ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Dec 2011   »  அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு


அத்தியாயம் : 84  ​    - இப்னு மீரான் ஹக்கிய்யுல் காதிரிய்அண்ணலாரின் பல் ­ஹீதானது

 

        உஹது யுத்தம் உச்சக் கட்டத்தைஅடைந்து விட்டது.  எதிரிகளின் தாக்குதல்இரண்டு பக்கங்களிலும் இருந்ததால் முஸ்லிம் வீரர்கள் நிலை குலைந்து போனார்கள்.  உடனே மாவீரர் ஹள்ரத் அலி (ரலி) அவர்கள்தலைமையில் திரண்ட தோழர்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்றார்கள்.  எதிரிகளின் குதிரைப்படையினரின் தாக்குதல்களைசமாளிக்க முடியாத சில முஸ்லிம் வீரர்கள் மலை மீது ஏறி தப்பி ஓடினார்கள்.  அவர்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூவி அழைத்தும் அவர்கள் தப்புவதிலேயே குறியாய் இருந்தார்கள். இப்படியும் சிலர் அன்றும் இருக்கத்தான்செய்தார்கள். முஸ்லிம் வீரர்களை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எதிரிகள் அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நெருங்கி விட்டார்கள்.  அப்போது அண்ணலாரும் கூட  நின்றிருந்த தோழர்களும் அம்புகளை எதிரிகளின்மீது எறிந்து கொண்டேயிருந்தார்கள்.


      அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேலானபாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தோழர்களில் பலர் அவர்களைச் சூழ வந்து நிற்கத்தொடங்கினார்கள்.  அப்படி வந்தவர்களில்முதன்மையானவர்கள் வஹ்பும் ஹாரிதும் ஆவர்.எதிரிகளின் குதிரைப் படையினர் இடது பக்கமாக அண்ணலாரை நெருங்கி வந்துவிட்டார்கள்.  உடனே அண்ணலார், “இப்படையினரையார் எதிர்க்கப் போகிறார்கள்?” என்று கேட்க, உடனே வஹ்பு (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான்,நான்! என்று குரல் கொடுத்தார். அடுத்த கணம் உருவிய வாளோடு பாய்ந்தார். ஏதோ ஒரு பெரும் கூட்டமே நின்று எதிர்ப்பது போல அக்குதிரை வீரர்களைபின்னடையச் செய்து விட்டார். சற்று நேரத்தில் மற்றொரு பக்கத்திலிருந்து குதிரைப்படையினர் முன்னுக்கு வரவே, “இப்போது இவர்களை எதிர்ப்பவர்கள்யார்?” என்று அண்ணலார் கேட்டார்கள்.  அப்போதும் வஹ்பு (ரலி) அவர்களே, “யாரஸுலல்லாஹ்! நானே இவர்களை எதிர்கொள்கிறேன்” என்று கூறிக் கொண்டேஅவர்கள் மீது பாய்ந்து சென்றார்.  முன்போலவே அவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.


      அப்போதும்,அப்பாவிகள் விடவில்லை. மூன்றாம் முறையும் ஒரு பிரிவினர் முன்னேறிவந்து விட்டார்கள்.  “இப்போது இவர்களைஎதிர் கொள்வது யார்?” என்று அருமை நபிகளார் கேட்க, அல்லாஹ்வின் தூதரே இவர்களையும் நானே எதிர்கொள்கிறேன்.  என்று வஹ்ப் (ரலி), அவர்களிடமிருந்துபதில் வந்தது.  உடனே அண்ணலார், “வஹ்பே!  புறப்படும்.மகிழ்ச்சியடையும். ஏனெனில் சுவர்க்கம் உம்முடையது” என்றார்கள்.  வஹ்ப் (ரலி) அவர்கள் மகிழ்ச்சியுடன் வாளைஏந்தியவராக “இறைவன் பெயரால் நான் யாருக்கும் கருணை காட்டமாட்டேன்.  யாரிடமும் கருணையை வேண்டவும் மாட்டேன்” என்றுகூறிக் கொண்டு எதிரிப்படைகளின் உட்புகுந்து மறுபடியும் வந்து கொண்டிருந்தார்.  அருமை நபிகளாரும் மற்ற தோழர்களும் வஹ்பின்வீரத்தைக் கண்டு வியந்து நின்றனர்.  உடனேநபிகளார் யாஅல்லாஹ்! இவர் மீது அருள் பாலிப்பாயாக! என்று வேண்டினர்.  பாவம் வஹ்ப்(ரலி) அவர்கள். பாவிகள் அவரைச்சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொன்று விட்டனர்.


