ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Dec 2011   »  15 நிமிடப் புகழ் !


15 நிமிடப் புகழ் !


- ரஹ்மத் ராஜகுமாரன்


 

        துன்ஹாம் என்ற கலிபோர்னியாக்காரர் சொந்தமாக வெல்டிங் பட்டறைவைத்து லாரி நீளத்துக்கு ஒரு மோட்டார்பைக் தயாரித்து, ஏணி வைத்து ஏறி ஓட்டுகிறார்.


      இங்கிலீஷ் விவசாயிகளுக்குபுகழ் ஆசை வந்தால், செயற்கை உரத்தைத்திணித்து பன்னிரண்டு அடி அகலத்துக்கு முட்டைகோஸ் பயிரிடுவார்கள்.  மற்றொருவர் ஆயிரத்து ஐநூறு பவுண்டு பறங்கிக்காய்வளர்த்து அதை லாரியில் ஏற்றிக் கண்காட்சி நடத்துகிறார்.


      இந்த மாதிரி எதையாவதுசெய்து மொத்த உலகமும் கொஞ்ச நேரமாவது தன்னப் பார்க்க வேண்டும் என்கிற தீராத ஆசைதான்‘15 நிமிட புகழ்’ மனிதர்கள் என்று வர்ணிக்கிறார்கள்.


      ஆனால் இஸ்லாம் புகழ்- பற்றி நிறையவே சொன்னாலும் புகழ் அனைத்துமே இறைவனுக்குரியது என்று குறிப்பிடும்.  ‘அல் ஹம்து லில்லாஹ்’ என்ற சொற்றொடர் நிறைவைப் பெறும்ஒவ்வோர் இஸ்லாமியர் சொல்வதும் ‘அல்ஹம்துலில்லாஹ்’ தான்.


      திருக்குர்ஆனின்முதல் வசனமே ஹம்து - புகழைப் பற்றித்தான் பேசுகிறது.  எத்தனை புகழ் மனிதனுக்குக் கிடைத்தபோதும் அந்தப்புகழுக்குரியவன் அந்த நபரைப் படைத்த இறைவன்தான். இரண்டு ஆஸ்கார் விருதைத் தூக்கிக்  காட்டியபோதும் வாய் முணுமுணுத்ததோ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்கிற ‘அல்ஹம்துலில்லாஹ்’ தான்.அப்பேர்ப் பட்ட மகாபெரியோனான இறைவன் தன்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்புகழ்கிறான்.


      “நபியே முந்திய(நிமிடத்)தை விடப் பிந்திய (நிமிடம) தே உங்களுக்குச் சாலச் சிறந்தது”    (அல் குர்ஆன் - 93 : 4)


      நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்கிறவர்கள் தமது உள்ளத்தில் ஊசலாடிய வைகளையயல்லாம் வைத்துஅவர்களின் (நாயகத்தின்) வர்ணிப்புகளில் கடும் முயற்சி எடுத்துப் பார்த்தனர்.  முயற்சித்தோர் எவரும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புகளில் ஆயிரத்தில் ஒன்றைக் கூட அடைந்து கொள்ளவில்லை.  காரணம் முந்திய நிமிடத்தில் உயர்ந்த புகழை விட அடுத்தநிமிடத்தில் இன்னும் புகழ் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது எனவேதான் அல்லாஹ்.


      “(புகழ்பவர்கள்புகழையயல்லாம் விட்டு) உம்புகழை நாம் மிக உயர்த்திவிட்டோம்.        (குர்ஆன் : 94 - 4)


      என்ற வசனத்தின்மூலம் தங்களின் தன்மைகள் ஒரு வட்டத்திற்குள் உட்படாமல், ஒவ்வொரு நிமிடமும் உயர்ந்து  கொண்டே இருக்கிறது என்றும் தங்களின்  சிறப்புகள் ஒரு எல்லைக்குள் உள்ளடங்கி விடாமல் ஒவ்வொரு இமைப் பொழுதும்  மேலோங்கிக் கொண்டே இருக்கின்றன.


