ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Dec 2011   »  ஞானத்துளிகள்


ஞானத்துளிகள்


தொகுத்தவர்: -  திருமதிG.R.J திவ்யா பிரபு   I.F.S சென்னை


 

   ஞாநி ஒருவன் பற்றற்றவனாயிருந்து  குடும்ப வாழ்வு நடாத்துவது மிகக்கஷ்டம்.  ஞாநி போன்று நான் பற்றற்றிருக்கிறேன்என்று சிலர் சொல்லுகின்றனர்.  அது வெறும் வாய்ப்பேச்சு.  குடும்ப வாழ்வில் நுழைவதற்கு முன்பு ஞாநி புரிந்தகடுந் தபசை இவர்களுள் யார் புரிந்திருக்கின்றனர்?


 ஞானிகள் நிலை குணங்களைத்தாண்டி அதீத நிலைக்குப் போயிருக்கும். உடைமை எதையும் வைத்திருப்பதில்லை.  குடும்பிகள் அந்த நிலையில் இருக்க முடியாது.  குடும்ப சம்ரக்ஷணையின் பொருட்டு அவர்கள் பொருள்தேடவும் வேண்டும்; தேடியதைப் பாதுகாத்துவைக்கவும் வேண்டும்.


   இல்வாழ்பவன் ஒருவன்தன் குடும்பத்திலிருந்து கொண்டே ஆத்ம சாதனங்கள் புரியலாம்.  அது கோட்டைக்குள் இருந்துகொண்டே போர் புரிவதற்குநிகர்.  சந்நியாசி ஒருவன் வெட்டவெளியிலிருந்துகொண்டுபோர் புரிபவனுக்கு ஒப்பாகிறான்.  அவனுக்கு ஆபத்துக்கள்அதிகம்.  கோட்டைக்குள் இருப்பவனுக்கு ஆபத்துகுறைவு.


   அன்னதானம் செய்யப்படுகிறஇடங்களிலிருந்து துறவியர்களும் வறியோரும் உணவை ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால் கிரகஸ்தர்கள்  அத்தகைய இடங்களிலிருந்து உணவு ஏற்றுக்கொள்ளலாகாது.


   குடும்பிகளாகிய எங்களுக்குஇறை வழிபாடு செய்ய சாத்தியப்படாது, என்றான் ஒருவன்.     ஏன் அப்படிச் சொல்லுகின்றாய்?குடும்பக் காரியங் களையும் கவனித்துக் கொள்ளலாம்; இறை வழிபாட்டையும் முறையாகச் செய்யலாம்; அவல் இடிக்கிறமாதுவின் செயலை நீ பார்த்ததில்லையா? ஒரு கையில் குழந்தையைப் பிடித்துக்கொண்டு அதற்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறாள்; மற்றொரு கையால்இடிபடுகிற அவலைத் தள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறாள்; அவல் வாங்கவந்த வாடிக்கைக் காரர்களோடு தனக்குச் சேரவேண்டிய பாக்கிப் பணம் எவ்வளவு இருக்கிறதுஎன்பதைப்பற்றிப் பேசுகிறாள்.  இத்தனை அலுவல்களுக்கிடையில்அவலைத் தள்ளிக்கொடுக்கிற தன் கையின் மீது உலக்கை படாது பார்த்துக் கொள்கிறாள்.  அவளுடைய மனதில் முக்காலே மூன்றுவீசம் பகுதி கையைக்காப்பாற்றுவதில் செலுத்தப்படுகிறது; வீசம் பகுதி மனதை வைத்துக்கொண்டு பாக்கிக் காரியங்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறாள்.  அதேவிதத்தில் நீ வீசம் பங்கு மனதை வைத்துக்கொண்டுஉலகக் கடமைகள் அனைத்தையும் சரியாகச் செய்து சாதித்து விடலாம்.  முக்காலே மூன்று வீசம் பகுதி மனதை இறையிடம் செலுத்து; இல்லையேல் நீ ஒழிந்துபட்டுப்போவாய்.


 குடும்பஸ்தன் ஒருவன்சாதுக்களுக்கு ஏதோ பொருளுதவி செய்வதை முன்னிட்டு அவர்கள் இவன் சொற்படி கேட்கவேண்டுமென்றுஎதிர்பார்க்கலாகாது.  அப்படிப் பொருள் கொடுக்கிறவர்கள்சொற்படி கேட்கிற சாதுக்கள் சரியான சாதுக்கள் அல்ல.


