ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Dec 2011   »  நல்ல பெண்மணி 


மகளிர் பக்கம்

நல்ல பெண்மணி  

 

(நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு -  எம். ஆர். எம். முகம்மது  முஸ்தபா))

 

 

      ஒரு முறை முஆத்(ரலி) அவர்களின் மனைவி, ஒரு பழத்தின் பாதியைத்  தாம் தின்றுவிட்டு, மறுபாதியைத்தம் பணியாளிடம் கொடுத்தார்.  அவ்விதம் செய்ததற்காகத்தம் மனைவியை முஆத் (ரலி) அவர்கள் கடிந்து கொண்டனர்.


      இவ்விதம் உங்கள்வீட்டிலும் அடக்கமாயிருங்கள்! உங்கள் வீட்டையும் அடக்கமாக கட்டிக் கொள்ளுங்கள்! உங்கள்வீட்டைப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்று விரும்பாதீர்கள்! “ஒவ்வொரு கட்டடமும், தேவையுள்ள தையும், அவசியமுள்ளதையும் தவிர்த்து, மற்றதெல்லாம், அதன்உரிமையாள ருக்குக் கேடாகவே முடியும்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளதைமறந்து விடாதீர்கள்! “கட்டடத்தில் விருப்பம் உள்ளவர், எதிரிகளின்உதவியில்லாமல் தமக்குத் தாமே அழிவைத் தேடிக் கொள்கிறார்!” என்று கிரேக்க அறிஞர் புளூட்டார்க்கூறியுள்ளதையும் மனத்தில் கொள்ளுங்கள்!


      இந்த வி­யம் பற்றி உங்களிடம்பேசுவதற்குக் காரணம்,பெரிய வீடுகள் கட்ட வேண்டும் என்றும், அவற்றைஅதிகம் செலவு செய்து அலங்கரிக்க வேண்டும் என்றும் தூண்டுபவர்கள் பெரும்பாலும்பெண்களே.ஆடம்பர வீடும்அதன் அலங்காரங்களும் நீங்கள்  இவ்வுலகை நேசிக்கவும், அவ்வுலகைவெறுக்கவும் செய்து விடலாம்.


       இறைநேசச் செல்வி ராபியாபஸரீ (ரஹ்) அவர்கள் ஒரு குடிலில் குடியிருந்து கொண்டிருந்தார்கள்.  அது மிகவும் பழுதடைந்து விட்டதைப் பார்த்து ஒருசெல்வந்தர் அவர்களுக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்தார்.  ராபியா பஸரீ (ரஹ்) அவர்கள் அதற்குள்நுழைந்ததும், அதன்சுவர்களில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தைப் பார்த்தார்கள்.  அவை அவர்களைச் சிந்தனையில் ஆழ்த்திவிட்டன.  சிந்தனையிலிருந்து விடுபட்டதும், அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து, “இந்தவீட்டின் அழகு என்னை மயக்கி விடலாம். அதனால் நான் அடுத்த உலகிற்குப் போய்ச் செய்ய வேண்டிய வேலை தடைப்படலாம் எனஅஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் வீட்டைக் கூட அடக்கமாகத்தான் கட்டவேண்டும்.  அலங்காரமாகக் கட்டக் கூடாதுஎன்பது இஸ்லாமிய விதி.  ஏனெனில் அதன்பரிமாணமும்அலங்காரமும் தொழுபவரின் கவனத்தைச் சிதைத்து விடலாம் அல்லவா? அடக்கமாக வீடு கட்டி, நீங்கள் அதில் அடக்கமாகஇருக்கவேண்டும் என்று அருள்மொழி பகர்ந்ததைக் கண்டு,  “நாங்கள் வீட்டை விட்டு வெளியேவரக் கூடாதா?” என்றுகேட்டு விடாதீர்கள்! உண்மையான தேவைகளுக்காக நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தடைஇல்லை, அல்லாஹ் உங்களை, உங்கள் வீட்டைவிட்டு உண்மையான தேவைகளுக்காக வெளியே வர அனுமதித்திருக்கிறான்” என்று அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றனர்.


      “கல்வி,ஆண், பெண் இருபாலாருக்கும் பொது” என்பதுஇஸ்லாமியக் கொள்கை.  கல்வி வீட்டிலும்இருக்கலாம்.  வெளியிலும் இருக்கலாம்.  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்காலத்தில், மதீனா நகர் அன்சாரிப் பெண்கள் தம் வீட்டை விட்டுவெளியே வந்து, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைக் கண்டு அறிவு பெற்றும், ஐயத் தெளிவு பெற்றம்சென்றிருக் கின்றனர்.  அவர்களை அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பாராட்டி இருக்கின்றனர்.  ஆயிஷா (ரலி) அவர்களும்பாராட்டியிருக்கின்றார்கள்.  “எவ்வளவுபாராட்டத் தக்கவர்களாய் அன்சார் பெண்கள் இருக்கின்றனர்! அவர்களின் அடக்கம்கற்கவும், அறிவை அடையவும் முயற்சிகள் செய்வதிலிருந்தும்அவர்களைத் தடை செய்யவில்லை” என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்                 கூறியிருக்கின்றனர்.


      உணவு உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது.  அதை வீட்டிற்குள் இருந்து கொண்டும் தேடலாம், வீட்டிற்கு வெளியே சென்றும் தேடலாம்.  மதீனா நகர்ப் பெண்கள் வீட்டிற்குள்இருந்து  கொண்டு உழைத்தும் தம் உணவைத்தேடியிருக்கிறார்கள்,தம் வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்தும் தம் உணவைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.


      ஆபத்து வரும் போது அதை வெல்ல வேண்டும் அல்லது அதை விட்டு விலகவேண்டும்.  தொழும்போது பாம்பு ஒன்றைக்கண்டால், தொழுகையைவிட்டு விட்டுப் பாம்பை அடிக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கை.  எனவே பெண்கள் ஆபத்து வரும் போது வீட்டை விட்டுவெளியே வரவும் வேண்டும், அதை வெல்ல முயலவும் வேண்டும்.  ஒரு சிறுவனை, அவனுடையதந்தை ஒரு கட்டடத்திற்குள் இருக்க வைத்து, ‘நான் வரும் வரைஇதை விட்டு எங்கும் போகக் கூடாது!’ என்று கூறிவிட்டுச் சென்றார்.  அவர் சென்ற சிறிது நேரத்திற்குள் அந்தக்கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டது.  தீஅந்தச் சிறுவனை நெருங்கிக் கொண்டு வந்தது. ‘தந்தை, தாம் வரும் வரை அதைவிட்டு எங்கும் போகக்கூடாது என்று கூறிச் சென்றிருக்கிறார்களே, நாம் எப்படி இந்தஇடத்தை விட்டு அகலுவது?’ என்று அந்தச் சிறுவன்எண்ணினான்.  எனவே அந்த இடத்திலேயே இருந்து,எரிந்து சாம்பலானான். இப்படிப் பெண்கள் ஆபத்துகள் வரும்போது தம் வீட்டை விட்டு வெளிவராமல்இருக்கும்படி இஸ்லாம் கூறவில்லை.                            


(தொடரும்)