ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Aug 2012   »  கஃபாவின் ரகசியம்

அல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகள்


 கஃபாவின் ரகசியம்

 

    1202 வரு­ம் இத்தாலி நாட்டு கணிதவியல் அறிஞர் லியனார்டோ பிபோனாசி தற்செயலாக ஓர் எண் தொடரைக் கண்டறிந்தார். அதன் பண்புகள், முன்னால் உள்ள இரு எண்களின் கூட்டுத் தொகை அடுத்த எண்ணாக வருகிறது.


     1,2,3,5,8,13,21,34,55,89,144,233,377... இப்படியாக தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். இத்தொடரை சும்மா எழுதிவைத்து யோசித்து யோசித்துப்பார்த்தார். ஒன்றுமே அவருக்குப் பிடிபடவில்லை. ஆனால் ஏதோ ஓர் உண்மை இதில் பொதிந்திருப்பதாக மட்டும் அறிந்திருந்தார்.


      சுமார் 700 வருடங்கள் கழித்து அதாவது 19வது நூற்றாண்டில் பிரஞ்ச் 

நாட்டு  கணிதவியல் அறிஞரான எட்வர்டு லூகாஸ் என்பவர் பிபோனாசி எண்களின் தனிச் சிறப்புகளைப் புட்டுபுட்டுவைத்தார். உலகம் ஆச்சரியப்பட்டு அசந்து போனது.


      பிபோனாசி எண்களின் தன்மை இந்தப் பிரபஞ்சப் படைப்பில் ஒவ்வொன்றிற்கும் ஆழமாக பொதிந்திருக்கிறது என்பதை எட்வர்டு லூகாஸ் அடுத்தடுத்து நிரூபித்தார்.

     

    பிபோனாசி எண்கள் உயிரினங்களின் இனப்பெருக்க முறையில் முக்கிய பங்கேற்றுள்ளது. ஒரு பண்ணையில் ஓர் ஆண் முயலும் ஒரு பெண் முயலும் இருப்பதாகவைத்துக்   கொள்வோம். அவை சரியாக ஒரு மாதகாலம்  இடைவெளியுடன் ஆணொன்று, பெண்னொன்று எனதொடர்ந்து குட்டிகளை  ஈன, அவை வளர்ந்து அதே ஒரு கால இடைவெளியுடன் ஆண், பெண்குட்டிகளை  இனப்பெருக்கம் தொடர்ந்து இந்த இனப்பெருக்கத்தில் எந்தக் குட்டியும் சாகவில்லை என்றால் பிபோனாசி எண் தொடர் போல் முயல்களின் ஜோடிகள் பெருகும் 1,2, 3,5,8,13,21,34....இப்படி ஒரு நாட்டின் மக்கட்தொகை பெருக்கமும் பிபோனாசி எண்போல் பெருகுகிறது. இதிலும் குறிப்பாக பெண் சிசுக்கு கள்ளிப்பால் ஊட்டாமல் தாய்ப்பால் ஊட்டியிருக்க வேண்டும்.


      நத்தை போன்ற மெல்லுடல் ஜீவராசிகளின் பாதுகாப்புக் கவசமான அதன் வலுவான கூடு கூட சுழற்சியின் அமைப்பில் பிபோனாசி எண் தொடரைக் காணலாம்.  DNA  என்கிற உயிரணு முறுக்கேறிய நூல் ஏணிபோல் இருக்கும். இந்த உயிரணுவிலும், இதயத்துடிப்பிலும் பிபோனாசி தொடர் காணப்படுகிறது.


