ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​  விஸ்வரூபம்

முரீதுகளின் அனுபவக் கூற்று!


விஸ்வரூபம்


    வாப்பா நாயகம் அவர்களை ஐந்து வருடங்களுக்கு  முன்பாக வழுத்தூருக்கு அவர்களைப் பார்க்கப் போனேன் அவர்கள் குத்பு தெரியுமா? என்று தாய் பிள்ளைகள் சொன்னார்கள்.  நான் நினைத்தேன் குத்பாக இருக்குமோ.... என்னமோ....என்று குழம்பினேன்!  சைத்தான் குணம் அப்படிதானே இருக்கும்!


    எல்லோரும் வரிசையாகப் போனோம். முதலில் நான்கு பேர்களை அனுப்பினார்கள்.   ரூமுக்குப்போகும் பொழுது நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள்.   என் பிள்ளை உடல் நலத்தைப் பற்றி சொன்னேன். சொல்லும் பொழுது நின்ற வண்ணமாகவே பார்க்கிறேன்.  பிறகு நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஆனால் வாப்பா நாயகம் எழுந்து வந்தது போலவும் தெரியவில்லை....உட்கார்ந்தது போலவும் தெரியவில்லை.ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். நான் வெளியில் வந்ததும் என்னுடன் வந்தவர்களில் என்பக்கத்தில் உட்கார்ந்த பெண் சொன்னார், ஏன் கழுத்தை அன்னாந்து பார்த்தே பேசினாய்? என்று என்னிடம் கேட்டார்.  அதற்கு நான் சொன்னேன். நின்று இருந்தார்கள். அதனால் தான் அன்னாந்து பேசினேன் என்று சொன்னேன். அதற்கு என்னிடம் அந்தப் பெண்  அவர்கள் நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே இல்லையே என்று சொன்னார். நான் தப்பாக எண்ணினோமோ? அவர்கள் குத்புதான் என்று உண்மையை உணர்ந்து கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை வாப்பா நாயகத்தை வருடா வருடம் சந்தித்து வருகிறேன். துவா ஸலாம்.


இப்படிக்கு,   கோவிந்தாகுடி ய. மஹமூதா பீவி


    இதே போன்ற அனுபவம் இன்னொருவருக்கும் ஏற்பட்டது. அவர், சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் பிரயாணத்தில் இரண்டொரு நாள் அவர்களுடன் இருக்கும் பாக்கியம் பெற்றுவிட்டு, ஊருக்குப் புறப்பட எண்ணி ஷைகு நாயகம் அவர்களிடம் கூறி உத்தரவு வாங்க, அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து, ஊருக்குப்புறப்பட அனுமதி பெற்று பாதமுத்தி செய்யக் குனிந்து எழுந்து பார்க்க, அதுவரை பார்க்காத பிரமாண்டமான தோற்றத்தில் அவர்களைக் கண்களால் பார்த்துக் கொண்டே வெளியே வந்துவிட்டார். வெளியே வந்தபின் தான் ஒரு நிமிடம் திகைத்து ஆஹா! இது என்ன? புதுமையான காட்சியாக இருக்கிறதே என சிந்திக்கிறார்!