ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​     சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்)


சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்)


அறபுத் தமிழில்:  மராகிபுல்மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:  கிப்லாஹள்ரத், திருச்சி.


    மாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், இமாம் அஹ்மத்  இபுனு ஹன்பல் (ரஹ்) அவர்களை அடிக்கடி சந்திக்கச் செல்வது வழக்கம்.  இதனைக் குறித்து பொறாமைக்காரன் ஒருவன், இமாம் ஹன்பலி (ரஹ்) அவர்கள் தங்கள் மாணவர் தானே ? அவரைத் தாங்கள் சென்று சந்திக்க வேண்டுமா? என்று கேட்டான்.  அதற்கு இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள், ஒரு கவியால் பதிலளித்தார்கள்.

 

    இமாம் அஹமத் உங்களைத் தரிசிப்பதில்லை; அவர் என்னை வந்து கண்டாலும் நான் அவரைப் போய்க் கண்டலும் இந்த இரண்டு நிலையிலும் சிறப்பு (வரிசைப்படு) அவருக்குத் தான் என்றேன்!


    இந்த சேதி இமாம் அஹ்மத் இபுனு ஹன்பலுக்கு எட்டியவுடன் அவர்களும் ஒரு கவியாலே பதிலளித்தார்கள்


 நீங்கள் நம்மை தரிசிப்பீர்களாயின்,அது உங்களிலிருந்து எங்களுக்கு நன்கொடையருளுகிறீர்கள்,  (வருஷை) சிறப்பைக் கொண்டு!


    நாங்கள் தங்களைத் தரிசித்தோமேயானால் தங்களின் வருஷை என்னும் நன்கொடையைப் பெறுவதற் கல்லாமல் வேறில்லை.ஆகையால் இவ்விரு நிலைகளையும் நாங்கள் இழந்து போகாமலிருக்க வேண்டும்! உங்களைக் கோபப்படுத்தியவன் உங்களிலிருந்து நாடியதைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்து தொலையட்டும்!


ஹள்ரத் இஸ்ஹாக் இபுனு ராஹவைஹி (ரஹ்)  கூறுகிறார் :


    இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், இமாம்கள் மற்றும் அறிஞர்களுக்கு “கதீபாக” இருக்கின்றார்கள்.


ஹள்ரத் அபூ ஸவ்ர் (ரஹ்) கூறுகிறார் : நானும், இஸ்ஹாக் இபுனு ராஹவைஹி (ரஹ்) அவர்களும் ஹுஸைனுல் கீராயீஸிய்யும் மற்றும் ஈராக் தேசத்திலிருந்த சகல அறிஞர்களும் பித்அத்திலிருந்து (நூதன அனுஷ்டானத்திலிருந்து) விலகியது, இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் அறிவுப் பொக்கி­ஷங்களைக் கற்றதன் பின்னரே தான்!


    இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைப் போல் யான் ஒருவரையும் கண்டதில்லை; இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களும் தங்களைப் போல் ஒருவரைக் கண்டதில்லை.(அல்ஹம்துலில்லாஹ்)


ஹள்ரத் ஹுமைதிய்யீ (ரஹ்) கூறுகிறார்கள் : மார்க்கச் சட்டங்களை தங்கள் விருப்பத்தின்பயெல்லாம் கூறி வந்தவர்களைத் தட்டிக் கேட்க எங்களுக்கு ஆசை, ஆர்வம் இருந்தன! எங்கிலும் துணிவு இல்லாதிருந்தோம்! ஆனால் ஸய்யிதுல்  ஃபுகஹாவான இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களிடமிருந்து அறிவுப் பெட்டகங்கள் வெளியான பிறகு தான் இஷ்டப்படியெல்லாம் மார்க்கச்சட்டங்களைப் பேசியவர்களைப் புரட்டிப் போடும் ஆற்றல் பெற்றோம்!

(இன்ஷா அல்லாஹ்... ஆற்றலின் அடுத்த இலக்கு.)