ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​    மணிச்சுடர் நாளிதழ் வெள்ளிவிழா 


மணிச்சுடர் நாளிதழ் வெள்ளிவிழா 

சிறப்பு மலர்

 

    மிழ் பேசும் முஸ்லிம் சமுதாயத்திற்கென   ஒரு நாளிதழ் இல்லையே என்ற இதய ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் மர்ஹும் ஏ.கே. அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களால்  தொடங்கப்பட்டு, பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் ஆசிரியராகப் பேற்று வெள்ளிவிழா கண்டிருக்கிறது மணிச்சுடர் நாளிதழ்.


    திரும்பிப் பார்க்காத சமுதாயத்தை உற்றுப் பார்த்து அதன் மேம்பாட்டுக்காக உழைக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உயிர்த்துடிப்பாக வந்து கொண்டிருக்கிறது.  என் சமுதாயம், என் சமூகம், என் செய்திகள், என் உலகம் என தமிழ் முஸ்லிம் சமுதாயம் இன்னும் விழிப்புப் பெறவில்லையென்பது வேதனை விபத்து!


    இறையருளால்- சமுதாய அக்கறை கொண்ட- நல்லவர்களின் உதவியால் மணிச்சுடர் 25 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது.   இந்த 25 ஆண்டுகளாக அது என்ன சாதனை செய்திருக்கிறது என்பதன் சான்று ஆவணமாக- காலடித்தடமாக வெளிவந்திருக்கிறது.  இத்தனை காலம் நாம்   முஸ்லிம் லீக்கின்  அரசியலில் பணியை அறியவில்லையே என வருந்துவோருக்கு பழைய வரலாறை அறிந்து கொள்ளும் காலப் பெட்டகமாக இது மலர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நூலகத்திலும்,வீடுகளிலும், அமைப்புகளிலும் இருப்புவைத்துப் படிக்க வேண்டிய அருமையான மலர்.