ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   » வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..


வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..

தொடர்....                                                                                                                                          தொடர் எண்-21


தனிப்பெரும் தகுதி படைத்த அந்த அண்ணல் முஹிய்யத்தீன் (ரலி) அவர்களை வியந்து புகழ்ந்து பாராட்டிப் புகழ் மாலையாக. குணங்குடி மஸ்தான் சாஹிப்   அவர்கள்

“அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்

      அடக்கி விளையாடவல்லீர்!

அகிலமோரேழினையும் ஆடுங்கறங்குபோல்

      ஆட்டி விளையாட வல்லீர்!

மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே

      வைத்துவிளையாட வல்லீர்!

மண்ணகமும் விண்ணகமு மணுவைத் துளைத்ததின்

      மாட்டி விளையாட வல்லீர்!

கண்டித்த கடுகில் எழுகடலைப் புகட்டிக்

      கலக்கி விளையாட வல்லீர்!

கருதரிய சித்தெலாம் வல்லநீர் அடிமை என்

      கண்முன் வருசித்தில்லையோ!

நண்டளந்திடு நாழியாவனோ தேவரீர்

      நல்லடிக் காளாகியும்

நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு

      நாதன் முஹிய்யுத்தீனே!              என்றும்,

சொல்லான் முழக்கமிட்டோலமிடு வேதமுஞ்

      சொன்னதுட னின்ன மின்னஞ்

சுருதி முதலாகம புராணக்கலை யோதிய

      சுலோகங்களென் சொல்லுகேன்!

பல்லாயிரம் கோடியண்ட பகிரண்டமுன்

      பாதபங்கய மல்லவோ!

பரிபூரணானந்தமே யுனது முடியெனப்

      பகர்வதும் பொய்யாகுமோ!

வல்லானெனும் பெயர் உனக்குள தல்லாது

      மற்றவர் தமக்குமுளதோ!

வானவர் தினந்தினம் வந்துன்பதம்பணியும்

      மகிமை சொல வாயுமுண்டோ!

நல்லோர் தமக்கலாதெல்லார் தமக்குமுனை

      நவிலுதற் கெளிதாகுமோ

நற்குணங்குடி கொண்ட பாதுஷாவாக குரு

      நாதன் முஹிய்யுத்தீனே

 

 

 

மேற்கண்டவாறு மெய்ஞ்ஞான மேதை, அல் ஆரிபுல் காமில்,குணங்குடி மஸ்தான் என்னும் ஹள்ரத், ஸுல்தான் அப்துல்காதிரு ஆலிம் (ரலி) அவர்கள் உரைத்துள்ளார்கள்.

ஆகவேஎவரொருவர் திரிகரண சுத்தியுடன், அபாய வேளை அபயந்தேடி “எந்த வேளையும் யா முஹிய்யுத்தீன்னென்று நம்பினோர்க்குகந்து அந்தந்த வேளை வந்துதவிசெய்வேன் என்றருள் செய்தீர்! இந்த நல்வேளை இதுவேளை வேளையிது வந்தெனக்கருள் புரிவீர்முஹிய்யுத்தீனாண்டகையே!” என்று அழைத்துக் கூப்பிட்டு உதவி தேடுகின்றனரோ அன்னவர்கள் கைகொடுத்துக் காப்பாற்றப்படுவார்கள் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

எல்லாக் குத்புமார்களுக்கும் சக்ரவர்த்தியான ஹள்ரத், குதுபுல் அக்த்தாபுகெளதுல் அஃலம் முஹிய்யுத்தீன் (ரலி) அவர்கள் நிலை பற்றி இதுகாறும் பேசிவந்தோம்.  அவர்களது ஏவலாளர்களான, தொண்டர்களான ஏனைய குத்புகளும் கூட தங்களது அன்பர்களுக்கு உதவி புரியும் ஆற்றல்பெற்றிருக்கிறார்கள்.

ஸஹீஹுல் புகாரிக்கு ­ரஹ் எழுதியிருக்கும் இமாம் சஹாபுத்தீன்குஸ்த்தலானீ (ரஹ்) அவர்களது உஸ்த்தாது குருநாதராகிய, ஹள்ரத் இமாம், ஷைகுஅஹ்மது அபுல் அப்பாஸில் முர்ஸி, ஜர்ரூக்கி, மக்ரிபீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

“இன்னும் இயலாமை, கஷ்டம், பயங்கரம் உண்டான போது என்னுடைய முரீது யா ஜர்ரூக் என்று என் பெயரைச் சொல்லி அழைப்பானேயானால் நான் விரைந்து வந்து பாதுகாப்பேன்.”  

(தொடரும்)