ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Aug 2012   »     மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்)

தமிழகத்து வலிமார்கள்

 

 

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்)

கலீபா,எம்.சிராஜீத்தீன் பி.எஸ்.ஸி. திருச்சி


    ல்லாமா மாப்பிள்ளை  லெப்பை ஆலிம் அவர்களின் ஆழிய  அரபி புலமையும் அவர்கள் அரூஸிய்யா மதரஸாவைத் திறம்பட நடத்தி வந்ததும் மக்களின் மனதை பெரிதும் கவர்ந்து விட்டது.


      இதுபோன்ற ஒரு சிறந்த மதரஸாவை நிறுவ வேண்டும் என்று அஃலா ஹஸ்ரத் ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் விரும்பினார்கள்.  மேலும் அஃலா ஹள்ரத் அவர்களின் தந்தையார் அவர்களும்அரூஸிய்யா மதரஸாவில் தான் ஓதியவர்கள்தாம். ஆகையால் 1290- ஆம் ஆண்டில் அஃலா  ஹள்ரத் அவர்கள் அரூஸிய்யா மதரஸாவிற்குச் சென்று அதன் பாடத் திட்டங்களையும் அரபி போதிக்கும் முறைகளையும் நன்கு அறிந்து சென்று வேலூரில் அரூஸிய்யா மதரஸாவின்  அடிப்படையில் “பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்” என்ற பெயரில் சிறந்த மதரஸாவை ஏற்படுத்தினார்கள்.


      சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை மாறாமல்  இதுவரை நடந்து பல ஆலிம் வல்லுநர்களை உருவாக்கிய அந்த மதரஸா இப்போது தப்லீக்கின் பிடியில் சிக்கி விட்டதை நினைத்தால் மனம் மிகவும்  வேதனையடைகிறது.  அஃலா ஹள்ரத் அவர்களால் எப்படி உருவாக்கப்பட்ட மதரஸா இப்படி ஆகிவிட்டதே!


      கர்நாடக நவாப் குலாம் கெளஸ் கான் அவர்கள் அப்பா அவர்களின் மதரஸாவின் புகழைக் கேள்விப்பட்டு அதுபோன்ற மதரஸா ஏற்படுத்த விரும்பினார்.  அதனால் அப்பா அவர்களை தம் தர்பாருக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்களோ அந்த அழைப்பை ஏற்கவில்லை.


      இதனை உணர்ந்த சென்னை பிரதம டவுன் காஜி பத்ருத் தெளலா அவர்கள் இவ்வி­ஷயத்தில் தலையிட்டு நவாப்அவர்களின் மாண்பினை அப்பா அவர்களிடம் எடுத்துக்கூறி அவர் மார்க்க அறிஞர்களை மதிக்கும் தன்மை பற்றியெல்லாம் எடுத்துக்கூறி அப்பா அவர்களை சென்னைக்கு வருமாறு பெரிதும் வேண்டிக் கொண்டார்.  அப்பா அவர்களும் டவுன் காஜி அவர்களின் அழைப்பை  ஏற்றுக் கொண்டார்கள்.  அதன்படி அவர்கள் சென்னை வந்து நவாப் மாளிகைக்குச் செல்லவில்லை. திருவல்லிகேணியில் உள்ள பள்ளியில் தங்கியிருந்தார்கள்.  நவாபே அங்கு வந்து அப்பா அவர்களை கவனித்து மரியாதை செய்து அவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார்.


      நவாப் அவர்களின் மார்க்கப் பற்றையும்  அவரது மாண்பையும் அறிந்து கொண்ட அப்பா அவர்கள் நவாப் அவர்களைப் புகழ்ந்து புள்ளி இல்லாத அரபி எழுத்துக்களால்  150 ஈரடிப் பாக்களையும் புள்ளியுள்ள அரபி எழுத்துக்களால் ஆயிரம் ஈரடிப்பாக்களையும் பாடி நவாப்பிற்கு அன்பளிப்பாக அளித்தார்கள். அதனைப் படித்து மகிழ்ந்த நவாப் அப்பா  

அவர்களுக்கு ‘மலிக்குஷ் ஷீஅரா’ (கவியரசர்) என்ற பட்டத்தை சூட்டி அவர்களை கெளரவித்தார்.


      இதன்பின் அவர்கள் கவிஞர்களின் பேரவையில் திப்புசுல்தான் அமர்ந்தஅரியணையில் அமர்ந்து கவிதை அரங்கேற்றி அப்பா அவர்களைப் பற்றி அவர்கள் மாமனார் செய்த முன்னறிவிப்பை நிறைவு செய்யும் பேற்றினையும் பெற்றார்கள்.  இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவர்களுக்கு காயல்பட்டினவாசிகள் ‘ஷைகுல் காமில்’ என்னும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.                                      (தொடரும்)

 

� ப��,��x