பணத்தைச் செலவு பண்ணத்தெரிந்து கொள்ளுதல் ஓர் அலாதிக் கலை.  குடும்பஸ்தன்ஒருவன் பயன்படாத காரியங்களில் பணத்தை வீண் செலவு செய்யலாகாது.  சான்றோர்க்குச் சேவை செய்வதுபோன்ற கிருத்தியத்தில்கட்டாயம் பணத்தைச் செலவு செய்யவேண்டும்.


மக்களுக்கு அன்னதானம்பண்ணுவது இறை ஆராதனைக்கு நிகர்.  அவர்கள் உள்ளத்தில்அந்தராத்மாவா யிருப்பவர்க்கு ஆகுதி படைப்பதற்கு நிகர் அது.  ஆனால் துஷ்டர்களுக்கும் பாபிகளுக்கும் அன்னதானம்செய்யலாகாது. குடும்பஸ்தர்கள் தானம் செய்கின்றனர்.  அது மிக நன்று.  ஆனால் சுயநல எண்ணத்தோடு தானம் செய்வது சரியல்ல.  சுயநல எண்ணத்தை விட்டு விடுவதோ மிகக் கடினமானது.


 பிருந்தாவனம் சென்றிருந்தஒருவர் ஆங்காங்கு வனத்தில் தனித்தனியாக இருந்து தியானம் பண்ணிக் கொண்டிருந்த சாதுக்களைப்பார்த்ததாகத் தெரிவித்தார்.  ‘அவர்களுக்கு ஏதாவதுகாணிக்கை செலுத்தினாயா?’ என்று குரு கேட்டார்.  இல்லையயன்ற பதில் வந்தது.  அம்மனிதன் நடந்து கொண்டது சரியல்லவென்று குரு மறுத்துச் சொன்னார்.  ‘சாது மகாத்மாக்களையும் ஒன்றும் படையாதிருக்கிறபக்தர்களையும் பார்க்கும் பொழுது அவர்களுக்கு ஏதாவது எடுத்து வழங்குவது குடும்பி ஒருவனுக்குநல்ல ஆத்ம சாதனம் ஆகும்’ என்று குரு பகர்ந்தார்.


 பிருந்தாவனத்துக்குயாத்திரை சென்றிருந்த ஒருவர் தமது அனுபவத்தை குருவிடம் தெரிவித்தார்.  ‘புரோகிதர்கள் தக்ஷிணை தரவேண்டும் என்றும், யாசகர்கள் தானம் தரவேண்டும் என்றும் ஓயாது உபத்திரவப்படுத்தினார்கள்.நாளைக்கு நான் கல்கத்தாவுக்குத்  திரும்பும்பொழுது தானம் செய்கிறேன் என்று அவர்களுக்குச் சொல்லி யனுப்பினேன்.  ஆனால் அந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுதல்பொருட்டு அன்றிரவே யாருக்கும் தெரியாது கிளம்பி விட்டேன்’ என்றார் அவர்.  அதைக் கேட்ட குரு ‘உனக்கு என்ன வெட்கமில்லையா?சொல்லுவது ஒன்று செய்வது மற்றொன்று.  இப்படிப் பொருத்தமற்று நடந்து கொள்வது நியாயமா?’ என்று மறுத்தார்.


♣ கஞ்சாக் குடிக்கிறவர்கள்ஒருவரை யயாருவர் சந்திக்கிற பொழுது பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.  அதே விதத்தில் பக்தர்கள் ஒருவரை யயாருவர் சந்திக்கும்பொழுது மகிழ்வுறுகின்றனர்.


  மிராசுதார் ஒருவன்தனக்குச் சொந்தமாயுள்ள பல வீடுகளில் சென்று வசிப்பதுண்டு.  ஆனால் அவன் ஏதேனும் ஒரு வீட்டில் பெரிதும் வசித்திருக்கிறான்.  அதே விதத்தில் இறைவன் எங்கும் நிறைபொருள்.  ஆனால் பக்தனுடைய இதயம் இறைவனின் இல்லம் போன்றது.


- தொடரும் -