      “புதிய வரலாறு படைத்தோரின்வரிசை முறை - நூறுபேர்” என்ற வரலாற்று ஆய்வுப் புத்தகத்தை எழுதிய மைக்கேல் யஹச். ஹார்ட்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி“ உலகத்தில் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்தவர்கள்ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட, முஹம்மது நபியவர்களை ஏசு நாதரை விட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம்.  இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.


      ஒன்று :  கிறிஸ்துவ வளர்ச்சிக்கு ஏசுநாதர் ஆற்றிய பணியை விட, இஸ்லாமிய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த பணியினை முஹம்மது நபியவர்கள் ஆற்றினார்கள். கிறிஸ்துவத்தின் முக்கியமான அறநெறி,ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூதசமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப்பொறுத்தவரை) ஏசு நாதரே காரணமாக இருந்தாலும்,அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால் மக்கள் வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்த வரும், புதியஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியரும் தூய பவுல்தான் (ST. PAUL)


      ஆனால் இஸ்லாத்தின் இறைமையில் (THEOLOGY) , அதன் அறநெறி,ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம்.  அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும், இஸ்லாமியஅனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள்.  மேலும், இறைவனிடமிருந்துதங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட திருவெளிப் பாடான புனித குர்ஆனின் போதகரும்அவர்கள்தாம்.  முஹம்மது நபியின்வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுறுதியுடனும், கடமையுணர்வுடனும்பதிவு செய்யப்பட்டன.


      அவர்கள் மறைந்த சிறிது காலத்துக்குள் ஆதாரப்பூர்வமாக அவை ஒருசேரத் தொகுக்கப்பட்டன;எனவே முஹம்மது நபியின் கருத்துக்களும், போதனைகளும்,கொள்கைகளும் குர்ஆனுடன் நெருக்கமானவை.  மேலும் நபியவர்களின் வாழ்வின் ஒவ்வொருநிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


      ஆனால் ஏசு நாதரின் இதுபோன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்தவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம்வாய்ந்ததாகும்.  குர்ஆன் வாயிலாக முஹம்மதுநபி உண்டு பண்ணிய தாக்கம் மிகப் பெரும் அளவினதாகும்.  கிறிஸ்தவத்தின் மீது ஏசு நாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டு பண்ணிய தாக்கத்தைவிட முஹம்மது நபிஇஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்ததே என்று சொல்லலாம்.


              இரண்டு : மேலும் ஏசு நாதரைப் போலில்லாமல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சமயத்தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராகஇருந்தார்கள்.   உண்மையில், அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கியஉந்து சக்தியாக அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும், செல்வாக்குமிக்க தலைவராக இடம் பெறலாம்.


      ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அறபு வெற்றிகள், மானுடவரலாற்றில் இன்றும் முக்கியமான பங்கு வகித்து வருவதை அகில உலகமெங்கும் கண்கூடாகக்காண்கிறோம்.  சமயத் துறையிலும் உலகியல்துறையிலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு சேரப் பெற்ற ஈடில்லாதசெல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே ஒருதனிமனிதர் என்னும் தகுதிக்கு அவர்களை முதன்முதல் இடத்தில் உரித்தாக்குகிறது என நான்கருதுகிறேன்” என்றார் மைக்கேல் யஹச் ஹார்ட்.


      நபிகள் நாயத்தின் ரசவாதத்தால் என்ன நிகழ்ந்தது........?


      ஒட்டக மேய்ப்பர்கள் உலகாளும் கலீபாக்கள் ஆனார்கள்.  ஒரு நீரூற்றுக்காகப் பல தலைமுறை யுத்தம் செய்துரத்தம் கொட்டியவர்கள் என்ன ஆனார்கள்......?  ‘கந்தக்’போரில் முஸ்லிம்கள் பக்கம் மரணவாசலில் வீழ்ந்து கிடக்கும் தன் சகோதரனுக்கு நீர்க்குடுவை கொண்டு சென்ற ஒரு முஸ்லிம் போர் வீரர், எதிரிகள்பக்கம் மரணத் தாகம்  எடுத்துத் தண்ணீர்கேட்டவருக்கு நீர் வழங்கிய ஈரம், அனல் பாலையில் அதிசயமாகச் சுரந்தது.


