ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​ அன்னை கதிஜா நாயகி (ரலி)


ஸஹாபாப் பெண்மணிகள்

அன்னை கதிஜா நாயகி (ரலி)

(தொகுப்பு : மஸ்ஊதா ஸலாம், திருச்சி.)


    ருமுறை ஹள்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடம் வருகை புரிந்து, ஹள்ரத் கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், ரஹ்மத் நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள்.  சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள் என்று கூறினார்.


(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817)


    ஹள்ரத்  ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்:  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கதீஜா அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்த்தால் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும் பொறாமைப்படாத அளவு நான் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  திருமணம் செய்தார்கள்.  அல்லாஹ்வும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் கதீஜா (ரலி)அவர்களுக்குச் சுவர்க்கத்தில் முத்து மாளிகை யுண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவியுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.                                                                                             

(நூல் : புகாரி 3817, முஸ்லிம் 4820)


    அன்னை கதீஜா ரலிலல்லாஹு அன்ஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10வருடங்கள் வாழ்ந்து தமது 65ஆம் வயதில் கி.பி. 621 ல் மரணித்தார்கள்,அவர்கள் அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த பெருமானாரின் சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள். சிறிய தந்தையினதும் ஆருயிர் மனைவி கதீஜா (ரலி) அவர்களினதும் மரணத்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள்.  


    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மட்டுமின்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது.  இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாண்டு “ஆமுல் ஹுஸ்ன்”(துக்க ஆண்டு) என அழைக்கப்படுகிறது.


உம்முல் முஃமினீன்       - கதீஜா ரலியல்லாஹு தஆலா அன்ஹா    


வ.எ            முக்கியக் குறிப்புகள்                                விபரங்கள்                    ஆண்டுகள்


1.                  பெயர்                                            கதீஜா பின்த் குவைலித்


2.                   சிறப்புப் பெயர்                          தாஹிரா(தூய்மையானவர்)


3.                   தந்தை பெயர்                            குவைலித் இப்னு அஸத்


4.                   தாயார் பெயர்                            பாத்திமா பின்த் ஸாயிதா


5.                   கணவர்கள்                                1. அபூஹாலா இப்னுஸுராரா

                                                                              2. அதீக் இப்னு ஆயித்

                                                                              3. முஹம்மத் (ஸல்)


6.                   குழந்தைகள்                              ஹிந்த்,ஹாலா

                           3-பேர்.                                        (முதல் கணவர் மூலம்)


                                                                                ஹிந்த்

                                                                                (2-வது கணவர் மூலம்)


7.                குழந்தைகள் 6 பேர்                    1. காஸிம்2. அப்துல்லாஹ்

                                                                                (தையிப், தாஹிர்)

                                                                                (நபி மூலம்)

                                                                                3. ஸைனப், 4. ருகையா,

                                                                                5. உம்மு குல்தூம் 6. பாத்திமா

                                                                                (நபி மூலம்)


10.               சகோதரிகள்                                 1. ஹாலா பின்த்  குவைலித்

                                                                                2. ருகையா பின்த் குவைலித்


11.               பிறந்த ஊர்,                                    மக்கா, கி.பி.556                                                    கி.மு.68

                    தேதி


12.              இறந்த ஊர்,                                    மக்கா, ஜன்னத்துல்                                            கி.பி.621

                    அடக்கம், தேதி                             முஅல்லா(ரமளான் மாதம்)


13.             திருமணம் நடந்த                           மக்கா                                                                       கி.மு. 28

                  ஊர்  


14.            மஹர்                                                இருபது ஒட்டகைகள்                                          கி.மு.3


15.        குடும்ப வாழ்க்கை                                                                                                               25ஆண்டுகள் 


(அன்னையாரின் அருஞ்சிறப்புகளைஇன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் அவதானிப்போம் !)