      வஹ்பு (ரலி) அவர்கள் உடலில் வாளால் ஏற்பட்ட காயங்கள் ஒருபுறம்இருக்க ஈட்டியால் குத்தப்பட்ட காயங்கள் மட்டும் இருபதைத்தாண்டி விட்டன.  ஓர் ஈட்டியால் குத்தினாலே பிழைப்பது மிகக்கடினம். இத்தனை ஈட்டிக் குத்துகளையும் வாள் வெட்டுகளையும் ஒருவரால் எப்படிதாங்கியிருக்க முடியும்?அதுவும் மூன்று முறை குதிரை வீரர்களை எதிர் கொண்டவர்.  அப்பப்பா! நினைத்துப் பார்க்கவே முடியாது.  அசுரபலம் என்பார்களே அது இதுதானோ!இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


      இப்படி யுத்தம் மிகவும் உச்சக் கட்டத்தையடைந்துவிட்ட நிலையில்எதிரே ஒரு குதிரை வீரர் மட்டும் முன்னுக்கு வந்து, “என்னை எதிர்ப்பவர் யார்? நான் அதீக்கின் மகன்” என அறைகூவலிட்டார். அவர் வேறு யாருமில்லை.  ஹள்ரத்அபூபக்ர் (ரலி) அவர்களின் மூத்த மகனார். அன்னை  ஆயிஷா (ரலி) அவர்களின் ஒரேசகோதரர்.  குடும்பத்தவருள் இஸ்லாத்துக்குவராத ஒரே ஒருவர்.  அவர் பெயர் அப்துல்கஃபா.


      வந்ததே ஹள்ரத் அபூபகர் (ரலி) அவர்களுக்கு ஆவேசம்! வில்லை கீழே போட்டு விட்டு உருவிய வாளுடன்பாயத் தயாராகும்போது,அண்ணலார் அவர்கள் அபூபக்ரே, வாளை உறையினுள்போடும்! உம் இடத்திற்கு வந்து நிற்கவும். உமது தோழமையினால் இன்னும் நிறைய நன்மைகள் நடக்க வேண்டியுள்ளது.  அதை இழக்கும்படி செய்து விட வேண்டாம்” என்றுஉரத்த குரலில் கட்டளையிட்டார்கள்.


      உடனே முஸ்லிம் படையிலிருந்த ஒரு வீரர் அவர் முன்னால் வேகமாகப்பாயவே அப்துல் கஃபா பயந்துபோய் பின்னால் போய்விட்டார்.  “எமக்காக உங்களில் தம்மை விற்பவர் யார்?” என்று அண்ணல்எம்பெருமான் அவர்கள் கேட்டார்கள். அன்ஸாரிகளில் ஐந்துபேர் வாளுடன் பாய்ந்து சென்றனர்.  அவர்களில் ஒருவர் படுகாயமடைந்து வீழ்ந்துவிட்டார்.  மற்றவர்கள் உயிரிருக்கும் வரைபோராடி மறைந்தனர்.  உடனே அவ்விடத்திற்குமாவீரர் ஹள்ரத் அலீ(ரலி) ஸுபைர், தல்ஹா. அபூதுஜானா (ரலி) ஆகியோர் வந்து விட்டனர்.  இவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை அண்மிக்கும் முன்னரே எதிரிகளிடையேயிருந்து வந்ததொரு கல் அருமை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயில் தாக்கிவிட்டது.  கீழ் உதட்டில் காயம் ஏற்பட்டதோடு ஒரு பல்லையும்­ஹீதாக்கி விட்டது.  வாயிலிருந்துஇரத்தம் கொட்டியது.  இருப்பினும் அதைஒருவாறு துடைத்து விட்டு “இல்லையே! எனக்கு ஒன்றுமில்லை நீங்கள் எதிரிகளைப் போய்த்தாக்கவும்” என்று  உரத்துக்கூறினார்கள்.  அது கேட்ட ஹள்ரத் அலீ (ரலி)அவர்கள் சட்டெனத் திரும்பி எதிரிகளைத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள்.  படுகாயம் அடைந்த தல்ஹா (ரலி) அவர்கள் மட்டும்தங்கி விட்டார்கள்.  அண்ணலார் அவர்கள், “அபூபக்ரே!உமது ஒன்று விட்ட சகோதரரைக் கவனித்துக் கொள்ளும்” என்றார்கள்.  போரின் உக்கிரம் இன்னும் தணிந்த பாடில்லை.                   


 (தொடரும்)