ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012  »  Apr 2012   » நகைச்சுவை மன்னர்

சிரிக்க... 

நகைச்சுவை மன்னர்


நகைச்சுவை என்பது ஓர் அரியகலை.  அது எல்லோருக்கும் வராது.  சிலருக்கு பேசுவதெல்லாம் செய்வ தெல்லாம் நகைச்சுவையாகஅமைந்து விடும். அப்படிப் பட்டவர்களின் ஒருவர்தான் அபூ நுவாஸ்.


ஹிஜ்ரி 145ஆம் ஆண்டுபஸராவில் பிறந்து வாழ்ந்த கவிஞர் அபூநுவாஸ். அவர் காலத்து நகைச்சுவை மன்னராகவே  கருதப்பட்டார்.


அவர் ஒருநாள் கலீபாஹாரூன் ரஷிது பாதுஷாவுடன் அமர்ந்து சாப்பிடும்போது ஆணத்தைக் கரண்டியால் எடுக்க ஆணத்தில் ஒரு துளி கலீபாவின் உடையில் தெறித்தது. உடனே கடுங்கோபங் கொண்ட ஹாரூன் ரuது, இவருக்கு ஆறுமாதசிறைத் தண்டனையை அறிவித்தார்.  இதைக் கேட்டஅபூநுவாஸ் ஆணக் கோப்பையை எடுத்து முழுவதையும் கவிழ்த்து கலீபாவின் உடையிலும் உடலிலும்படுமாறு ஊற்றிவிட்டார்.  இது கண்டு கலீபா மேலும்கோபம் அடைய, இவரோ அமைதியாக... “கலீபா அவர்களே! நான் இதைத் தங்களின்நன்மைக்காகவே செய்தேன்.  ஒரு துளி ஆணம் தெறித்ததற்காகஆறுமாதச் சிறைத் தண்டனை விதித்ததை மக்கள் கேள்விப்பட்டால் தங்களைக் கொடுங்கோலர் என்றுபேச தொடங்கி 

 

விடுவார்கள்.  அந்த அவப்பெயரிலிருந்து தங்களைக் காக்கவே இப்படிச்செய்தேன்” என்றார் வினயமாக! அதுகேட்டுக் கலீபா சிரித்துவிட்டார்.  சிரித்ததோடு மட்டுமல்லாமல் மன்னித்தும் அனுப்பிவிட்டார்!

அபூநுவாஸ் உயிரோடிருந்த போது வேடிக்கை செய்ததுபோல இறந்த பின்பும் வேடிக்கைகாட்டினார்.  எப்படித் தெரியுமா? சுவரின் மீது தன்காலைத் தூக்கி வைத்த வண்ணம் இறந்துவிட்டார். மக்கள் குளிப்பாட்டுவதற்கு முற்பட்டபோது மேலே தூக்கிக் கொண்டு கால்பாகத்தைக்கீழே அமுக்கிச் சமப்படுத்தினால் தலைப்பக்கம் மேலே சென்றது.  தலைப்பக்கத்தைக் கீழே அமுக்கிச் சமப்படுத்தினால்கால் பக்கம் மேலே சென்றது.  இதைக் கண்ட மக்கள்கவலைப்படுவதற்கு பதிலாக சிரித்துத் தீர்த்தார்கள்.

இதாவது பரவாயில்லை.  இறந்துமண்ணறையில் வைத்த பின்னும் இவரது நகைச்சுவை உணர்வு மறையவில் லையாம். அபூநுவாçஸ்க் கனவில் கண்ட ஒருவர்.  தங்களிடம் கப்ரில்முன்கர் நகீர் வந்திருப்பார்களே! எப்படி பதில் கூறினீர்கள்?  என்று கேட்டார்.  அதற்கு இவர்.... ஆமாம்..... முன்கர் நகீர் என இருவானவர்கள் வந்து நின்றபோது தாங்கள் யார்? என்று அவர்களிடம் கேட்டேன்.  அதற்கு அவர்கள்.  நாங்கள் தாம் முன்கர்  நகீர் என்று பதில் சொன்னார்கள்.அப்படியானால் சற்றுமுன் இருவர் வந்து உங்கள் இறைவன் யார்? உங்கள் மார்க்கம்என்ன?  உங்கள் நபி யார்?என்றெல்லாம் கேள்வி கேட்டார்களே அவர்கள் யார்? என்று கேட்டேன்.  அது கேட்டு குழம்பிப்போனவானவர்கள் இறைவனிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.  அதுகேட்டுச் சிரித்த இறைவன் நீங்கள் அவரிடம் கேட்க வேண்டியகேள்விகளை யயல்லாம் அவரே கூறி அதற்கான பதிலையும் அவரே கூறிவிட்டாரே! வேறு என்ன அவரிடம்கேட்கவேண்டியுள்ளது.  நீங்கள் வேறு வேலையைப்பாருங்கள்!  என்று இறைவன் சொல்லிவிட்டானாம்.  இவ்வாறு அபூநுவாஸ் கூறி மறைந்து விட்டாராம்.             


 தகவல்: எஸ். எச்.எம்