ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Aug 2012   »    19 ம் ஆண்டு நிறைவு விழா 


திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி


19 ம் ஆண்டு நிறைவு விழா 


    திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரியின் 19-ம் ஆண்டு நிறைவு விழா  11-07-12- புதன்கிழமை காலை 10-00 முதல் -1-00- மணிவரை நடைபெற்றது. 


      விழாவிற்கு, கல்லூரி முதல்வர் - டி. மகதும்ஜான் தலைமை தாங்கினார்,ஏழாம் ஜும்ரா மாணவர் A. சத்தார் கான் கிராஅத் ஓத உமர்கய்யாம் வஹ்ததுல்வுஜூத், இசைக்க A. ஹக்கீம் பாட்சா I . நூர்முஹம்மது ஆகியோர் நபிபுகழ்ப்பா முழங்க இனிதே தொடங்கியது. 


      ஆரம்பமாக விழாத்தலைவர் தலைமையுரை ஆற்றினார். லஜ்னதுல் இர்பான் ஃபீ ரியாழதில் பயான் மன்றத் தலைவர் A. சத்தார் கான், ஆண்டு அறிக்கை வாசித்தார். இதன்பின் ஏழாம் ஜும்ரா மாணவர் A. ஹக்கீம் பாட்சா 5-ம் ஜும்ரா மாணவர் உமர்கய்யாம், 3-ம் ஜும்ரா மாணவர் யூனுஸ் ஆகியோர் மாணவர்கள் சார்பாக பேசினார்கள்.  கல்லூரிப் பேராசிரியர்கள் V.A.மீரான் ஆலிம் பாஜில் பாக்கவி  S.M.முஹம்மது இப்றாஹீம் பாக்கவீ, A. ஷப்பீர் அலி சிராஜி, N. முஹம்மது ரபீஉத்தின் ஆலிம் நூரி, K. முஹம்மது இஸ்மாயீல் மன்பஈ,M. அப்துற்றஹ்மான், கைரீ, M.H. உபைதுல்லாஹ் பாக்கவீ, திரு. V. சுதந்திரவீரன், திரு.T.சதீஸ், ஆகியோர் சிறப்பு வாழ்த்துரை வழங்கினார்கள். N. ஸயீது முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி தொகுப்புரை வழங்கினார்.


      திருச்சி சபையின் அங்கத்தினர்களும் , முன்னாள்  மேலாளர்  H. அப்துல்கரீம் B.A. ஆலிம், மார்க்கட் A. முஹம்மது அலி, A. பக்ருத்தீன், நஸ்ருத்தீன், ஷாஹுல்ஹமீது மற்றும் அவர்களின் பிள்ளைகள் கலந்து கொண்டனர், சிறப்பு அழைப்பாளர்கள் ஹாஜி. கலீலுற்றஹ்மான், அப்துல்அஜீஸ், T.S.P. மரக்காணம் பக்ருத்தீன் ஆகியோர் பேராசியர்களுக்கும் ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் பரிசுபொருட்களும் உடைகளும் வழங்கி, வாழ்த்துரை வழங்கினர். விழாவில் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ரமலான் புத்தாடைகள் (துணிமணிகள்) அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.


      தலைமையாசிரியர் நன்றி கூறிட கல்லூரி மேலாளர் துஆ ஓத, ஸலவாத்துடன்இனிதே விழா நிறைவு பெற்றது.  லுஹர் தொழுகைக்குப்பின் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.   

                                   தகவல் : நேசரின் நேசன் N.M.R. நூரி திருச்சி .