ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  அறிவுலகம் போற்றும் அண்ணலார் !


அறிவுலகம் போற்றும் அண்ணலார் !

ஆலிம்புலவர் S. ஹுஸைன்முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி - மன்பயீ

 

மக்கள் போற்றும் மாபெரும் அறிஞர்கள்

மக்கா நபியைப் போற்றுகிறார்

மாநபி போல்ஒரு மானிட ரில்லை

வாய்மலர்ந் தேபுகழ் சூட்டுகிறார்       

 

 

மைக்கேல் ஹார்ட்எனும் அறிஞர் யூதர்

      மாபெரும் உலகத் தலைவர்களில்

நூறு தலைவரைத் தேர்வுசெய்தார் அதில்

      மாநபியைமுதலிடத்தில் வைத்தார்.

டால்ஸ்டாய் என்னும் இலக்கிய மேதை

      நபிகளை இலக்கிய மாய்ப்படித்தார்

இறந்தபின் பார்த்தால் அவரது அங்கியில்

      நபிசரிதை  நூல் வைத்திருந்தார்

பெர்னாட்ஷா எனும் ஆங்கில மேதை

      பெருமானா ரில்மனம் பறிகொடுத்தார்

முஹம்மதைப் போன்றவர் வல்லமை பெற்றால்

      உலகையே மாற்றிட முடியும்என்றார்

மாபெரும் வீரர் நெப்போலியனோ

      மாநபி மார்க்கம் பற்றிநின்றார்

திப்புசுல்தானுடன் நட்புறவாடி

      தீன்சகோ தரர்போல் நடந்துவந்தார்

பாதிரி யொருவர் தன்மகனை தீன்

      மார்க்கம் படித்திட அனுப்பி வைத்தார்

அரபியைப் படித்து இஸ்லாத்தை அழிக்க

      பாதிரியவரோ திட்டமிட்டார்

பிக்தால் அவரோ நபிகளைப் படித்தார்

      பெருமானாரை கனவில் கண்டார்

 குளோரியஸ் குர்ஆன் தஃப்ஸீர் எழுதி

      முஸ்லிமாகி உயர்ந்து நின்றார்

அல்லோப நி­த்து பவிஷ்ய புராணம்

      அரிய இந்து வேதங்களும்

சமஸ்கிருதத்தில் சான்றுகளோடு

      சாந்த நபியைப் போற்றினவே

பைபிள் அஹ்மது நபி வருவார்என

      அழகாய் முன்னறி வித்ததுவே

புத்தரும் பூமான் வருகை பற்றி

      பூடகமாக சொல்லி வைத்தார்

மகாத்மா காந்தி  நேரு கவிக்குயில்

      பரம ஹம்ஸரும் பாரதியும்

பெரியார் அண்ணா கலைஞர் இந்திரா

      வலம்புரி ஜானொடு தமிழன்பனும்

அண்ணலைப் படித்தார் அறிவுரை எடுத்தார்

      அழகிய முன்மாதிரி உரைத்தார்

இன்றும் கவிஞர் எத்தனை யோபேர்

      இரசூலைப் புகழ்ந்து மெய்சிலிர்த்தார்

அறிவு படைத்த எவரும் ஒருமுறை

      அண்ணலைக் கற்கும் வாய்ப்பிருந்தால்

பறிகொடுத் திடுவார் நெஞ்சை நபியிடம்

      பக்தராய் மாறிப் போய்விடுவார்

தெரியப் படுத்துதல் நம்கடமை ஆம்

      தீனோரே இதை உணர்ந்திடுவீர்

அறிமுகம் செய்வீர் அண்ணலை மானிடர்

      அனைவரும் பயனுற ஒளிபெறவே.