      அன்னாசிப்பழத்தின் தோலில் காணப்படும் முன் முகப்புக் கண்கள் பழத்தின் அச்சுக்கு சுருள் வடிவில் இருக்கும். இந்தச்  சுருளில் உள்ள முகப்புக் கண்களின் எண்ணிக்கை பிபோனாசி எண் தொடராக இருக்கிறது. நட்சத்திரங்கள் சுற்றிவரும் பால்வீதிகளிலும் காணப்படுகிறது.  இதேப் போன்று சூரியகாந்திப்  பூவிலுள்ள கதிர்களும் பிபோனாசி எண் தொடர் ஆக இருக்கிறது எகிப்து பிரமிடுகளிலும் பிபோனாசி எண்கள் காணப்படுகிறது.  தாவரங்களில் ஒரு காம்பின் மீதான இலைகள், மொட்டுகள்,கிளைகள், வேர்கள்  எல்லாம் இதே பாங்கில் வளர்ச்சி பெறுகின்றன. இதுபற்றி குர்ஆனின் வசனங்கள்


      பூமியில் ஊர்ந்து திரியக் கூடியவைகளும், தம்முடைய  இரு இறக்கைகளால் பறக்கக் கூடியவைகளும் உங்களைப் போன்ற சிருஷ்டிகளே அன்றி வேறில்லை

                                                                                                                            குர்ஆன்(6.38)

     

    ஆதிகாலத்திலிருந்தே  படைப்பினங்களில் பிபோனாசி தொடர் அமைப்பு வருகிறது 12ஆம் நூற்றாண்டில் தெரிய வந்த உண்மையைக் கண்டு கொள்ளாமல் அதைக்கூட அல்லாஹ்


      அல்லாஹ் சிருஷ்டித்திருப்ப வற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்கவில்லையா? என்று கேட்கிறான்.                                                                            குர்ஆன்(16.48)

   

   இதே போன்று அணுக்களின் வேதியியல் வினையைத் தீர்மானிப்பது அதன்புறச் சுற்றுப்பாதையில்  உள்ள எலக்ட்ரான்களே. எலக்ட்ரான்கள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தால்அவற்றின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.  தனிமங்களின் அணு எண் பிபோனாசி எண் தொடருக்கு ஒத்தும்  சில தனிமங்கள் பிபோனாசி எண்தொடருக்கு மிக அருகாமையில் வருகின்றன. இதேப் போன்று பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை 1 மடங்கு என்று தீர்மானித்து புதன் கிரகம் வெள்ளி, பூமி (1 பங்கு) செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ்,நெப்டியூன், புளூட்டோ போன்ற கிரகங்களுக்கும்,சூரியனுக்கும் உள்ள  தூரத்தை  3-ஆல் பெருக்கிய தொகை பிபோனாசி எண் தொடருக்கு மிக அருகாமையில் வருகிறது.


      அணுவிலிருந்து அண்டம் வரையிலுள்ள எல்லா படைப்பினங்களின் வடிவமைப்பு பிபோனாசி எண் தொடராக இருப்பதைக் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடியாது. இதுபற்றி குர்ஆனில் அல்லாஹ், தன் வரையறையில் ஒழுங்காகச் செல்லும் சூரியனையும், சந்திரனையும் அவன்தான் வசப்படுத்தினான். என்ற குர்ஆன் (14.33)  வசனமும்,


      வானத்திலிருந்து, பூமிவரையிலுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அவனே ஒழுங்குப்படுத்தினான்  (32.05)


      என்ற குர்ஆன் வசனமும் பிபோனாசி  எண் தொடரின் தன்மை இந்தப்பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதை நமக்கு அறிவிப்பது போல் இருக்கிறது.  இது போன்று இப்பிரபஞ்சத்தி லுள்ள ஒவ்வொரு படைப்பிலும் பிபோனாசி எண் தொடர் மூலம் வடிவமைக்கப் பட்டிருப்பதைக் காண முடிகிறது.


