ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Apr2012 »  எங்கே போகிறோம்?


எங்கே போகிறோம்?


 

தனிமனித ஒழுக்க மாண்புகளே அவர் சார்ந்த சமுதாயத்திற்கு மதிப்பை- மரியாதையைக் கொண்டுவந்து சேர்க்கிறது.


அப்துல் கலாமை யாராவது பாராட்டினால் நாம் நம் காலரைத்தூக்கிவிட்டுக் கொள்கிறோம். ஏ.ஆர். ரஹ்மானைப் புகழும்போது எமக்கே வந்த புகழ்போல பூரித்துப்போகிறோம். பத்ம  விருது - மாநில அரசின் விருதுகள்அறிவிக்கப்பட்டால் முஸ்லிம் பெயர் அதில் இருக்கிறதா என ஆவலோடு நோட்டமிடுகிறோம்.  அதே சமயம்மலேஷியாவிலிருந்து தங்கம் கடத்திவந்தவர் என்ற செய்தியில்.... வங்கிக் கொள்ளைச் சம்பவம் என்ற செய்தியில்....வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றினார் என்ற செய்தியில்.... இலஞ்சம் வாங்கி கைதான செய்தியில்....ஆசிரியையைக் கொன்ற செய்தியில்.... குடித்துவிட்டு கலாட்டா என்ற செய்தியில்.... இவற்றிலெல்லாம் முஸ்லிம் பெயர் வந்தால் நாணிக் குறுகிப் போகிறோம்.


ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் அவர் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதியாகத்தான்கருதப்படுகிறார்.


சமீப காலத்தில் நன்மைகளை விட தீமை சார்ந்தே முஸ்லிம்களின் பெயர்கள் பத்திரிகைகளில் வரும்போது நாம் எங்கே போகிறாம்?  எனசமுதாயம் சிந்திக்க வேண்டியுள்ளது.  ஒழுக்கம்  பண்பாட்டின் வடிவமாக சித்தரிக்கப்பட்ட முஸ்லிமின் முகம் இன்று சிதைந்து போயுள்ளது.


பெங்களூரூவில் பெண் குழந்தை பிறந்தது என்பதற்காக அந்தக் குழந்தையை கொடூரமாகத்  தாக்கி சிகரெட்டால் சுட்டு சித்திரவதைசெய்து கொன்ற பெயர்  முஸ்லிமுடையது என்பதைக்காணும்போது அதிர்ச்சியில் உறைந்து போகிறோம்.


இவையயல்லாம் சமூகத்தில் நிறைய சீர்த்திருத்தமும் - சேவை செய்ய வேண்டியதேவையும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. பள்ளிவாசல் - மதரஸா - வக்பு - வணக்கம்- அமல் - என்று மட்டும் சுற்றிக் கொண்டிருக்காமல் சமூகத்தின் அவல நிலைகளையும் ஊடுருவிப்பார்த்து களைவதற்கு வழிகாண வேண்டும்.


இல்லையயன்றால் - அமைதியாக நாமெல்லாம் தொழுது கொண்டிருக்கும் நேரத்தில், முஸ்லிம் பெயர்தாங்கிய ஒருவர் குடித்து விட்டு சாலையோரத்தில் கலாட்டா செய்து கொண்டிருப்பார்.  

 

 

எமதுயிர் போன்றது  எம் தரீக்கா. இதன் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும் இஜ்மாஉம் கியாஸுமாகும்.  இவ்வாறெனின், நமக்குப் பொருந்தாச் செயல்களிலிருந்துநீங்கலும் பொருத்தமுடையனவற்றை மேற்கூறப்பட்ட நான்கின் அடிப்படையில் ஏற்று நடத்தலும்எம் கொள்கையாகும்.  நல்லதோர் உண்மையான சமுதாயம்,திருத்தமுடைய சமுதாயம், சத்தியத்தின் பால் நடக்கும்சமுதாயம் நம்மில் உருவாக வேண்டும்.  உண்மையைக்காட்டி அறியாதாரைத் திருத்தல் வேண்டும்.  இவையயல்லாம்நம் விருப்பங்களாகும்.

 

குத்புஸ்ஸமான் ­ம்ஸுல் வுஜுத் ஜமாலிய்யாஅஸ்ஸையித் கலீல் அவ்ன்  மெளலானா அல்ஹஸனிய்யுல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்