ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​  புனித கர்பலா நினைவு நாள் விழா!

திருச்சி அறபுக் கல்லூரியில்

புனித கர்பலா நினைவு நாள் விழா!


    திருச்சி மணப்பாறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமீஆ யாஸீன் அறபுக் கல்லூரியில்  சையிதுனா இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் ­ஹீதான கர்பலா நினைவுதின விழா நடைபெற்றது.


    நிர்வாகக் குழுத் தலைவர் தலைமை கலீஃபா எம். ஹபீபுல்லாஹ் பி.எஸ்.ஸி. ஹக்கிய்யுல் காதிரி தலைமை தாங்கினார். திண்டுக்கல் மறைஞானப் பேழை ஆன்மிக மாத இதழ் ஆசிரியர் கலீஃபா ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது மன்பஈ, பேராசிரியர் என்.ஸயீது முஹம்மது ஆலிம்  மிஸ்பாஹி, பேராசிரியர் என்.முஹம்மது ரஃபீஉத்தீன் நூரீ, முகவை இமாம் வி.எம். முஹம்மது ஹஸன் யாசீனிய் ஆகியோர் சிறப்புரையற்றினார். முன்னதாக கல்லூரி முதல்வர்டி மக்தூம்ஜான் எம்.எஸ்.ஸி.எம்.எட்.  வரவேற்புரையாற்றினார்.  ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர் ஏ. ஸத்தார்கான் யாஸீனிய் இறைமறை வசனங்களை ஓதினார். கல்லூரி மாணவர்கள் ஏ. ஹக்கீம் பாஷா மற்றும் யூசுப்கான்(வஹ்ததுல் வுஜூது) ஏகாந்தப் பாடல் பாடினர். கல்லூரி மாணவர் பி. ஷாஹுல் ஹமீது கிப்லா ஆசிரியர்  இயற்றிய அறபுப்பாவைப் பாடினார்.


    அறபுக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற கம்ப்யூட்டர் இலவச பயிற்சி  முகாமில் கலந்து கொண்டு சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற ஜார்ஜ் பிரிட்டோ, ரவிக்குமார், ஜவகர் மற்றும் புகழேந்தி ஆகியோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


    திருச்சி கிப்லா மாத இதழ் ஆசிரியர் என். அப்துஸ்ஸலாம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பெரம்பலூர் அல்ஹாஜ் ஜி.ஷ­ர்புத்தீன் நன்றியுரையாற்றினார்.  பெரம்பலூர் கலீஃபா அல்ஹாஜ் ஏ. முஹம்மது காஸிம் பி.எஸ்.ஸி.எம்.எட் (துஆ) சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.


    (முஹர்ரம் நோன்பு) இஃப்தார் நிகழ்ச்சியோடு நிறைவு பெற்ற இவ்விழாவில் திருச்சி,  திண்டுக்கல், பெரம்பலூர் வழுத்தூர்  முரீதுகள் மற்றும் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர், மேலாளர், யாஸீனிகள் மற்றும் இந்நாள் மாணவர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்!.


தகவல்: உமர் கய்யாம். (ஆறாம் படிவ  மாணவர், ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி, திருச்சி)