      அடுத்துபிபோனாசி எண்களுக்குள் ‘தங்கத் தகவு’ என்றோர் ஆச்சரியம் உள்ளது. இதனை 

Golden Ratio) எனப் பெயர்.  அதாவது பிபோனாசி தொடரில் உள்ள அடுத்தடுத்த இரு எண்களின் தகவு உயர் பிபோனாசி எண்களை நோக்கிச் செல்ல செல்ல அதன் மதிப்பு 1.618ல் நிலையாக இருக்கிறது. இது தங்க தகவு ஆகும். இந்த தங்கத்தகவும் பிரபஞ்சமெங்கும் பரவிக் கிடக்கிறது. பிபோனாசி எண்கள் 1,2,3,5,8,13,21,34,55,89,144,233,377,610,987


தங்கத்தகவு :

      2/1 = 2;3/2 = 1.5; 5/3 = 1.666; 8/5 = 1.60; 13/8 = 1.625; 21/13= 1.61; 55/34 = 1.618

      89/55 = 1.618; 144/89 =1.618; 233/144 = 1.618; 377/233 =1.618;  ஊ10/377 =1.618; 987/610 = 1.618.

     

    மனிதனின் தலையிலிருந்து  மனிதன் தொப்புள் வரை 1 பங்கு என்றால், தொப்பிலிருந்து கால் பாதம் வரை 1.618 பங்கு இருக்கிறது. முகத்தின் நீளம் 1 பங்கு என்றால், முகத்தின் அடியிலிருந்து தொப்புள் வரை 1.618 பங்கு இருக்கிறது.


      நெற்றியின் நீளம் 1 பங்கு என்றால் முகத்தின் உயரம் 1.618 பங்கு இருக்கிறது. மூக்கின் அகலம் 1 பங்கு என்றால் உயரம் 1.618.


      மூக்கு அடியிலிருந்து தாடையின் அடி வரை 1 பங்கு என்றால் உச்சி நெற்றியிலிருந்து மூக்கின் அடி வரை 1.618.  


      மூக்கின் அடியிலிருந்து இரு உதடு சந்திக்கும்  இடம் வரை 1 பங்கு என்றால், இரு உதடு சந்திக்கும்  இடத்திலிருந்து தாடையின் அடிவரை 1.618

      

    வாயின் அகலம் 1 பங்கு என்றால், இரு கண்களின் வெளிப்புறம் 1.618 முகத்தின் அகலம் 1 பங்கு என்றால், முகத்தின் நீளம் 1.618


      மணிக்கட்டிலிருந்து கைவிரல் நுனிவரை 1 பங்கு என்றால், மணிக்கட்டிலிருந்து கை மூட்டு வரை 1.618


      தோள்பட்டையிலிருந்து கை மூட்டு வரை 1 பங்கு என்றால், கை மூட்டிலிருந்து விரல் நுனி வரை 1.618.


      இதுவரை மனித உறுப்புகளின் வெளிப்புற அளவீட்டை கணக்கிட்டமாதிரி மனிதனின் இதயம்மனித உயிரணு எனப்படும் செல், மற்றும் போன்றவற்றிலும்  தங்கத்தகவு எனப்படும் 1 பங்கும் 1.618 பங்கும் பயன்படுத்தி உருவாக்கப் பட்டிருக்கிறது.


      மனிதர்கள் உருவாக்கிய பிரமிடு, டாவின்ஸி வரைந்த மோனாலீசா ஓவியம் ஆகியவற்றிலும் இந்தத் தங்கத்தகவு காணப்படுகிறது....இதுவரையிலும் பிபோனாசி வரிசை  முதற்கொண்டு அண்டம் வரையிலும் கட்டுப்படுத்தப் பட்டு ஒழுங்குப்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டோம்.


      பிரபஞ்சமெங்கும்  எந்த ஒரு இயற்கையான அமைப்போ, கட்டமைப்போ ஜீவராசிகளின் உடலமைப்போ இயற்கை அமைத்த எதுவாயினும் இந்த பிபோனாசி எண்களால் வடிவமைக்கப் பட்டிருப்பதால்,உலகமெல்லாம் ஒரே இறைவனை வணங்கும் திசையை அடையாளப் படுத்தும் கஃபா என்னும் இறை ஆலயம் இப்பூமியில்  இயற்கையாகவே அமைக்கப்பட்டிருப்பதில் பிரபஞ்ச ஒழுங்கு பயன்படுத்தப் பட்டிருக்கிறதா..? பார்ப்போம்.


