் இறைவன் அருளுக்குப் பாத்திரமாகிறான்.  வீண் கர்வம் படைத்திருப்ப வனுக்கு அது வாய்க்காது.

எக்காரணத்தும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுகிறவன் படிப்படியாக பாபம் செய்வதற்கு அஞ்சாத கீழான மனப்பான்மை பெறுகிறான்.

 

கோணலான மனப்பான்மை யுடையவர்களுக்கும் இறைவனுடைய அருளுக்கும் வெகுதூரம்.  எளிமையும் எதார்த்தமும் உடையன் அருளை எளிதில் பெறுவான்.

யானையின் தந்தம் முளைத்து வெளியே வருகிறது.  ஆனால் அது மீண்டும் உள்ளே போவதில்லை.  அங்ஙனம் மனிதன் ஒருவன் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவைக்க வேண்டும்.  சொன்ன சொல்லினின்று அவன் பிறழ்ந்துபோகலாகாது.

சாதகன் ஒருவன் சத்தியத்தினின்று சிறிதேனும் பிறழாதிருந்து பழகவேண்டும்.  சத்தியத்தில் நிலைத்திருப்பவனுக்கு இறையருள் வாய்க்கிறது.

இக்கலியுகத்தில் சத்தியமே பேசுதல் சிறந்ததொரு தபசு ஆகிறது.  சத்தியத்தைக் கொண்டு இறையை அடையலாம்.

காமத்துக்கு அடிமையாவது யோகத்துக்கு இடைஞ்சல்.  காமத்தால் மயங்குபவன் வி­சயத்தைச் சற்று விசாரித்துப்பார்க்க வேண்டும்.  இந்த உடலின் மீது இவ்வளவுபெரிய நாட்டம் எதற்காகஎலும்பு, தோல், தசைரத்தம், கொழுப்பு, முதலிய அருவருப்புக் குரியவைகளால் ஆக்கப்பட்டது ஆக்கை. இதன் மீது மனிதன் இவ்வளவு மையல் கொள்ளலாமா?

எடுத்த எடுப்பில் சாதகன் ஒருவன் முழுமையாக பிரம்மத்தைத் தியானிக்க முடியாது எனினும் பிரம்மத்தைத் தியானித்துப்  பழகுவதுநன்று.