ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012  »  Apr 2012   » கலீபா  பெருந்தகைகள்


தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் கண்ணியமிகு கலீபா  பெருந்தகைகள்ஒரு சிறப்புப் பார்வை! 


தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரய்யாவின் கலீபாப் பெருந்தகைகளைப்பற்றி புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் பொது நோக்கில் இக்கட்டுரைத்தொடரைத் தொடங்குகின்றேன்!


இக் கட்டுரை நமதுதரீகாவின் சிறப்பம்சங்களையும் தரீகாவின் முப்பெரும் சன்னிதானங்களான சங்கைமிகு ஜமாலிய்யாமெளலானா ரலியல்லாஹு அன்ஹு, குத்புல் ஃபரீத்ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் நமதுயிரினும் மேலான குத்புஸ்ஸமான்­ம்ஸுல் வுஜுது ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா நாயகமவர்களின் அரும்பெரும் ஆற்றல்களையும் வாசகர்கள் விளங்கிக் கொள்ள பெரும் உதவி புரியும் என நம்புகின்றேன். இக்கட்டுரையில் இடம்பெறும் செய்திகள் யாவும் (எனக்கு)சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்தவைகள்தாம்! இங்கு சொல்லப்படவுள்ள பல செய்திகளை சங்கைமிகுஷைகு நாயகமவர்களிடம் நானே நேரில் கூறியிருக்கின்றேன்! எழுத்து வடிவில் வருவது இதுவேமுதல்முறை!

 

கண்ணியம் பொருந்திய கலீபாப் பெருமக்களில், சங்கைமிகு ஷைகுநாயகமவர்களால் “வலிய்யுல் ஹஸன்”,  “வலிய்யுல் அஹ்ஸன்” என்றெல்லாம் அருளப்பட்ட கலீபா. ஹுஸைன் முஹம்மது ஆலிம் பாகவி அவர்களிடமிருந்து தொடங்குவது பொருத்தமாகும் என நம்புகின்றேன்! ஏனெனில் (தரீகத்துல்ஹக்கியத்துல் காதிரிய்யாவின் முஹாஜிர்களாக உருவாக்கி எங்களை உயர்த்திடக் காரணமானவர்) தர்பாரின் சன்னிதானத்தில் எங்களை இழுத்து வந்து எங்களை உயர்த்திடக் காரணமானவர் வலிய்யுல்அஹ்ஸன் அவர்கள் தாம்!

வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் தொடக்கத்தில் திண்டுக்கல் பாபு ஹள்ரத் (ரஹ்) அவர்களின் முரீது.  பாபு ஹள்ரத் (ரஹ்) அவர்களின் மறைவிற்குப் பின்னர்அவர்களின் மகனாரும் நமது தரீகாவின் கலீபாவுமான திண்டுக்கல் S.A. அப்துஸ்ஸலாம் அவர்களின் நெருக்கம் பெற்று மெய்ஞ்ஞானப் பேரின்பத்தைப்பெற மாதந்தோறும் பாளையத்திலிருந்து மதுரை வந்து குத்புல் மத்ஹரிய் மகானந்தபாபா ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் ராத்திபு மஜ்லிஸிற்குச் சென்று வந்தார்கள்.

பாளையத்தில் ஊரைப் பிரித்து ஓடும் முல்லையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள தோப்பத்தா பள்ளிவாசலில் சுமார் 30 வருடங்கள் தொடர்ந்து இமாமாக இருந்தார்கள். பாளையத்திற்கு வருமுன்னர் சின்னமனூரில் சில வருடங்கள் இமாமாக விருந்தார்கள். ஆக... இவ்விரு இடங்களில் மட்டுமே அவர்கள் பணி அமைந்தது!

இதில் விசே­ம் என்னவென்றால். தோப்பத்தா பள்ளிக்கு ஐவேளைத் தொழுகைக்கு ஐந்து பேரைத் தவிர கூடுதலாக ஒருவர் வந்தால் அன்று அடைமழை உறுதி! ஜுமுஆவுக்கு அதிகபட்சம் 50 பேர் வருவார்கள்!

வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் மதுரைக்குச் செல்ல இராத்திபு மஜ்லிஸைத் தவிரவேறு எந்த நாளும் விடுமுறை எடுத்ததாகச் சரித்திரம் இல்லை! தங்கள் வீட்டிலிருந்து சுமார் 2.கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பள்ளிக்கு நடந்து சென்று வருவார்கள்!  ஸுபுஹு தொழுகைக்குப் பின்னர் பாளையத்தன் ஊர் மைய்யமான தேரடிக்கு அருகிலுள்ள குர்ஆன் மதுரஸாவில் ஓதிக் கொடுப்பது, வீட்டிற்கு வந்து காலை உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் குர்ஆன் மதுரஸாவிற்குச் சென்று தாங்கள் ஓதியகிதாபுகளை வார்த்தை விடாமல் படிப்பது தான் அவர்களின் பொழுது போக்கு! ஒரு முறை நான்அவர்களைச் சந்திக்கச் சென்றேன்! அப்போது நான் 3ஆம் ஜுமுராவில் ஓதிக் கொண்டிருந்தேன் “ஹிதாயதுன் நஹ்வு” கிதாபை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள்.

என்ன.. நான் ஓதும் கிதாபை நீங்கள் இந்த வயதில் ஓதிக் கொண்டிருக்கின்றீர்கள்? எனச் சிரித்துக்கொண்டு கேட்டேன்.! அதற்கவர்கள், இந்தக் கிதாபில் ஏதாவது நீ சந்தேகம்கேட்டால் நான் சொல்ல வேண்டும் அல்லவா? அதனால்தான் என்றார்கள் எனது நன்னாவான வலிய்யுல் அஹ்ஸன்அவர்கள்!

வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் அறபுப் பாடங்களில் மிகக் கெட்டிக்காரர்!பாளையம் யஹளதிய்யா கல்லூரியின் முதல்வரும் எங்கள் ஆசானுமான ஆரிபுபில்லாஹ் T.M மூஸாகான்பாக்கவி ஹள்ரத் அவர்கள் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள்; திடீரென ஓர் இடத்தில்பொருளோ கருத்தோ சரியாக வரவில்லை யயன்றாலும் (இஃராப்) சரியாகப் பொருந்த வில்லையயன்றாலும் உடனே பாடத்தை நிறுத்திவிட்டு, வலிய்யுல் அஹ்ஸனிடம் விளக்கம் பெற்று வருமாறு மாணவரை கிதாபுடன் அனுப்பி வைப்பார்கள். மேலும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள மதுரஸாவிற்கு அருகிலுள்ள தோப்பத்தா பள்ளிவாசலுக்குச்சென்று தொழுதுவிட்டு பல வி­யங்களைப் பேசுவதோடு பாட வி­சயங்களையும் வலிய்யுல் அஹ்ஸனிடம் கேட்டுத் தெளிவு பெற்று மறுநாள் பாடம் நடத்துவார்கள்! (என்னே பணிவு, நன்னடத்தை) அதுமட்டுமல்ல; மூஸாகான் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஒரு வாரம் பத்து நாட்கள்விடுமுறை எடுக்கும் போதும் ஹள்ரத் அவர்கள் புனித ஹஜ்ஜிற்குச் சென்ற போதும் வலிய்யுல்அஹ்ஸன் அவர்கள் தாம் யஹளதிய்யாவின் பேராசிரியர்! இவ்வளவு அறிவுத் திறனிருந்தும் ஓர்அறபுக் கல்லூரியில் வலிய்யுல் அஹ்ஸன்  பேராசிரியர்பணியில் அமராமல் இருந்ததற்குக் காரணம் என்ன? என்று ஒரு நேரத்தில் கேட்டேன் பேரன் என்னும்உரிமையோடு! “மதுரைக்கு ராத்திபு மஜ்லிஸிற்குப் போக லீவு தரமாட்டாங்க.  அப்படியே போனாலும் மகானவர்களைப்பற்றி ஏதாவது சர்ச்சை செய்வார்கள்..பதில் சொன்னா பிரச்சனை. பதில் சொல்லலை என்றால் பெரும் பாபம், எதற்கு வம்பு?என்று தான் இப்படியே இப்பள்ளியில் இருந்து விட்டேன்.  தோப்பத்தா பெருநாள் தொழுகைக்குத் தான் பள்ளிக்கேவருவாரு.. சரியாகச் சம்பளம் தந்திருவாடு... வேறு என்ன வேண்டும்? எனத் துப்புரவாகச் சொல்லிவிட்டார்கள்! வலிய்யுல் அஹ்ஸன் (ஆம்! அவர்கள் அடிக்கடிஉபயோகிக்கும் வார்த்தை துப்புரவு)