      பூமி என்கிற இந்தக்கிரகம் 231/2 டிகிரி சாய்ந்து சுழல்வதால் பருவகாலங்கள் ஏற்படுகிறது என்பதை அறிவோம். சூரியக் கதிர்கள் இப்பூமி முழு பாகத்திற்கு விழுவதில்லை. சூரியக்கதிர்கள் பூமியின் இரு துருவங்களில் விழுவதால் இத்துருவங்கள் இரண்டும் இரு கண்டங்களாக உள்ளன.


      பூமியின் வடதுருவத்தில்  அமைந்துள்ள கண்டம் ஆர்டிக் கண்டம்.என்றும் இது ஆர்ட்டிக் பெருங்கடலில் ஆன நீர்ப்பகுதி. இந்த வடதுருவத்தில் மனிதர்கள், விலங்குகள்,சில தாவரங்கள் அப்பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழும் நிலை இருக்கிறது.


      தென்துருவம் அண்டார்டிகா கண்டம். இது நிலப்பகுதி. விலங்குகளோ, மனிதர்களோ இல்லை. சில வகை புற்களும், பாசிகள் மட்டுமே உள்ளன.அண்டார்டிகாவில் பெங்குவின் பறவைகள் மட்டும் நிலத்தில் எதிரிகள் இல்லாததால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. இந்த இரு கண்டங்களுக்கும் மத்தியில் பூமத்தியரேகை அமைந்துள்ளது


      பூமி  உருண்டையில் கஃபா என்கிற உலக இறை ஆலயம் பூமத்திய ரேகைக்கு சற்று மேலாக அதாவது பூமியின் வடதுருவத்திலிருந்து 7631.68 கிலோமீட்டர் தொலைவிலும் பூமியின் தென்துருவத்திலிருந்து 12,348.30 கிலோமீட்டர் தொலைவிலும் அமையப்

 பெற்றிருக்கிறது. இந்த தூரங்களை சாட்டிலைட் செயற்கை கோள் மூலமாக மிக துல்லியமாக அளக்கப்பட்டுள்ளது. தென்துருவத்தொலைவை வடதுருவத் தொலைவால் வகுக்க தங்கத்தகவு எண்ணான 1.618 வருகிறது. அதாவது கஃபா ஆலயம்  இயற்கைப் படைப்பின் ஓர் அங்கமாக திகழ்கிறது.


      அதேப்போல் இருதுருவங்களின் தொலைவு கூட்டுத்தொகையை தென்துருவத்தின் தொலைவைக் கொண்டு வகுக்க 19,979.98 12,348.30 தங்கத்தகவு எண்ணான 1.618 வருகிறது

      

    அதேப்போல் பூமி உருண்டையின் மூலை விட்டத்தின்படி கணக்கிட்டாலும் தங்கத்தகவு 1.618 வருகிறது


      பூமி உருண்டையை கற்பனையில் வெட்டி சமதள பரப்பாக்கி தொலைவுகளைக் கணக்கிட்டாலும் தங்கத்தகவு எண் 1.618 வருகிறது.


      ஆக கஃபா என்னும் இறை ஆலயம், இயற்கையின் படைப்புகள் படைக்கப்பட்டது போல் மிகத் துல்லியமாக பிரபஞ்ச ஒழுங்கு மீறாமல் கணக்கச்சிதமாக பாலைவனப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


      ஆரம்ப காலத்தில் நாம் இப்படி நினைப்பதுண்டு, ...வறண்ட பாலைவன பூமியில் உலக ஆலயமான கஃபாவை நிர்மாணித்த இறைவன், இப்பூமியில் செழிப்பான பிரதேசமான மிஸவுரி, மிசிசிபி,அமேசான் போன்ற நதிப் பிரதேசங்களில் அமைத்திருக்கலாமே என்று எண்ணியதுண்டு. ஆனால் வல்ல ரஹ்மான் தன் உலக ஆலயத்தை படைப்புகளின் ரகசிய குறியீட்டில் அல்லவா படைத்திருக்கின்றான் என்று இப்போது எண்ணும் போது நம் மெய்சிலிர்க்கும்.


