ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   » இஷ்க் - ஃபனா - பகா


இஷ்க் - ஃபனா - பகா


 

கலீபா.ஏ.முஹம்மது காசிம் பி.எஸ்.ஸி.எம்.இ.டி.

 

ஓரிரவு பக்தாது நாயகர் கெளதுல்அஃலம் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரஹ்) அவர்கள் துயிலும் பொழுது, அவர்களின் கனவில்அவர்களின் அன்புப் பாட்டியார் அன்னை                           பாத்திமத்துஸ்  ஸஹ்ரா (ரலி) அவர்கள் திருத்தோற்றம் வழங்கி மகனே!எனக்கு இறைவன் நன்கொடையாக அளித்த கண்மணி மக்களாம் ஹஸன் ஹுஸைன் (ரலி) ஆகிய இருவருக்குமபதிலாக இரண்டு நன்மணி மக்களை எனக்கு அன்பளிப்புச் செய்துள்ளான்.  அவற்றில் ஒன்று நீர், மற்றொருவர்உம் வழித்தோன்றல் சையிது அப்துல் வஹ்ஹாபின் மகன் சையிது அப்துல் ஹமீதின் திருமகன் அலாவுதீன்அலீ அஹ்மது ஆவார் என்று நன்மாராயம் நவின்று விட்டு மறைந்தனர்.

இதன்பின் சில நாட்கள் கழித்து ஹிஜ்ரி 592 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல்பிறை 19 வியாழக்கிழமை தஹஜ்ஜுத் நேரத்தில் பீபீ ஹாஜா நன்மகவை ஈன்றெடுத்தார்.  அவர்தாம் அலாவுதீன் அலி அஹ்மது ஆவார்.

ஒருநாள் மார்க்க மேதைகளின் கூட்டம் நடந்தது.  அதில் கலந்து கொள்வதற்காக ஷைகு பஹாவுத்தீன் ஜகரிய்யா(ரஹ்) அவர்களும் வந்தனர்.  பாபா பரீதுத்தீன் கஞ்செ ஷ­கர் (ரஹ்) அவர்கள் ஷைகு பஹாவுத்தீன் அவர்களை வரவேற்றுக் கெளரவித்தார்கள். அப்பொழுது தெய்வீகக் காதல் (இஷ்க்) பற்றிய பேச்சு எழுந்தது.  அவர்கள் தெய்வீகக் காதல் (இஷ்க்) என்றால் இறைவனைத்தவிர உள்ள அனைத்தையும் சுவர்க்கம், நரகம், வேதனை,நன்மை, மனைவி, மக்கள் ஆகியஅனைத்தையும் மறந்து, இறைக்காதலில் இலயித்திருப்பது என்று விளக்கம்பகர்ந்தார்கள்.

இவ் வார்த்தைகள் அவர்களின் வாயிலிருந்து வெளிவந்தது தான் தாமதம். அவர்கள்அடுத்த கணம் தன்னுணர்வு இழந்து, ஒரு மாத காலம் வரை அந்த நிலையிலேயே இருந்தார்கள்.

மற்றொரு நாள், இறைநேசர் கஞ்செ­கர் (ரஹ்) அவர்களும், ஷைகு பஹாவுத்தீன் அவர்களும் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்.  அப்பொழுது பஹாவுத்தீன் அவர்கள் (தக்வா) என்பது மூன்று வி­சயங்களைக் கொண்டதாகும்.  அவை : 1 ) உலகின் நிலையை அறிந்து, அதன் மீது நம்பிக்கைக்கொள்ளா திருத்தல். 2) மறு உலகை விரும்புவதும் அதற்கான தயாரிப்புகளைச் செய்வதும். 3)  இறைவனின்பேரருளில் நம்பிக்கை வைப்பதும் என்று விளக்கம் பகர்ந்தார்கள்.

அலாவுத்தீன் அலி அஹ்மது ஸாபிரி (ரஹ்) அவர்களின் மாணவர்களில் ­ஷம்சுத்தீன் துர்க் (ரஹ்)என்பவர் மிகச் சிறந்த ஒரு குத்பாவார்.  தம்குருநாதரின் வாணாள் என்று முடியும் என்று அவர்கள் கோடிட்டுக் காட்டியது அவர்களின் நினைவுக்கு வந்தது.  அந்த அறிகுறி தென்பட்டவுடன் தமது குருநாதரின் வாழ்நாள் முடிந்ததை ஒரு நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொண்ட ­ஷம்சுத்தீன் துர்க் (ரஹ்) அவர்கள், தமது குருநாதர்அவர்களின் இருப்பிடம் நோக்கிப் பிரயாணமானார்கள். சற்று தொலைவில் தான் சென்றிருப்பார்கள். வழியில் ஒரு கல் தடுக்கி அவர்கள் கீழே விழுந்தார்கள்.  என்ன வியப்பு! அவர்களால் தம் கண்களையே நம்ப இயலவில்லை.  கல்யரில் அவர்கள் தம் குருநாதரின் புனித உடலின்அருகே நின்று கொண்டிருந்தார்கள்.  அவர்களின்உடலில் இருந்து ஜலாலியத்தின் ஒளி வெளி வந்து நாலா திசைகளிலும் பரவிக் கொண்டிருப்பதையும் அவர்களின் உடலை ஒரு சிங்கம் பாதுகாத்துக் கொண்டு நிற்பதையும், அது தம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக் கொண்டு சென்று விட்டதையும் கண்டார்கள்.