ஒருமுறை வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் பள்ளிக்கு வீட்டிலிருந்து செல்லும்போது பாளையம் தேரடியில் யாரோ ஒருவர்.  அதோ பார்...  மெளலானா போறாங்க... எனக் கூறியது காதில் விழுந்ததும், வலிய்யுல் அஹ்ஸன்அவர்கள் நல்ல உயரமும் பேரழகும் நிறைந்த மெளலானா அவர்களை ஏறிட்டுப் பார்த்தார்கள்.  பின்னர் வலிய்யுல் அஹ்ஸன் பள்ளிக்குச் சென்று விட்டார்கள்.  மீண்டும் ஒருமுறை அதே இடத்தில் அதோ மெளலானா போறாங்க....என யாரோ ஒருவர் கூறியதும் வலிய்யுல் அஹ்ஸன் அம்மெளலானா அவர்களைக் கூர்ந்து பார்த்துசிறிது நேரம் இலயமானார்கள்!

“இவ்வாறு இருமுறை தான் மெளலானா அவர்களைக் கண்டேன்.  அன்னவர்களின் பார்வையில் இறையருள் நிறைந்திருந்தது.அப்போது அவர்களை இன்னாரென்று தெரியாது! ஊரார் மெளலானா என்பார்கள். அன்னவர்கள் பாளையத்திலுள்ளஸாஹிபு மலையில் தங்கி யிருப்பார்கள். சில நேரம் அம் மலையிலிருந்து வயல்கள் வழியே  ஊருக்குள் வந்து தேரடி வழியே முல்லையாற்றிற்குச்சென்று அங்குள்ள வட்டப் பாறையில் பலமணி நேரம் இயற்கையை இரசித்திருந்து குளித்து ஆனந்தப்பரவசத்தோடு செல்வார்கள்.  யாரிடமும் பேசியதாகத்தெரியவில்லை! சங்கைமிகு மெளலானா அவர்கள் தாம் நமது தரீகாவின் மூலவித்தான ஜமாலிய்யாமெளலானா (ரலி) என்று பிற்காலத்தில் விளங்கிக் கொண்டேன்! இரண்டு முறை அன்னவர்கள் என்னைஏறிட்டுப் பார்த்ததால் தான் அன்னவர்களின் குலக் கொழுந்துகளாம் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன்ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் நமது ஷைகு நாயகம் கண்மணி மெளலானா கலீல் அவ்ன் அவர்களையும்நான் காணும் பேறு பெற்றேன்.  பேரின்பம் பெற்றேன்.என்பதாகத் திண்டுக்கல்லில் நடைபெற்ற வாப்பா நாயகம் பிறந்த தினவிழாவில் ஒருமுறை கூறினார்கள்வலிய்யுல் அஹ்ஸன்!

தங்களின் குருவான பாபு ஹள்ரத் (ரஹ்) அவர்கள் மற்றும் குத்புல் மத்ஹரிய்மகானந்த பாபா (ரலி) அவர்களின் மறைவு வலிய்யுல் அஹ்ஸன் அவர்களை மிகவும் பாதித்தது! இனிமேல்..யாரிடம் சென்று மெய்ஞ்ஞானப் பேரின்ப அமுதைப் பெறுவேன்? என அங்கலாய்த்துஅழுதும் புலம்பியிருக்கின்றார்கள்.  வலிய்யுல்அஹ்ஸன்!

இரையைத் தேடும் பறவைகளுக்கு உணவைத் தரும் இயற்கை.. இறையைத் தேடும்மெய்யன்பருக்கு எப்படி வழிகட்டியது? என்பதனை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.