      ஆதிகாலத்தில் கஃபாவை  எழுப்ப இப்பூமியில் வானவர்களான ஜிப்ரயீல்(அலை) உட்பட அநேக மலக்குமார்கள்  பூமியில் இடம் தேடிய போது, இறைவனின் நாட்டப்படி ஒரு பெரிய மேகம் நிழல் பரப்பி இந்த இடத்தை அறிவித்ததாகவும் மேக நிழல்விழுந்த பரப்பளவுக்குதான்  கஃபாவும் அமைக்கப்பட்டதாக கிதாபுகள் மூலம் அறிய முடிகிறது. 


      இவ்வளவு சிறப்பிற்குரிய கஃபாவை உலக முஸ்லிம் மக்களின் வணக்கத்திசையாக ஆக்கி இருப்பதால் எவ்வளவு மகத்துவமானது என்பதை அறிவியல் ரீதியாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.


      ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸைக் காட்டிலும் கஃபாவே கிப்லாவாக அமையப் பெற வேண்டும் என்கிற தன் உள்ளுர ஆசையை இறைவனிடத்தில் மானசீகமாக முறையிட்டதை அல்லாஹ் தன் குர்ஆனில்,


      (நபியே!) உங்களுடைய முகம் பிரார்த்தனை செய்து அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம்.  ஆதலால், நீங்கள் விரும்பும் கிப்லாவாகிய மக்காவின் பக்கமே நாம் உங்களை  நிச்சயமாக திருப்புகின்றோம்.  எனவே நீங்கள் தொழும்போது மக்காவிலுள்ள “மஸ்ஜிதுல்  ஹராமின்” பக்கமே உங்களுடைய முகத்தைத்திருப்புங்கள்.  நம்பிக்கையாளர்களே நீங்களும் எங்கிருந்த போதிலும் தொழுகையை அதன் பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள்.  வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய, இது தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையான உத்தரவுதான் என நிச்சயமாக அறிவார்கள்.  ஏனென்றால் அவ்வாறே அவர்களுடைய வேதத்தில் இருக்கின்றது.  எனவே உண்மையை மறைக்கும் அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை. (2 : 144)


      ஒரு நாள் “லுஹர்” என்னும் நண்பகல் தொழுகையில் இரண்டாது ரக்அத்தில் கஃபாவை கிப்லாவாக மாற்றியமைக்கும் மேற்கண்ட வசனம் இறங்கிற்று.  இதனால் தொழுது கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் சேர்ந்து நேர் எதிர் திசையை நோக்கி திரும்பவேண்டிய தானது. இந்த நிகழ்வு நடைபெற்ற பள்ளிவாசல் ““இரு கிப்லா பள்ளி”” என  மக்காவில் உள்ளது.


      நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிப்லாவாக கஃபாவை ஆக்கி அதன் திசையை நோக்கி முஸ்லிம்கள் தொழுத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நுபுவத்தைக் குறித்து யூதர்கள் குறை கூறினர்.பைத்துல் முகத்தஸ்தான்  கஃபாவைப் பார்க்கினும் மேலானது, முன்னதாக இதுதான் கட்டப்பட்டது.  இதுதான் மஹ்­ஷர்  மைதானமுள்ள நாடு, நபிமார்கள் ஹிஜ்ரத் செய்த இடம்.  அவர்களுக்கெல்லாம் இந்த பைத்துல் முகத்தஸ்  கிப்லாவாக இருந்தது.  நபி மூஸா (அலை) இறைவனுடன் பேசிய இடமாகிய தூர்ஸீனா மலை இந்த நாட்டில் தான் இருக்கிறது.  ஆகவே இதனை விட்டு விட்டு கஃபாவின் பக்கம் கிப்லாவை மாற்றியது தவறு” என்று யூதர்கள் கூறினார்கள்.  இவ்வாதத்திற்கு மறுமொழியாகத்தான் மேற்கண்ட வசனம் இறங்கியது. இக்கூற்றைப் பற்றி நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடம் வினப்பட்ட போது, மனிதர்களது வணக்கத்திற்காக பூமியில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது வீடு  மஸ்ஜிதுல் ஹராம் என்னும்  கஃபாதான். பின்னால் தான் பைத்துல் முகத்தஸ் என்றார்கள்.   இவ்வாறு மாற்றியமைக்கப் பட்டதற்குரிய இடைப்பட்ட காலம் எத்தனை...? என்று வினவப்பட்டது.


