ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


முக்கியமான விச­யம் என்னவென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரமாவது தவ்ஹீது சம்பந்தமான வி­சயங்களை ஆராய்ந்தறிய வேண்டும்.


ஒரு பாயில் அமர்ந்திருக்கும்போது பாய் என்பது என்ன? அதன்மூலம் என்ன? பாய் என்பது தான் உண்மைப் பொருளா? கோரைகளால் தாமே பாய் வேயப்பட்டிருக்கிறது?அதைப் பாய் என எப்படிக் கூற முடியும்? என்றெல்லாம் ஆராய்ந்து பாருங்கள்.

அதுபோல,ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தால், அந்த நாற்காலி எப்படி உருவானது? அதன் மூலப் பொருள்என்ன? அது எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்றெல்லாம் ஆராய்ந்து பாருங்கள்.

நீங்கள்செய்யக்கூடிய ஒவ்வொரு தொழிலிலும் இவ்வாறு நீங்கள் ஆராய்ந்து வந்தால் உண்மையை விளங்கிக்கொள்ளலாம்.

வலிமார்கள் யார்?:

            இப்படிச்சிறிய சிறிய வி­சயங்களை யெல்லாம் ஆராய்ந்தறிந்தவர்கள் தாம்பிற்காலங்களில் வலிமார்களாக விளங்குகின்றனர். ஆனால்சிலர், வலிமார்கள் என்றால் வித்தை செய்பவர்கள் என(த் தவறாக) விளங்கி வைத்துள்ளனர்.            தம்மைஅல்லாஹ்வுக்காக தியாகம் செய்தவர்கள் தாம் வலிமார்கள்.

 

இன்று சிலர் கூட்டமாக தெருக்களில் செல்வதை அல்லாஹ்விற்காகச்செய்யும் தியாகம் எனக் கூறவியலாது.  அல்லாஹ்விற்காகஅனைத்தையும்  தியாகம் செய்வதுதான்  அல்லாஹ்வுடைய பாதை ஆகும்.

இதனைநன்கு விளங்கிக் கொண்டால் அது வருங்காலத்தில் உங்களுக்கு மிகுந்த சிறப்பைத் தரும்.

            சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்களின் அமுதமொழிகள் தொகுப்பான மனிதா நூலிலிருந்து......