ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Aug 2012   »  ​அறம் செய்ய விரும்பு!


அறம் செய்ய விரும்பு!


                                                                    கரீம்கான் பாக்கவி

 

 

    ர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணியவைத்து தீய இறப்பை விட்டும் (நம்மைத்) தப்புவிக்கிறது  என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

                                                                            அபூ ஹுரைரா (ரலி) : திர்மிதீ 226

    

    நல்ல பொருளை ஒருவர் தானம் செய்தால் அதனை இறைவன் தன் வலது கையால் வாங்கிக் கொள்கிறான். நல்லதைத்தவிர (வேறு எதனையும்) இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை. அது ஒரு பேரீத்தம் பழமாக இருந்தபோதிலும் இறைவன் கையில்அது மலையைவிடப் பெரிதாகும்வரை வளர்கிறது.  உங்களில் ஒருவர் தலைக்கன்று அல்லது தாயைவிட்டுப் பிரிந்த ஒட்டகைக் குட்டியை வளர்ப்பது போன்று என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

                                                                        அபூ ஹுரைரா(ரலி) : புகாரீ.


    நாயகமே! நிச்சயமாக என் அன்னை இறந்துவிட்டார்.  எந்த தர்மம் மிக மிக மேலானது என்று கேட்டேன். (அதற்கு) தண்ணீர் என்றார்கள். எனவே நான் ஒரு கிணறு தோண்டி இது ஸஃதுடைய அன்னையுடையது என (அதற்குப்) பெயரிட்டேன்.

                                                                                ஸஃதுப்னு உபாதா - ரலி-அபூதாவூத்.


    நாயகமே!  என் அன்னை இறந்துவிட்டார். அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு (அதனால்) பலன் கிட்டுமா? என்று ஒருவர் கேட்டார். அதற்கு  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,ஆம்; (பலன் கிடைக்கும்) என்றார்கள். எனவே அவர்எனக்கு ஒரு தோட்டம் இருக்கிறது. நான் தங்களை சாட்சியாக வைத்து நிச்சயமாக அதனை தர்மம் செய்துவிட்டேன் என்றார்.

                                                                         இப்னு அப்பாஸ்- ரலி- புகாரீ.

    

    தர்மம் செய்வதால் பொருள் குறைந்து விடுவதில்லை.  இறைவன் மன்னித்து விடுவதால் அடியாரின் கண்ணியம் உயர்ந்து விடுகிறது.  எந்த அடியார் அல்லாஹ்வுக்காக தாழ்ந்து போகிறாரோ அவரை அவன் உயர்வாக்கி வைக்கிறான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

                                                                                அபூ ஹுரைரா (ரலி) : முஸ்லிம்.

    

    உங்களில் எவருக்கும் பாதிப் பேரீத்தம் பழத்தின் காரணமாக  நரகத்திலிருந்து தப்ப இயலுமாயினும் அவசியம் தப்பிக் கொள்ளவும் என்று  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

                                                                                அதிய்யுப்னு ஹாதிம் -ரலி- புகாரீ.


    தர்மம் செய்வதில் தீவிரமாக இருங்கள். ஏனெனில் தர்மத்தைத் தாண்டிக் கொண்டு துன்பங்கள் (பலாய் முஸீபத்துக்கள் உங்களை) வந்து அணுகாது என்று  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

                                                           அலீ - ரலி- ரஜீன்.

 

in-b��m.���P�xt-align:justify;line-height:normal;mso-layout-grid-align:none;text-autospace:none'>