    “நாற்பது வருடங்கள்.”


      இது பற்றி குர்ஆனில் அல்லாஹ் அதில் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன.  இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக பக்கா’ வில் ( மக்கா) இருப்பதுதான்.  அதுமிக்க பாக்கியமுள்ளதாகவும் உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது” குர்ஆன் (3 : 96) இன்ன அவ்வல பைத்தின் உழிய லின்னாஸி லல்லதி பி பக்கத்த முபாரக்கன் வஹுதன் லில் ஆலமீன். குர்ஆன் (3:96)  மேற்கூறப்பட்டுள்ள வசனத்தில் மொத்தம் 47 அரபி எழுத்துக்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். இதில் பக்கா என்கிற வார்த்தை அமையப்பட்டுள்ள இடம் மிகச்சரியாக 29எழுத்துகளுக்கு முன்பாக அமையப் பெற்றிருக்கிறது. அதாவது மொத்த எழுத்து 47யை 1.618 ல் வகுக்கக் கிடைப்பது 29 எழுத்து!


      அதாவது இப்பூலோகத்தில் கஃபா என்கிற இறை ஆலயம் இரு துருவங்களுக்கு இடையில் 1.618 என்ற இடத்தில் அமைந்திருப்பது போல். இதுபற்றி கூறும் வேத வசனத்தில் (3:96) லும் கஃபா (பக்கா) என்ற வார்த்தை1.618 என்ற இடத்தில் அமைத்திருப்பது மனித குலத்தை மீளா வியப்பில் இன்னும்ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது. இந்த வார்த்தையைக் கூட மிகத்துல்லியமாக தங்கத்தகவுள்ள இடத்தில் குர்ஆனில் அமைத்திருப்பது நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர வேறு எவரால் குர்ஆனை இறக்கியருள முடியும்...?


      இத்தகைய சிறப்புக்குரிய கஃபாவை இப்பூமியில் எழுப்பச் செய்த வரலாற்றைப் பார்க்கும் போது, நம்மை மீண்டும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அல்லாஹுத்தஆலா தன்அர்ஷிக்குக் கீழே ஒரு வீட்டை ஏற்படுத்தினான். அதற்கு பைத்துல் மஃமூர் என்னும் வானுலக (CESELESTIAL KABA) கஃபா என்றுபெயர். இதனை தவாபு  செய்யுமாறு வானுலக வானவர்களை ஏவினான். பிறகு இதனைப் போல் பூமியில் ஒரு வீட்டைக் கட்டும்படி பூமியில் நியமிக்கப்பட்ட மலக்குகளுக்கு கட்டளையிட்டான்.  பின் அதனை தவாபு செய்யுமாறு  ஏவினான்.


