ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Dec 2011   »  ஜமாலிய்யா தோட்டத்தில்..

 

ஜமாலிய்யா தோட்டத்தில்.. சங்கைமிகு குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் தங்களின் காமூஸ் அரபீ தமிழ் அகராதியை அறபுத் தமிழில்முதற்பதிப்பாக வெளியிட்டபோது  எழுதிய முன்னுரை!

 

இன்று மதுரஸாக்களில்நூறு வருடங்களுக்குமுன் எழுதப்பட்ட அரபீ கிரந்தங்களே பாடப்புத்தகங்களாய்விளங்குகின்றமையால் கால வேறுபாட்டிற்கேற்பப் புதிதாய் உற்பத்தியான அல்லதுஅரபிய்யாய்ச் சமைந்த ஆயிரக்கணக்கான அரபீ சொற்களின் அர்த்தங்கள்அறியப்படாதிருக்கின்றன.


      நல்ல தமிழில் அரபீ கற்றுக் கொடுக்கப்படாததால், அரபீஅறிஞர்களில் அநேகரின் தமிழ்மொழி - தமிழ் மொழி பெயர்ப்புப் போன்றவைகளில் பெரும்தவறுகள் காணப்படுவதோடு அரபீ வாக்கியங்களின் தெளிவான கருத்துகளும்மறைபட்டிருக்கின்றன.


      தத்துவ,பூத , பெளதீக வியல்களும், சரித்திரம், வானவியல், புவியியல்,ஏகேச்சுவர வாதம், வைத்தியம், தருக்கம்,கலை, இலக்கியம்,பொறியியல், இரசாயனம் முதலான முக்கியஅறிவுகளும் மதுரஸாக்களில் போதிய அளவில் கற்றுக் கொடுக்கப்படாமலிருத்தலால், அவைகளிற் காணப்படும் விசேட சொற்களிற்சில அர்த்தமற்றனவாய்ப்புழங்கப்படுதலோடு இவ்வறிவுகளும் புறக்கணிக்கப்படுகின்றன.


      இக்காரணங்களால் அரபீ மொழிஞானம், இயற்றலறிவு, இஸ்லாமியதத்துவ போதனை - சாதனை - அனுஷ்டானம், இவைகள் மிகமிகக்குறைந்துகாணப்படுகின்றமை கண்கூடு.


      ஆதலால் எம்மாற் கூடிய பிரயாசையின் பேரில் மேற்கண்ட குறைகளிற்சிலவற்றையேனும் சமாளிப்பான் வேண்டி, அறிவுவகை விகற்பங்களாற் பேதப்படும்அர்த்தங்களை அரபீ சொற்களுக்குச் சுத்தமான தமிழில் அரபீ எழுத்தில் எழுதுவதுடன்புதியனவும் புதியனவாய் நுழைந்தனவுமான அனேக அரபீ சொற்களின் அர்த்தங்களும் இதில்கொடுக்கப்படுகின்றன.


      இதனால் தமிழ் முஸ்லிம்களின் அரபீ அபிவிருத்திக்கும், அரபீதமிழுக்கும் புத்துயிரளிப்பதுடன் இஸ்லாமியக் கலையும் அபிவிருத்தியடைய ஏதுவாகிறது.


      நாளடைவில் இதனைத் தமிழ் எழுத்திலேயே வெளியிடவும்கருதியுள்ளோம்.  அடுத்த பதிப்பை இன்னும்சுத்தமானதாயும் விரிவானதாயும் வெளியிட நாடுகின்றோம்.  இன்ஷா இல்லாஹ்.