      பிறந்தவுடனேயே பெண் சிசுக்களை மண்ணில் புதைத்துச் சொர்க்கத்திற்குஏற்றுமதி செய்த பூமியில்,  அதே பெண்ணான தாயின்பாதத்திற்குக் கீழே சொர்க்கத்தை இறக்குமதி செய்த புரட்சி நிகழ்ந்தது.


      ஓர் ஆண்,ஒரு பெண்ணிலிருந்து இவ்வுலக உயிர் வாழ்வு தொடங்கியது என்ற தெளிவுபிறந்தது.  சாராயத்தைப் புட்டிகளே வாந்திஎடுத்தன.  வட்டிக்காக இதயத்தையே அறுத்துக்கேட்ட ஷைலக்குகள், ஜக்காத்துக்காக (ஏழைவரி) சொத்துமுழுவதையும் வழங்கி விட்டு அடுத்த நொடியில் ஆண்டவனிடம் கையேந்தி நின்றார்கள்.


      உழைப்பாளிகளின் வியர்வைத்துளிகளை உல்லாச நீச்சல் குளங்களில்நிரப்பியவர்கள்,அவர்கள் வியர்வை உலரும் முன்னே கூலி கொடுத்த இதயமாற்று அறுவைசிகிச்சை நிகழ்ந்துவிட்டது.


      இறைவன் மாட்டு நிமிர்ந்த நேயம் கொண்டு முக்தி பெற்ற பக்தியாளர்கள்உள்ள சொர்க்கத்தைக் காட்டி,  “இது உமக்கு” என்று இறைவன் சொன்னபொழுது, இங்கு எனக்கு வேலை இல்லை.  ஏனெனில் இங்கு கண்ணீரில்லை, காயமில்லை, விம்மலில்லை, விசும்பல்இல்லை.  எனவே இல்லாமையால் துடிக்கும் என்உம்மத்துக்கள் இருக்கும் அந்த ரண பூமிக்கே என்ன அனுப்பி விடு இறைவா! நுழைவதானால் என் உம்மத்துக்களோடு தான் நுழைவேன்என்று சொர்க்கத்தை மறுதலித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள்.  இம்மை வாழ்வில் ஒற்றைத் தனிச்சூரியனாகச் சுழன்றவர்கள்,மறுமை உலகில் தான் மட்டும் ஒளியோடு இல்லாமல் கோடி கோடி நட்சத்திரஉம்மத்துக்களையும் வெளிச்சப்படுத்தி உடனழைத்து இறை சொர்க்கம் எய்தச் செய்யும்நிறைமதியாகவும் இருப்பார்கள்.


      அரபிக் கவிதை பாமாலை அண்ணலாரைப் பற்றி பாடுகையில்,


       ‘அன்த ஷ­ம்ஷீன் அன்த பத்ருன்

      அன்த நூருன் பெளக்க நூரி’ என்று குறிப்பிடுகிறது.


       “பகலவன்தான் நீங்கள்

         பெளர்ணமி நிலா நீங்கள்,

         ஒளியயல்லாம்  நீங்கள்

        ஒளிக்கு ஒளி நீங்கள்”


      இரு வேறு உலகில் இருவேறு அணுமுறை என்பதைச் சூரியன், நிலாவென அந்தஅரபுக் கவிதை, ஈரடியில் பேசினாலும், இறுதியாக,ஒளிகளுக்கெல்லாம் மூல ஒளி அண்ணலாரே என்று பேசுகிறது விந்தை!வெளிச்சம் தான் இரண்டு விளக்காகி விட்டது, ஒளி ஒன்றுதான்அதுதான்  “நூரே முஹம்மதியா” என்ற அன்னைஒளி. அதுவே மூல ஒளி.  பிற சுடர்களை மங்கவைத்து ஒளிய வைத்த ஒளி இல்லை;  ஏனைய தூதுத்துவச் சுடர்களுக்கும் ஒளி மகுடம் சூட்டிய மூலச்சுடர்என்பதுதான் முத்தாய்ப்பு.