      பைத்துல் மஃமூர் என்னும் வானுலக கஃபாவிலிருந்து கற்பனையாக ஒரு கயிற்றை கீழே இறக்கினால் அது மிகத் துல்லியமாக இப்பூலோக கஃபாவின் மீது விழும் என்கிறார்கள். கஃபாவைப் பற்றி அற்புதமான ஆச்சரியமான அடுத்த வி­ஷயம் பற்றி எகிப்து தேசிய ஆய்வு கழகத்தைச் சேர்ந்த  டாக்டர் அப்ட் அல்- பாசித் செய்யது (Dr.Abd.Al - -Baset Syed, Egyption National Research Centre) என்பவர் அல்மஜீத் TV (KSA) -ல் 6 ஜனவரி 2005-ல் கஃபாவைப் பற்றி ஒரு ஆய்வுப் பேட்டியில்,“நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்குப் போய் இருந்த போது, பூமியிலிருந்து ஓர் ஒளிக்கற்றை (ரேடியேசன்ஸ்)ப் பார்த்தார்.  அந்த ஒளிக்கற்றை பூமிக்கு அடுத்த கிரகமான செவ்வாய்க் கிரகத்தையும் தாண்டி மேல் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கிற இந்தச் செய்தி அப்போது வலைத்தளத்தில் தொடர்ந்து 21 நாள் பதியப்பட்டிருந்தது.  பின்பு அந்த செய்தி வலைத்தளத்திலிருந்து காணாமல் போய்விட்டது  என்பதாக பாசித் செய்யது கூறுகிறார்.  ஆதாரம் MEMRI (Middle East Media Research Institute) என்ற வலைதளத்தையும் Secret of Kaba என்ற வலைதளத்தையும் நீங்கள் பார்வையிடவும். 

     

    இந்த ஒளிக்கற்றை கஃபாவிலிருந்து மேல்நோக்கி பயணிப்பதால் தானோ பறவைகள் கஃபாவிற்கு நேராக மேலில் பறப்பதில்லை. ஹரம் ­ஷரீஃபில் உள்ள புறாக்கள் கஃபாவிற்கு நேராக வந்தால் அதற்கு மேலே பறக்காமல் வலம், இடம் ஆகிய இரண்டு புறங்களில் ஒரு புறம் சாய்ந்து கொள்கின்றன. (ஆதாரம் : தப்ஸீர் ஹமீது)


      மேலும் அதே வலைத்தளத்தில் ஹஜ்ருல் அஸ்வத் கல் மற்றும் மக்காமூ இப்ராஹிம் என்ற கண்ணாடி கூண்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் கல் இவைகளின் சிறிய துண்டு (Basalt Rock) பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இம்மூன்று சிறு கற்களையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இக்கற்கள் மூன்றும் சூரியகுடும்பத்தைச் (Solar Family) சேர்ந்தவை அல்ல.  இக்கற்கள் சூரியனையும் தாண்டிய விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்பதாக ஆய்வு செய்துள்ளனர். 


      இந்தக் கற்களைப் பற்றிய பூர்வீக வரலாறும் மேற்கூறப்பட்ட கருத்தையே மெய்ப்பிக்கின்றன.  அதாவது நபி இப்ராஹீம்(அலை) கஃபாவை நிர்மாணிக்க ஓர் உயரமான கல்லை எடுத்து வருமாறு தன் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களிடம் கூற,அவர்கள்  அபுல் குபைஸ் மலையின்  பக்கம் கல் எடுத்து வரச்சென்றார்கள்.  அங்கு ஜிப்ரயீல் (அலை)தோன்றி, இஸ்மாயீல் (அலை) அவர்களைச் சந்தித்து,


