ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Dec 2011   »  எல்லை மீறாதீர்!


எல்லை மீறாதீர்!


 

அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனில்  “வலா தஉததூ” வரம்பு மீறாதீர்- என ஒரு சொற்றொடர்பல இடங்களில் வரும். அதாவது ஒவ்வொன்றுக்கும் ஓர் எல்லையுண்டு, அந்த எல்லையை மீறாதீர்! என்பது இதன் பொருள்.


               இப்போது நாட்டில்என்ன நடக்கிறது?


      கூடன்குளம் அணுமின்நிலையப் பிரச்சினையாகட்டும்,முல்லைப்பெரியார் அணை வி­யமாகட்டும்,அல்லது வேறு பொதுப்பிரச்சினையாகட்டும், எல்லாவற்றிலும்எல்லோரும் எல்லைகடந்து செயல்படுகின்றனர்.


      இதில் மாநில அரசுகள், போராட்டக்குழுத் தலைவர்கள், அந்தத் தலைவர்களின் சொல்கேட்டு நடக்கும் பொதுமக்கள், மக்களை தவறான வழிநடத்தும் அரசியல் கட்சிகள் என அனைவருமே வரம்பை மீறுவதில்உற்சாகம் காட்டுகின்றனர்.


 கூடன்குளத்தில் வரம்புமீறிய உண்ணாவிரத நடவடிக்கைகளால் தமிழகம்இருண்டகாலத்தை எதிர்நோக்கி இருக்கிறது.


  கேரள அரசின் வரம்பு மீறிய அச்சத்தால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம்சிதையப்போகிறது.


         வரம்பு மீறிய உணர்ச்சி வசத்தால் கேரள- தமிழக மக்களின் நல்லுறவுகேள்விக் குறியாகி இருக்கிறது.


         இவற்றையயல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொறுப்புள்ளமத்திய அரசின் வரம்பு மீறிய மெளனத்தால் இந்தியாவின் ஒற்றுமையே சிந்தனைக்குரியதாகிஇருக்கிறது.


              “வலா தஉததூ” வரம்புமீறாதீர்- என அறிவுறுத்தும் இறைவன் அதன் தொடர் வரிகளில்  “இன்னல்லாஹ லா யுஹிப்புல் முஉததீன்” நிச்சயமாகஅல்லாஹ்  வரம்பு மீறுகிறவர்களைநேசிக்கமாட்டான்- என எச்சரிக்கின்றான்.


   இறைவனின் அன்பு வேண்டுமானால் எல்லை கடக்காமல் இருந்து இறைவனின்குடிமக்களான மனித சமூகத்திற்கு தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும். இல்லையயன்றால்உலக அதிபதியான அல்லாஹ் இவைகளுக்கு தீர்ப்பு வழங்க முற்படுவான்.