ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012  »  Apr 2012   » ஆலோசனைகள் -10

ஆலோசனைகள் -10

 

அன்பர்களே! கோடை விடுமுறைக்காக பள்ளிகள் விடுமுறை விட்டதும்பிள்ளைகளுக்கு மட்டுமல்ல.  பெற்றோருக்கும் லீவுகிடைத்து விடுகிறது.  பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அழைத்துவருவது, காலையில்எழுந்து உணவு தயாரிப்பது போன்ற அன்றாடத் தொல்லைகளிலிருந்து சற்று ஓய்வு கிடைக்கிறது.  இந்த விடுமுறையில் ஓர் ஆன்மிகக் குடும்பம் எப்படிதன் விடுமுறையைப் பயன்படுத்தலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்.

ஸ்கூலுக்குப் போவதால்சரியாக வக்துக்கு (நேரத்துக்கு) தொழாமல் இருந்த குழந்தைகளை அந்தந்த நேரத்தில் தொழப்பழக்குவது.

குர்ஆன் ஓதாத பிள்ளைகளை  வீட்டிலோ, ஆசிரியர் அமைத்தோ கட்டாயம் ஓதவைப்பது. ஓதிய பிள்ளைகளாக இருந்தால் சூராக்களை - துஆக்களை மனனம் செய்யச் சொல்வது.

வாசிக்கத் தெரிந்தபிள்ளைகளுக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரித்திர நூல்களை வாங்கிக்கொடுத்துப் படித்து முடிக்க வைப்பது.

மெளலிது, ராத்திபு, பதுறு மவ்லிது.புர்தா ­ரீஃப், பர்ஸன்ஜிய்மவ்லிது, வித்ரிய்யா ஓதப் பயிற்சி கொடுப்பது.


சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் நூல்களை- மறைஞானப் பேழையை வாசிக்கச்செய்வது.

வாப்பா நாயகம் அவர்களின் துபை மஜ்லிஸ்-  இந்திய மஜ்லிஸ் நிகழ்ச்சி சி.டி. களைப் பார்க்கச்செய்வது.


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை வலைத்தளங்களான துபை www.emsabaiblogspot.com. சென்னை  www.emsabai.com - irfan.com மற்றும் சுன்னத்வல்ஜமாஅத் வலைத்தளங்களை பார்வையிடத் தூண்டுவது.


திருமுல்லைவாசல் - சம்பைப்பட்டினம், கீழக்கரை, நாகூர்ஜியாரத்துக்கு குடும்பத்துடன் சென்று அருளைப் பெற்று வருவது.


உங்கள் குழந்தைகளுக்கென சில விருப்பங்கள் மனதில் இருக்கும்.  அதை அவர்களிடம் கேட்டு நிறைவேற்றி மகிழச் செய்வது.


கல்விக் காலத்தில் சரியாக - கவனிக்க முடியாத பிள்ளைகளின் உடல் நலத்தைக்கவனித்து மருத்துவர்களின் ஆலோசனையுடன் சீர்செய்து ஆரோக்கியத்துக்கு அடித்தளமிடுவது.