      ஆதம் சுவனத்திலிருந்து வரும் போது இரண்டு பாக்கியம் மிகு கற்களைத் தம்முடன் கொண்டு வந்தார்.  அதில் ஒன்றை இத்ரீஸ் நபி நூஹின் காலத்தில் ஏற்பட விருக்கும் பிரளயத்தில் அழிந்து விடுமோ” என்று அஞ்சி இந்த மலையடிவாரத்தில் புதைத்து வைத்தார் என்று கூறி விட்டு புதைக்காமல் கிடந்த மற்றொரு கல்லைச் சுட்டிக்காட்டி, இப்ராஹீம் நிற்பதற்காக இதனை எடுத்துச் செல்லவும்! என்று கூறினர். இதுவே மக்காமே இப்ராஹீம் என்கிற கல், பின்னர் கஃபாவைக் கட்டி முடித்ததும் இதனை இடம் சுற்றி வருவதற்கு அடையாளமாக இதில் ஒரு கல்லை பதித்து வைக்க எண்ணி ஒரு கல்லை எடுத்துவருமாறு இப்ராஹீம் (அலை) எதிர்ப்பட்டு, “இத்ரீஸ்(அலை) முன்பு புதைத்து வைத்திருந்த கல்லைக் காட்ட, அதனைஅவர்கள் எடுத்து வந்து கஃபாவின் சுவரில் பதித்தனர். இதுவே ஹஜ்ருல் அஸ்வத்”ஆகும்.  (ஆதாரம் : நபிமார்கள் வரலாறு அப்துற் ரஹீம்) ஆக இரு கற்களுமே வானுலகத்திலிருந்து தான் வந்திருக்கின்றன என்பதைஅறிய முடிகிறது.


      இத்தகைய சிறப்புகளால் தானோ, ஹரத்தின் எல்லைக்குள் நுழைந்து எந்த ஜீவராசிகளும் அச்சம் தீர்ந்தவைகளாகி  விடுகின்றன என்பதாக குர்ஆனில் (48 : 27) வசனம்அறிவிக்கிறது.   ஒருவர் ஹரமுக்கு வெளியே ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு ஹரமுக்குள் ஓடிவந்து விட்டால் அவரைப் பிடிக்கமாட்டார்கள்.  ஆனால் கொல்லப்படத்தகுந்தவராக இருந்து ஹரமுக்குள் ஓடி வந்துவிட்டால், அவரை அங்கு பிடிக்கக்கூடாது.  உணவு, தண்ணீர்  கிடைக்காமல் அவரிடம் வியாபாரம் முதலியவைகள் செய்யாமல் இருந்து அவரைத் தானாக வெளியேறும்படி நிர்பந்திக்கலாம்.


      பறவைகளை பிடித்துண்ணும் பிராணிகள் அங்கு பறவைகளைக் கண்டால் வாய்கட்டி நின்று விடுகின்றன கஃபாவை இடித்துவிட வேண்டும்; அல்லது சேதம் உண்டாக்க வேண்டும் என்றகெட்ட     எண்ணத்தால் வருகிற வம்பர்கள் எல்லோரும் நசுக்கப்பட்டு விடுவார்கள்.   


     இதுபற்றி குர்ஆன் அல்ஃபீல் 105 ஆவது அத்தியாயத்தில்  கூறப்படுகிறது. மேற் கூறப்பட்ட இந்தவரலாறு பற்றி.


      நபியே! யானைப் படையினரை உங்களது இறைவன் எவ்வாறு அழியச் செய்தான் என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்கவில்லையா....? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா? அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அனுப்பி வைத்தான். கெட்டியான சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.  அதனால் அவன் அவர்களைப் பறவைகளால் கொத்தித்தின்னப்பட்ட கதிர்களைப் போல் ஆக்கி அழித்துவிட்டான்.  குர்ஆன் (105 : 1 - 5)   


      இந்த வரலாறு நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முந்தைய வரலாறு. அன்று தொடங்கிய அற்புதங்கள்... இன்று 1.618 வரையிலும் நமக்குத் தெரிய வருகிறது.  இன்னும் என்னென்ன ரகசிய அற்புதங்களை கருப்புத்திரைபோட்ட  கஃபா  உள்ளடக்கி  வைத்திருக்கிறதோ தெரிய வில்லை.  வல்ல ரஹ்மான் நாடினால் காலம் கனியும்பொழுதெல்லாம் கஃபாவின் அகமிய ரகசியங்களை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருப்பான்.


      இன்ஷா அல்லாஹ் நாமும் நம் சந்ததியினரும் அந்த அற்புதங்களையெல்லாம் காணும் தெளஃபீக்கை  தந்தருள்வானாக. ஆமீன்!

 

x�<