ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012  »  Apr 2012   » நல்ல பெண்மணி

மகளிர் பக்கம்                                                                                                         நெடுந்தொடர்....

நல்ல பெண்மணி

( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு -  எம். ஆர். எம். முகம்மது  முஸ்தபா)


காரணம் நீயே!

இதையயல்லாம் உணராமல் சில பெண்கள் அடக்கமற்ற உடை அணிந்து கொண்டுவெளியில் கிளம்பி விடுகின்றனர்.  அவ்விதம் உடைஅணிந்திருக்கும் பெண்களைப் பார்க்கும் இளைஞர்கள் மனம் பெரிதும் கெடுகிறது என்றும், அவர்கள், “நமக்கு ஒருசந்தர்ப்பம் கிடைக்காதா?” என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றும்,சந்தர்ப்பம் கிடைத்ததும் தவறு செய்து விடுகின்றனர் என்றும் கூறுகின்றனர்.  இதனால் பாதகம் அடைவது ஆணும், பெண்ணும் என்றாலும், இன்றைய சமூக அமைப்பில் அதிகப் பாதகம்அடைவது பெண்தான்.

பெண்கள் அடக்கமற்றஆடை அணிந்து கொண்டு வெளியே போகும் போது அவர்கள் மீது பெரும்பாலான ஆண்களின் பார்வை விழுகிறது.  அவர்களின் பார்வை எதேச்சை யானதாயும் இருக்கலாம், இச்சை யானதாயும் இருக்கலாம்.  இச்சையுடன் பார்ப்பது. கண்களால் விபச்சாரம் செய்வதாகும்.“(ஆசை கொண்டு நோக்கும்) எல்லாக் கண்களும் விபச்சாரம் செய்யக் கூடியவையே” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றனர்.  இந்தப் பாவத்தை ஆண்கள் செய்யாமல் பெண்கள் தாம் நடந்து கொள்ள வேண்டும்.  அது  அவர்களுக்கும் நல்லது; ஆண்களுக்கும் நல்லது.

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர்களைப் பிடித்து அவர்கள் அவ்விதம் நடந்து கொண்டதற்குக்காரணம் எது என்று கேட்டபோது, அவர்கள் அளித்த பதில், அந்தப் பெண்களின் உடை என்பதாகும்.

அலங்கோல உடை அணிந்திருக்கும் பெண்களின் படங்கள் தெரு ஓரங்களில்  ஒட்டப்பட்டிருந்தால், அவற்றை வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஆண்கள் பார்க்கும்போது அவர்களின் கவனம் சிதைகிறது என்றும். அதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும்சொல்லப்படுகிறது.

“நாங்கள் வெளியில்செல்லும் போது உடை ஒழுங்குடன் சென்றால் போதுமே? அதற்கு மேல் பர்தா ஒன்று தேவையா?” என்று நீங்கள் கேட்கலாம்.  பர்தாவை உடைக்கு அப்பாற்பட்டதாய் முஸ்லிம் நாடுகளில் உள்ள பெண்கள் கருதுகின்றனர்.  அதையும் சேர்த்துத்தான்அவர்கள் உடை என்று கருதுகின்றனர்.  பர்தாவிற்குள் இருந்து கொண்டே, அவர்கள் கல்வியும் கற்கின்றனர். காரியங்களும் ஆற்றுகின்றனர். உடை சம்பந்தப்பட்ட மட்டில் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட மட்டில் மேலை நாடுகளைப் பின்பற்றுவது நல்லதல்ல.  உடை ஒழுக்கம் சம்பந்தப்பட்ட மட்டில் அவை மிகவும் கெட்டுப் போய் விட்டன.  அதை யஹலன் என்னும் அமெரிக்கப் பெண்மணியே  ஒப்புக் கொள்கிறார்.  அவர் ஓர் எழுத்தாளர்.  பல பத்திரிகைகளுக்கும் கட்டுரை வரைபவர்.  அவர் அரபு நாடுகளுக்குச் சென்று பார்த்து விட்டு என்ன கூறுகிறார் தெரியுமா? அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும், அனைத்துப் பண்பாடுகளும், மதிப்புகளும் அணைந்து போய் விட்டன. மானக்கேடான செயல்கள் மலிந்து விட்டன. நாகரிகம் என்னும் பெயரால் சமுதாயம் ஒரு மாபெரும் கொந்தளிப்பில்  சிக்குண்டுள்ளது”.

நாகரிகம் மிகுந்த நாடுகள் எனக் கருதப்படும் மேலை நாடுகளின் நிலை இதுதான்.  அங்கு ஆண், பெண் இருபாலாரிடமும் குணஒழுக்கம் மிகவும் குறைந்து விட்டது.  பெற்றோர். பிள்ளை உறவு, கணவன் மனைவி உறவு ஆகியவையயல்லாம் கெட்டுக் கொண்டிருக்கின்றன.  ஆணுக்கும், பெண்ணுக்கும் மணவிலக்கு என்பது ஒரு விளையாட்டாக ஆகிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கக் கேட்டில் பிள்ளைகளைப் பெறுவது பெருகிக் கொண்டு செல்கிறது.

மேலை நாடுகள் பெண்களுக்கு ஆபத்து அதிகமுள்ள நாடுகளாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றன.  மேற்கு ஜெர்மனியில் சமீபத்தில் பெண்கள் ஊர்வலம்ஒன்று நடந்தது.  அதில் கலந்து கொண்ட பெண்கள்அனைவரும் தங்கள் முகங்களுக்குத் திரையிட்டுக் கொண்டிருந்தனர்.  எதற்காக இந்த ஊர்வலம் தெரியுமா? மேற்கு ஜெர்மனியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லையாம்.  அவர்களின் கற்புக்கு ஆபத்து ஏற்படுகிறதாம்.  இரவு வந்ததும் விரைவாக வீட்டிற்குத் திரும்ப வேண்டியதாயிருக்கிறதாம்.  இந்த நிலைமையை அரசின் கவனத்திற்குக்கொண்டு வருவதற்கும், அரசு இதில் தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்,தாங்கள் முகத்திரை இட்டுக் கொண்டு தான் வெளியே வர நேரும் என்பதை உணர்த்தவதற்குதான்அவர்கள் இப்படிச் செய்தார்கள்.

இவ்வித நிலை நம்நாட்டிலும் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது.  நம்நாட்டின் தலைநகரான டில்லியும், மாநிலங்களின் தலைநகரங்களில் பெரும்பாலானவையும், பெண்களுக்குப் பாதுகாப்பற்றநகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. தலைநகர் டில்லியில், பொதுஇடங்களில் பெண்களைத் துன்புறுத்தும் நிகழ்ச்சிகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன.  அங்கு பெண்கள், பஸ் நெரிசலில்ஆண்கள் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கின்றனர் என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் கோ­ம் போட்டு ஊர்வலம் நடத்தினர்.  பம்பாய் நகரப் பெண்களும் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கூறித் தங்களுக்கென சங்கங்களை ஏற்படுத்துகின்றனர். 


(இன்னும் வருவாள்)