      பெருமானாரின் குணம் குர்ஆனாகவே அமைந்து விட்டது என்று அன்னை ஆயிஷாநாயகி (ரலி)  அவர்களின் மூலம்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸும் பெருமானாரின்புகழுக்கு  எல்லை இல்லை என்பதற்கு ஆதாரமாகஅமைவதைக் காணலாம்.


      எப்படியயன்றால்

      “பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) யாவும் எழுது கோல்களாவும்,

      சமுத்திர (ஜலம் மையாக) வும் இருந்து, (அதுதீர்ந்து), பின்னும் ஏழு

      சமுத்திரங்கள் (மையாக) இருந்து (எழுத) உதவியபோதிலும், அல்லாஹ் உடையவசனங்கள் நிச்சயமாக (எழுதி) முடிவு பெறா. நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) மிகைத்தோனும், ஞானமுடையேனுமாகஇருக்கிறான்”                         குர்ஆன்(31 : 27)


      எனவே குர்ஆன் எவ்வளவு தான் விளக்கம் சொன்னாலும் விளக்கம் சொல்லிமுடிக்க முடியாது என்று ஆகும்போது குர்ஆன் ­ரீபாகவே இருக்கின்றபெருமானாரின் பொற் குணத்தையும், புகழாரத்தையும் விவரித்து முடிக்க முடியாது.  இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் சிறப்புகளில் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.  எனவே,


      “நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து சொல்லுகின்றார்கள் (ஆகவே)விசுவாசிகளே! நீங்களும் அவர்கள்மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக்கொண்டேஇருங்கள்”                                                     (குர்ஆன் - 33 : 56)        


      இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சற்று கவனியுங்கள், “எதிர்காலத்தில்நாம் எல்லோரும் பதினைந்து நிமிடநேரம் புகழுடன் இருக்கப் போகிறோம்” என்று ஆண்டி வார்ஹோல் 1968 - ல் சொன்னவாக்கியம் லட்சக்கணக்கான முறை எதிரொலிக்கப்பட்டு இன்றுவரை உலகத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.  குறளின் செறிவுள்ள இந்தவாக்கியத்தை தத்துவவாதிகளும், மானேஜ்மெண்ட் குரூப்களும் நூலாகப் பிய்த்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார்களாம்.  அதுவும் ஒரேபதினைந்து நிமிடப் புகழுக்காக.........?


      ‘முஹம்மது’ - புகழப்பட்டவர், புகழப்படுகின்றவர், புகழப்படுபவர்என்ற முக்காலத்திற்கும் பொருந்தும்படியாக திருப்பெயர்.  நபியவர்களுக்கு முன் யாதொருவருக்கும்வைக்கப்படாத பெயர். அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், எத்தனை யுகயுகங்களாக கூறிக்கொண்டிருக்கிறார்கள்?அல்லாஹ் தன் ஒளியிலிருந்து முதன் முதல்படைப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் படைத்தான்.


      “நான் அல்லாஹ்வுடைய ஒளியில் நின்று முள்ளவன்; சகலவஸ்துக்களும்  என்னுடைய ஒளியில்நின்றுமுள்ளவை”


      (“அன மின்னூரில்லாஹி - வகுல்லுஷையின் மின்னூரீ)


      சிருஷ்டிகள் அனைத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய ஜோதியில் சம்பந்தப்பட்டவை என்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்புகழ், யுகயுகங்களை கடந்துஇன்னும் விவரிக்க விவரிக்கஆன்மீகத்தின் எல்லையை அது கடந்துவிடும்..... வாசகர்கள், இதுசம்பந்தமாக மார்க்கப் பெரியோர்களைக் அணுகவும். இப்போது சொல்லுங்கள்........ ‘புகழ்’ அது எத்தனை நொடிப் பொழுதிலிருந்தாலும் நமக்குரியதுதானா........? சற்று யோசிங்கள்.