இதன் பின் தம் குருநாதரின் புனித உடலை அணுகி, அப்பொழுது மலர்ந்த செந்தாமரையையும் வென்ற நிலையில் இலங்கிய அவர்களின் முகத்தைத் தரிசித்தபின் அவர்களை நல்லடக்கஞ் செய்வதற்காக அலுவல் களை மேற்கொள்ளலானார்கள் அப்பொழுதுதிடீரென பச்சை முக மூடி அணிந்த இருவர் புரவி மீது வந்து இறங்கினர்.  அவர்களில் ஒருவரின் கையில் கஃபன் துணி இருந்தது.  மற்றொருவரின் கையில் கஸ்தூரியும் குவளையும் இருந்தன.  அவர்களின் ஒருவர் சிக்கி முக்கி கல்லினால்  நெருப்பு மூட்டி, தண்ணீரைசுட வைத்து, ஸாபிர் (ரஹ்) அவர்களின் புனித உடலைக்குளிப்பாட்டினார். மற்றொருவர் கஃபனிட்டுஜனாஸா தொழ வைத்தார்.  ­ஷம்சுத்தீன் துர்க் (ரஹ்)அவர்கள் அத்தொழுகையில் கலந்து கொண்டு தொழுது முடித்துத் திரும்பியபோது ஆயிரக்கணக்கானோர் அணியணியாக அதில் கலந்து கொண்டதைக் கண்டு பெரிதும் வியப்பெய்தினர்.  பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஸாபிர்(ரஹி) அவர்களின் புனித உடலை நல்லடக்கஞ் செய்தனர். அதன்பின் பச்சை முகமூடி அணிந்த இருவரும்திரும்பிப்போக முற்பட்டபொழுது ஷ ­ம்சுத்தீன் துர்க் (ரஹ்) அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கி நடத்தியவரின் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டுதாங்கள் எவரெனக் கூறுங்கள்.  தங்களின் முகத்தைதிறந்து காட்டுங்கள்.  என்னிடம் எவரேனும் உம்முடையகுருநாதரின் ஜனாஸா தொழுகையை எவர் முன் நின்று நடத்தினார் என்று வினவின் நான் என்ன பதில்கூறுவது என்று வினயமாகக் கேட்டார்கள். அப்பொழுது அவர்தம் முகத்திரையைத்திறந்தார்.  நடப்பது நிசமா, பொய்யா, என்று ­ஷம்சுத்தீன் துர்க் (ரஹ்)அவர்களால் நம்ப இயலவில்லை.  ஸாபிர் (ரஹ்) அவர்களின் மலர் முகமே அவர்களின் கண் முன் காட்சி வழங்கியது. அப்பொழுது ஸாபிர்(ரஹ்) அவர்கள் தம் மாணவரை நோக்கி என்னைப் போன்ற மிஸ்கீன் (ஏழை)கள் தங்கள் ஜனாஸா தொழுகையை தாங்களே தொழ வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறினார்.

இப்பொழுது ­ஷம்சுத்தீன் துர்க் (ரஹி) அவர்களுக்குதாம் முன்னர் அவர்களிடம் கேட்ட ஒரு கேள்வி நினைவுக்கு வந்தது.  உடனே அவர்கள் ஸாபிர் (ரஹி) அவர்களை நோக்கி ஷைகு அவர்களே, முன்னர்நான் தங்களிடம் ஃபனா, பகா பற்றி வினவிய பொழுது அதற்கான பதில்பின்னர் எனக்குக் கிடைக்கும் என்று கூறினீர்கள். அதற்கான பதிலை இப்போது எனக்குக் கூறுங்கள் என்று வேண்டினார்கள்.  அப்பொழுது ஸாபிர் (ரஹி) அவர்கள் புன்முறுவல் பூத்தவண்ணம் தம் அடக்க விடத்தைச் சுட்டிக்காட்டி அதுவே ஃபனா என்றும் பின்னர்தம்மைத் தொட்டுக் காட்டி இதுவே பகா என்றும் கூறினர்.      மேற்கூறியஷைகு மார்களின் புனித வாழ்வின் மூலம் இறைக்காதலை (இஷ்க்) தக்வா, ஃபனா, பகா என்பதன் உண்மையான தாற்பரியத்தை அறிந்து, அதன்படிசெயல்பட நமக்கு ஹக் அருள்புரியுமாக ஆமீன். ஆமீன் யாரப்பில் ஆலமீன்.